search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவினாசி"

    • அரசு பஸ்சும், தனியார் பஸ்சும் ஒருவரை ஒருவர் முந்தி பயணிகளை ஏற்றுவதற்கு போட்டி போட்டுள்ளனர்.
    • 10 கிலோ மீட்டர் தூரம் ரோட்டை வழி மறித்து கொண்டு சென்றுள்ளது.

    அவினாசி :

    திருப்பூர் பழைய பஸ்டாண்டில் இன்று காலை 9 மணியளவில் அரசு பஸ்சும், தனியாருக்கு சொந்தமான பஸ்சும் பயணிகளை ஏற்றிக்கொண்டு அவினாசி நோக்கி கிளம்பியுள்ளது.

    அப்போது இரண்டு பஸ்சுகளும் ஒருவரை ஒருவர் முந்தி பயணிகளை ஏற்றுவதற்கு போட்டி போட்டுள்ளனர். இதில் அரசு பஸ்சை தனியார் பஸ் முந்தி செல்ல விடாமல் மோதுவது போல வந்துள்ளது. 10 கிலோ மீட்டர் தூரம் ரோட்டை வழி மறித்து கொண்டு சென்றுள்ளது. இதனையடுத்து அரசு பஸ் டிரைவர் முந்தி செல்ல முயற்சி செய்தனர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அரசு பேருந்து டிரைவர் அவினாசி போலீஸ் நிலையத்தில் பஸ்சை நிறுத்தி தனியார் பஸ் டிரைவர் மீது புகார் தெரித்தார்.

    இரண்டு பேரிடமும் விசாரணை மேற்கொண்ட போலீசார் தனியார் பஸ் டிரைவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    • நடராஜன் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவினாசி

    அவினாசியை அடுத்துள்ள நடுவச்சேரியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 68). இவர் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். பல வருடங்களாக மனைவியை பிரிந்து தனித்து வாழ்ந்துவந்தார். இந்த நிலையில் இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • குடும்பத்தகராறு, கடன் தொல்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • மோட்டார் சைக்கிளில் செல்வோர் சாலை விபத்தில் சிக்கி பலியாவது அதிகரிக்கிறது.

    அவிநாசி :

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி காவல் நிலைய எல்லைக்குட்பட்டு150க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரப்பகுதி உள்ளது.சமீப நாட்களாக குடும்பத்தகராறு, கடன் தொல்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.

    கோவை- சேலம் நெடுஞ்சாலையில் அவிநாசி அமைந்துள்ள நிலையில் அடிக்கடி சாலை விபத்துகளும் ஏற்படுகிறது.குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் சாலை விபத்தில் சிக்கி பலியாவது அதிகரிக்கிறது. நகரின் உட்புற சாலைகளில் கூட அடிக்கடி விபத்து நேரிடுகிறது. இதை தவிர்க்க, ஆங்காங்கே வேகத்தடை கூட அமைக்கப்பட்டது. இதனால் அவிநாசி போலீசார் சார்பில் மங்கலம் ரோட்டில் உள்ள ஆகாசராயர் கோவிலில் கிடா வெட்டி, சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    இது குறித்து போலீசார் கூறுகையில், விபத்து, தற்கொலை உள்ளிட்டவை தினமும் நடக்கிறது. தினமும் ஒரு உடலாவது பிரேத பரிசோதனைக்கு வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற அசம்பாவிதம் நடக்கக்கூடாது என்ற வேண்டுதலை முன்வைத்து, ராயர் கோவிலில் கிடா வெட்டி பூஜை செய்தோம் என்றனர்.

    • 8 பெயர்கள் விடுபட்டுள்ளதாக அப்பகுதி வாக்காளர்கள் அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • உரிய ஆவணம் இருந்தும் இப்போது மட்டும் எங்களை வாக்களிக்க அனுமதிக்காததை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டத்தில் கைரேகை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் முதியோர் உள்ளிட்ட மாற்றுதிறனாளிகளுக்கு கைரேகை பதிவாகாமல் ரேஷன் பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே அவர்கள் பயன்பெறும் வகையில் அவினாசி தாலுகா அலுவலகத்தில் ஆதார் பதிவில் கைரேகை புதுப்பித்தல் சிறப்பு முகாம் நடந்தது. இதில் முதியோர் உள்ளிட்டநூற்றுக்கு மேற்பட்டவர்கள் காலை 8 மணி முதல் ஆதார் சேவை மையத்தில் காத்திருந்தனர். 10.30 மணி அளவில அலுவலர் வந்து 60 நபர்களுக்கு மட்டுமே இன்று பதிவு செய்யப்படும் என்றதால் பயனாளிகள் அனைவரும் நாங்கள் காலை 8 மணிமுதல் இதற்காக காத்து நிற்கிறோம். அனைவருக்கும் இன்றே பதிவு செய்ய வேண்டும் என்று அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஆதார் பதிவு அலுவலர் கூறுகையில் ,ஒரு நபருக்கு முழுமையாக பதிவு செய்வதற்கு 20 நிமிடங்கள் ஆகிறது.

    இரவு 8 மணி வரை எவ்வளவு பேருக்கு பதிவு செய்ய முடியுமோ அதை செய்யஉள்ளதாக கூறினார்.

    • காட்டுப்பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மரத்தில் தூக்குபோட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.
    • மகன் உயிரிழந்த சோகத்தில் தந்தை தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    அவினாசி :

    அவினாசியை அடுத்து பழங்கரையில் உள்ள ஒரு பனியன் கம்பெனியின் பின்புறம் காட்டுப்பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மரத்தில் தூக்குபோட்ட நிலையில் பிணமாக தொங்கினார். புளுசர்ட், பேன்ட் அணிந்திருந்த அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அவினாசியை அடுத்துகந்தம்பாளையத்தை சேர்ந்தவர் சித்ரா (52) .ரியல் எஸ்டேட் தொழில் பார்த்து வந்தார். இந்த நிலையில் இவரது மகன் பிரட்ரிக் ஜோஸ்வா (24) என்பவர் உடல்நலம் சரியில்லாமல் உயிரிழந்தார்.

    மகன் உயிரிழந்த சோகத்தில் இருந்த சித்ரா நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். அவினாசி போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • செப்டம்பர் மாதம் அறுவடை துவங்கவுள்ள நிலையில் பல இடங்களில் விளைச்சல் துவங்கியுள்ளது.
    • பருவமழையை நம்பி தான் தோட்டத்தில் களையெடுப்பது, உரமிடுவது போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.

    அவிநாசி :

    அவிநாசி, சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில், பெருமளவில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். செப்டம்பர் மாதம் அறுவடை துவங்கவுள்ள நிலையில் பல இடங்களில் விளைச்சல் துவங்கியுள்ளது.பெரும்பாலும் மானாவாரி நிலத்தில் தான் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளப்படும் என்ற நிலையில், பருவமழையை நம்பி தான் தோட்டத்தில் களையெடுப்பது, உரமிடுவது போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.

    தற்போது பரவலாக சில இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில், விவசாயிகள் பலர் தங்கள் தோட்டங்களில் களையெடுக்க துவங்கியுள்ளனர். பல இடங்களில் நிலக்கடலை செடிகளில் பூ பூக்க துவங்கியுள்ளது.

    இது குறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது:-

    மழையை நம்பியே நிலக்கடலை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். சந்தையில் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் போன்றவற்றின் விலை, வழக்கத்தை காட்டிலும் உயர்ந்திருப்பதால் தரமான முறையில் விளைவிக்கப்படும் நிலக்கடலை மூலம் தயாரிக்கப்படும் நிலக்கடலை எண்ணெய்க்கு தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன்மூலம், நிலக்கடலையின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, கணிக்கப்படுகிறது. எனவே சரியான சமயத்தில் மழை பெய்து விவசாயிகளுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அன்னமாா் கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த உண்டியலில் பணம் திருடப்பட்டது.
    • கொள்ளையர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு ஆயுதத்தால் தாக்கியதில் காவலா் அருள்குமாா் பலத்த காயமடைந்தாா்.

    அவிநாசி : 

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி முத்துசெட்டிபாளையம் பகுதியில் உள்ள அன்னமாா் கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த உண்டியலில் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் அவிநாசி போலீஸ் நிலையத்தில் இணைப்பு காவலராக பணியாற்றும் திருப்பூா் ஆயுதப் படை 2ம் நிலை காவலரான அருள்குமாா் (27) என்பவா் புதன்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவிநாசி முத்துசெட்டிபாளையம் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பதிவு எண் இல்லாமல் சந்தேகப்படும்படியாக அதிவேகமாக சென்ற 3 நபா்களை பிடிக்கச் சென்றபோது, அவா்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு ஆயுதத்தால் தாக்கியதில் காவலா் அருள்குமாா் பலத்த காயமடைந்தாா்.

    உடனிருந்தவா்கள் பிடிக்க முயன்றும் 3 நபா்களும் தப்பிச்சென்றனா். இதையடுத்து அருள்குமாா் திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அவிநாசி முத்துச்செட்டிபாளையத்தில் உள்ள அன்னமாா் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபா்கள், ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
    • மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்து வருகிறார்.

    அவினாசி :

    கொரோனா நோயின் தாக்கமும் பரவலும் குறைந்திருந்த நிலையில், தற்போது கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.இந்த நிலையில் முன்னாள் சபாநாயகரும் அவிநாசி சட்டமன்ற தொகுதி உறுப்பினரான தனபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்த வந்த நிலையில், பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்து வருகிறேன். அனைவரும் முககவசம் அணிந்து இந்த பெருந்தொற்றில் பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.தற்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ராக்கியாபளையம் பகுதியில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

    • இந்த சிகரெட் இல்லை வேறு சிகரெட் கொடுங்கள் என கேட்டுள்ளாா்.
    • கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற மர்மநபர்

    அவிநாசி :

    அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் பெரியகருணைபாளையத்தைச் 2சோ்ந்த அமல்ராஜ் மனைவி அபிதாமேரி (வயது 24). இவா் சின்னக்கருணை பாளையத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். அபிதாமேரி கடையில் இருந்துள்ளாா்.

    அப்போது, அங்கு வந்த நபா் அபிதாமேரியிடம் சிகரெட் வாங்கிச் சென்றுள்ளாா். சிறிது நேரம் கழித்த வந்த நபா் இந்த சிகரெட் இல்லை வேறு சிகரெட் கொடுங்கள் என கேட்டுள்ளாா். அவா் திரும்பிய நேரத்தில், அவரது கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளாா்.

    இது குறித்து அவிநாசி காவல் நிலையத்தில் அபிதாமேரி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி மர்மநபரை வருகின்றனா்.

    • உயிரிழந்தவர்களின் உடலை எடுத்துச் செல்லக் கூடாது எனக் கூறி தடுப்புகள் வைத்து மறைத்தனர்.
    • ம்பவ இடத்திற்கு வந்த சேவூர் போலீசார் நீண்ட நேரம்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அவினாசி :

    அவினாசி அருகே லூர்துபுரம் பகுதியை சேர்ந்த, ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்கள், பொதுமக்கள் வழக்கமான வழித்தடத்தில் உடலை எடுத்துச்செல்ல முயன்றனர். அப்போது தனிநபர் சிலர் தங்களுக்கு சொந்தமான இடத்தில் உயிரிழந்தவர்களின் உடலை எடுத்துச் செல்லக் கூடாது எனக் கூறி தடுப்புகள் வைத்து மறைத்தனர்.

    இதனால் இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கூட்டத்தில் யாரோ கல்வீசியதில் மலையப்பன் (வயது 55) என்பவருக்கு முகத்தில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் அவினாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேவூர் போலீசார் நீண்ட நேரம்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் இரவு 9 மணியளவில் வழக்கமாக செல்லும் வழித் தடத்தில் உடலை எடுத்துச் சென்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக கல்லறையில் அடக்கம் செய்ய அரை கிலோ மீட்டர் தொலைவில் செல்லக் கூடிய இதே வழித்தடத்தில் தான் சென்று வருகிறோம்.

    இதை விட்டு, மாற்றுத் தடத்தில் சென்றால், 4 கிலோ மீட்டர் தொலைவு சென்று தான் அடக்கம் செய்ய முடியும். ஆனால் தற்போது வழக்கமான வழியில் செல்லக் கூடாது என தடுக்கின்றனர். ஆகவே அவர்கள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்த சம்பவத்தால் சேவூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • உயர் அழுத்த மின்பாதைகளில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது.
    • திம்மநாயக்கன்புதூர், செட்டிபுதூர், தண்டுக்காரன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    திருப்–பூர்,

    தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் விஜய ஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அவினாசி கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துணை மின்நிலையங்களில் உள்ள உயர் அழுத்த மின்பாதைகளில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை பரமசிவம்பாளையம், பச்சாம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், ஜெ.ஜெ.நகர், கந்தம்பாளையம், நாதம்பாளையம், புள்ளே கவுண்டம்பாளையம், வினாயகா ரிச் லேண்ட், அபிராமி கார்டன், இந்திராநகர், ஏ.எஸ்.காலனி, காவிலிப்பாளையம்புதூர், அப்போலோ அகரம், மொண்டிபாளையம், ஆலத்தூர், தொட்டிபாளையம், திம்மநாயக்கன்புதூர், செட்டிபுதூர், தண்டுக்காரன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

     இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மழைக்கு இடிந்து விழும் கட்டிடங்களை உரிமை கொண்டாட கூட யாரும் முன்வருவதில்லை.
    அவிநாசி:

    அவிநாசி பேரூராட்சி பகுதியில் பாழடைந்த நிலையில் உள்ள பல பழைய கட்டிடங்கள் மழைக்காலங்களில் இடிந்து விழுகின்றன. அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் அவிநாசி கஸ்தூரிபா வீதி, அண்ணா வீதி உள்ளிட்ட இடங்களில் பயனற்று பாழடைந்த நிலையில் இருக்கும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. 

    மண் சுவற்றால் கட்டப்பட்டுள்ள அந்த கட்டிடங்கள் மழைநீரில் ஊறி, ஸ்திரத்தன்மை இழந்து எந்நேரமும் விழும் நிலையில் உள்ளது. இதனால் அக்கட்டிடங்களின் சுவர் இடிந்து விழும் போது அக்கம் பக்கம் வசிப்போர், அருகில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் உள்ளிட்ட உடமைகள் சேதமடைகின்றன. 

    ‘மழை நீடிக்கும்‘ என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் பேரிடர் தவிர்ப்பு நடவடிக்கையில் கவனமாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அவிநாசி பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், பேரூராட்சிக்குட்பட்ட பல இடங்களில் இதுபோன்ற பாழடைந்த கட்டிடங்கள் அதிகம் உள்ளன. 

    அவை சொத்து பிரச்சினை உள்ளிட்ட பல காரணங்களால் பயனற்று கிடக்கின்றன. மழைக்கு இடிந்து விழும் கட்டிடங்களை உரிமை கொண்டாட கூட யாரும் முன்வருவதில்லை. எனவே மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் அத்தகைய கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
    ×