search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர்"

    • ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்து ரெயிலை நிறுத்தியுள்ளார்.
    • முதியவருக்கு தலை, உடலில் காயம் ஏற்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஜெய்ப்பூரில் இருந்து கோவை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. பின்னர் இந்த ரெயில் திருப்பூரில் இருந்து புறப்பட்டது. அப்போது, திருப்பூர் கல்லம்பாளையம் அருகே ரெயில் சென்றபோது தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர் ரெயில் அருகில் வருவதைப் பார்த்து உடனடியாக தண்டவாளத்தில் படுத்தார்.

    இதை பார்த்து சுதாரித்துக்கொண்ட ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்து ரெயிலை நிறுத்தியுள்ளார். இருப்பினும், ரெயில் என்ஜின் அந்த முதியவரைத்தாண்டி சென்று நின்றது. அந்த முதியவர் ரெயில் என்ஜினுக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.

    பின்னர், உடனடியாக தண்டவாளத்தில் இறங்கி வந்து பார்த்த என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் ரெயிலை பின்னோக்கி இயக்கி அந்த முதியவரை மீட்டனர். இதில் அந்த முதியவருக்கு தலை, உடலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் உதவியோடு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு முதியவரை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விசாரணையில் அவர் திருப்பூர் ராக்கியாபாளையத்தை சேர்ந்த பாலையா (வயது 67) என்பது தெரியவந்தது. தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் வந்ததால் அவர் தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பி உள்ளார். உடனடியாக ரெயிலை நிறுத்திய என்ஜின் டிரைவரை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள். இந்த சம்பவத்தால் ரெயில் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    • 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
    • சில பயனர்கள், முதியவரின் முயற்சியை பாராட்டி உள்ளனர்.

    சமூக வலைதளங்களில் பரவும் சில வீடியோக்கள் பார்வையாளர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். அந்த வகையில் மும்பையில் பஸ் டிரைவர்களுக்கு முதியவர் ஒருவர் பிஸ்கெட் வினியோகம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

    மினல் படேல் என்பவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், மும்பை ஹியூஸ் சாலையில் செல்லும் பஸ்களை முதியவர் ஒருவர் தடுத்து நிறுத்துகிறார். பின்னர் அவர் டிரைவர்களுக்கு பிஸ்கெட் பாக்கெட்களை வழங்குகிறார். அதனை டிரைவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ளும் காட்சிகள் உள்ளது.

    20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் சில பயனர்கள், முதியவரின் முயற்சியை பாராட்டி உள்ளனர்.



    • உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.
    • முதியவரின் இதயம் ஸ்ரீகாகுளம் ஜேம்ஸ் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் வனஸ்தலிபுரத்தை சேர்ந்த 11 வயது சிறுமி இதய நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு மாற்று இதயம் பொருத்தினால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இதய மையத்தில் இதயம் தானம் கேட்டு பதிவு செய்தனர். இந்த நிலையில் ஸ்ரீகா குளத்தை சேர்ந்த 50 வயது முதியவர் ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.

    இதனையடுத்து முதியவரின் இதயத்தை சிறுமிக்கு பொருத்த ஏற்பாடு செய்தனர். இதற்காக முதியவரின் இதயம் ஸ்ரீகாகுளம் ஜேம்ஸ் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.

    அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விசாகப்பட்டினத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சிறப்பு விமான மூலம் திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இதய மைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு இதயமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதன் மூலம் 11 வயது சிறுமி உயிர் பிழைத்தார்.

    இது இந்த ஆஸ்பத்திரியில் 10-வது வெற்றிகரமான இதய மாற்று அறுவை சிகிச்சை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • 8-ந்தேதி டர்பனை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
    • ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜாக்கமங்கலம், நவ.21-

    ராஜாக்கமங்கலம் அருகே பரமன்விளையை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (வயது 65). இவருக்கு மதுப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 8-ந்தேதி டர்பனை உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீனிவாசனை ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை ஸ்ரீனிவாசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    சிதம்பரம் கொத்த ட்டையில் வசிப்பவர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த வெங்கட்ராவ் (வயது 65). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் போர்மேனாக பணி செய்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக பணி செய்து வந்தார்.இவர் நேற்று இரவு பணி முடித்து வீடு திரும்பினார். அப்போது சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கட்ராவ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த பரங்கிப்பேட்டை போலீசார், அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் வந்த போது திடீரென சையது நூர் ஜமால் மாயமானார்.
    • போலீசார் மாயமான சையது நூர் ஜமாலின் புகைப்படத்தை வாட்ஸ் அப் குழுக்களில் அனுப்பி விசாரித்து வந்தனர்.

    பெரம்பூர்:

    மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் சையது நூர்ஜமால்(56). இவர் கடந்த 14-ந்தேதி மருத்துவ சிகிச்சைக்காக குடும்பத்துடன் சென்னை வந்து இருந்தார். சென்ட்ரலில் ஆட்டோ ஏறுவதற்காக வால்டாக்ஸ் சாலையில் வந்த போது திடீரென சையது நூர் ஜமால் மாயமானார். அவரை குடும்பத்தினர் தேடிவந்தனர்.

    இதுதொடர்பாக பூக்கடை போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாயமான சையது நூர் ஜமாலின் புகைப்படத்தை வாட்ஸ் அப் குழுக்களில் அனுப்பி விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையே கடந்த 15-ந்தேதி புளியந்தோப்பு பகுதியில் சாலையோரம் முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை பேசின்பாலம் தலைமைக் காவலர் சரத்குமார் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அவர் மயக்க நிலையில் இருந்ததால் அவரை பற்றி மேலும் விவரம் தெரியாமல் இருந்தது.

    சரத்குமார்

    சரத்குமார்


    இதற்கிடையே போலீசாரின் வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்ட மாயமான சையது நூர் ஜமால் புகைப்படத்தை பார்த்ததும் போலீஸ்காரர் சரத்குமார், அவர் தன்னால் புளியந்தோப்பில் சாலையோரம் மீட்கப்பட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர் என்பது தெரிந்தது.

    இதுகுறித்து பூக்கடை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சையது நூர் ஜமாலை அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    சரியான நேரத்தில் மாயமான சையது நூர் ஜமாலை அவரது குடும்பத்தினருடன் ஒப்படைக்க உதவிய போலீஸ்காரர் சரத்குமாரை உயர்அ திகாரிகள் பாராட்டினர்.

    • 1½ மாதங்கள் ஆகியும் சுப்ரமணியன் வீட்டிற்கு திரும்பிவரவில்லை.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல் :

    இரணியல் அருகே உள்ள பறையன்விளையை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 74). மாற்றுத்திறனாளி. இவரது சகோதரி செல்வி, குளச்சல் கீழ்நிரவுவிளையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சுப்ரமணியனுக்கு திருமணம் ஆகாததால் தினமும் காலை அவருக்கு சகோதரி செல்வி உணவு கொண்டு கொடுப்பது வழக்கம்.

    சம்பவத்தன்று உணவு கொண்டு வந்தபோது சுப்ரமணியனை காணவில்லை. சுப்ரமணியன் அவ்வப்போது காணாமல் சென்று விட்டு பின்னர் சில நாட்களில் திரும்பி வந்து விடுவாராம். இதனால் வழக்கம் போல திரும்பி வருவார் என செல்வி இருந்துள்ளார். ஆனால் 1½ மாதங்கள் ஆகியும் சுப்ரமணியன் வீட்டிற்கு திரும்பிவரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த செல்வி பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து செல்வி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ் நிறுத்தத்தில் சுமார் 60 முதல் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் படுத்த படுக்கையாக கிடந்தார்.
    • இட்லி மற்றும் தண்ணீர் பாட்டில் போன்றவை வாங்கிக் கொண்டு வந்து அந்த பெரியவரிடம் கொடுத்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் சுமார் 60 முதல் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் படுத்த படுக்கையாக கிடந்தார். இதை கண்ட பயணிகள் ஏதோ மது அருந்திவிட்டு தூங்குவதாக நினைத்தனர். இதனால் பஸ் நிறுத்த இருக்கையில் அமர்வதற்கு கூட அஞ்சினர். இந்த நிலையில் திடீரென ஒரு கைக்குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் மனிதாபிமானத்துடன் அந்த பெரியவர் மீது பரிவு காட்டினார். இதையடுத்து அந்த பெண் அங்குள்ள ஓட்டலுக்கு சென்று இட்லி மற்றும் தண்ணீர் பாட்டில் போன்றவை வாங்கிக் கொண்டு வந்து அந்த பெரியவரிடம் கொடுத்தார். அந்த பெரியவரால் எழுந்து, அமர்ந்து உட்கார முடியாத சூழ்நிலையில் படுத்த படுக்கையாக கிடப்பதால் அந்தப் பெண் அந்த பெரியவர் கையில் கொடுத்தார். அதை அவர் படுத்த நிலையிலேயே சிறிது சிறிதாக இட்லியை சாப்பிட தொடங்கினார். இந்த சம்பவத்தை அப்பகுதியில் உள்ள பயணிகள் கண்டு மெய் சிலிர்த்தனர். பொதுவாக யாராவது அனாதையாக சாலையோரம் கிடந்தால் அவரை யாரும் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. இப்படிப்பட்ட இந்த சூழ்நிலையில் இந்த பெண் நடந்து கொண்ட விதம் மனிதாபிமானத்தை உண்டாக்கியது. தற்போது இந்த பெரியவர் யார்?, எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. சமூக அறக்கட்டளை நிர்வாகத்தினர் உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையை சேர்ந்தவர் அற்புதராஜ் (வயது 64), கூலி தொழிலாளி
    • இவருக்கு கண் நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார்

    நாகர்கோவில் : வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையை சேர்ந்தவர் அற்புதராஜ் (வயது 64), கூலி தொழிலாளி. இவருக்கு கண் நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. எனினும் சரியாக அதிலிருந்து குணமாகாத தால் மனம் உடைந்த அற்புதராஜ், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருகில் உள்ள பூவரசு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண் டார்.

    இதனை பார்த்த உறவினர்கள் உடனடியாக வெள்ளிச்சந்தை போலீசா ருக்கு தகவல் கொடுத்தனர். இவருக்கு கோமளா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அதில் ஒரு மக னுக்கு திருமணம் ஆகி விட்டது. சம்பவம் குறித்து கோமளா கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிச் சந்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து அற்புதராஜின் உடலை கைப் பற்றி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    • இவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. இதனால் மன வருத்தத்துடன் இருந்து வந்தார்.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னல் கம்பியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தக்கலை:

    தக்கலை அருகே பரைக்கோடு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது52), கூலி தொழிலாளி. இவர் சுமார் ஆறு மாதம் முன்பு பாக்கு மரத்தில் ஏறியதில் தவறி கீழே விழுந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. இதனால் மன வருத்தத்துடன் இருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னல் கம்பியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவில் மனைவி ரவிக்கு சாப்பாடு கொண்டு கொடுக்க சென்று பார்த்த போது கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் இவரை தக்கலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய கொண்டு சேர்த்தனர். பின்னர் கலா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாடு மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பினார்.
    • கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் காம்பவுண்ட் சுவர் மீது மோதியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை அன்னை சாவித்திரி நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 59).

    சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து வெளியே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    தஞ்சை மூலிகைப் பண்ணை ரோட்டில் வந்த போது சாலை யில் மாடு ஒன்று குறுக்கே புகுந்தது.

    மாடு மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பினார்.

    இதில் கட்டு ப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் காம்பவுண்ட் சுவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்ச்செல்வன் பலத்த காயமடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே தமிழ்ச்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை போக்குவரத்து விசாரணை பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்வி கற்பதற்கு திருமணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை.
    • வாழ்க்கையை ஓர் அர்த்தமுள்ளதாக கடந்து செல்லவேண்டும். வீணாக்கக்கூடாது.

    சென்னை:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள கதிராமங்கலம் கிராமத்தை சேர்ந்த 82 வயது முதியவர் குருமூர்த்தி. இவர் பாலிடெக்னிக் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் கல்வியின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். அதன் காரணமாக இவர் பணியில் இருக்கும்போதே 1964-ம் ஆண்டு முதல் முதல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் பகுதிநேர அஞ்சல்வழி பட்டயப் படிப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகள் படித்து வருகிறார்.

    இதுவரை பி.ஏ., எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி., என 24 பட்டங்களை பெற்றுள்ளார். அதாவது பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு 12 பட்டயப் படிப்புகளும், பணி ஓய்வுக்கு பிறகு 12 பட்டப்ப டிப்புகளும் முடித்துள்ளார். கல்வி கற்பதற்கு திருமணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை.

    இந்நிலையில் குருமூர்த்தி தனது 25-வது பட்டப்படி ப்பாக எம்.ஏ., போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற படிப்பை படிப்பதற்கு முடிவு செய்தார். அதற்காக மயிலாடுதுறையில் புதிதாக திறக்கப்பட்ட தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்திருந்தார். பல்கலைக்கழகத்திலிருந்து அதற்கான பாடப்புத்தகங்களை பெறுவதற்கு இளைஞரை போல உற்சாகத்துடன் அவர் வந்தார். அவரை பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி பாராட்டி கவுரவித்தார்.

    இதுபற்றி முதியவர் குருமூர்த்தி கூறியதாவது:-

    படிப்பதற்காக நான் செலவு செய்யும் தொகையை செலவாக நினைத்ததே இல்லை. எனது அறிவை வளர்த்து கொள்ளும் விதமாகவே இந்த படிப்புகள் அமைந்துள்ளன. நேரம் தவறாமை மற்றும் திட்டமிடல் ஆகியவை எனது படிப்புக்கு மிகவும் உபயோகமாக இருந்தன. வாட்ஸ் அப், பேஸ்புக்கில் மூழ்கி இன்றைய இளைய தலைமுறையினர் நேரத்தை வீணடித்து வருகின்றனர்.

    வாழ்க்கையை ஓர் அர்த்தமுள்ளதாக கடந்து செல்லவேண்டும். வீணாக்கக்கூடாது. இந்தப் படிப்புகள் என்னை உற்சாக மூட்டி என்றும் இளைஞனாக, மாணவனாக வைத்திருக்க உதவுகின்றன. எனவே இளைய தலை முறையினர் கல்வி கற்க அவர்களது நேரத்தை செலவிட வேண்டும். அப்படி பெற்ற கல்வியை மற்றவர்களுக்கும் உதவிட செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×