ஜவுளி கடை உரிமையாளர் மீது இரும்பு கம்பியால் சரமாரி தாக்குதல்

சிலர் அவரை இரும்பு கம்பியால் தாக்கினர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பாண்டியன்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பாண்டியன்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரே மாநகராட்சி வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பாண்டியன் என்பவர் ரெடிமேடு ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

இவர் அந்த மாநகராட்சி வணிக வளாகத்தில் வியாபாரிகள் சங்க பொருளாளராகவும் உள்ளார். சம்பவத்தன்று இரவு பாண்டியன் கடையை அடைத்து விட்டு கீழ்தளத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனத்தை எடுக்க வந்தார். அப்போது அங்கு வந்த சிலர் அவரை இரும்பு கம்பியால் தாக்கினர்.

இதில் பாண்டியன் மண்டை உடைந்தது. அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வணிக வளாகத்தில் மது அருந்துவதை தட்டிக்கேட்டது தொடர்பான தகராறில் அவரை தாக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து பாண்டியன் தஞ்சை நகர கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com