search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அவினாசி பகுதியில் மழையால் பழைய கட்டிடங்கள் இடியும் அபாயம்

    மழைக்கு இடிந்து விழும் கட்டிடங்களை உரிமை கொண்டாட கூட யாரும் முன்வருவதில்லை.
    அவிநாசி:

    அவிநாசி பேரூராட்சி பகுதியில் பாழடைந்த நிலையில் உள்ள பல பழைய கட்டிடங்கள் மழைக்காலங்களில் இடிந்து விழுகின்றன. அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் அவிநாசி கஸ்தூரிபா வீதி, அண்ணா வீதி உள்ளிட்ட இடங்களில் பயனற்று பாழடைந்த நிலையில் இருக்கும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. 

    மண் சுவற்றால் கட்டப்பட்டுள்ள அந்த கட்டிடங்கள் மழைநீரில் ஊறி, ஸ்திரத்தன்மை இழந்து எந்நேரமும் விழும் நிலையில் உள்ளது. இதனால் அக்கட்டிடங்களின் சுவர் இடிந்து விழும் போது அக்கம் பக்கம் வசிப்போர், அருகில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் உள்ளிட்ட உடமைகள் சேதமடைகின்றன. 

    ‘மழை நீடிக்கும்‘ என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் பேரிடர் தவிர்ப்பு நடவடிக்கையில் கவனமாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அவிநாசி பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், பேரூராட்சிக்குட்பட்ட பல இடங்களில் இதுபோன்ற பாழடைந்த கட்டிடங்கள் அதிகம் உள்ளன. 

    அவை சொத்து பிரச்சினை உள்ளிட்ட பல காரணங்களால் பயனற்று கிடக்கின்றன. மழைக்கு இடிந்து விழும் கட்டிடங்களை உரிமை கொண்டாட கூட யாரும் முன்வருவதில்லை. எனவே மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் அத்தகைய கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
    Next Story
    ×