search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elderly Man"

    • கால் வலி தாங்க முடியாமல் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டதாக கூறினார்.
    • சிகிச்சை பலனின்றி அய்யாவு பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் இரட்டிபாளையம் மேல் வீதியை சேர்ந்தவர் அய்யாவு (55). இவர் கடந்த 5 வருடமாக முட்டி வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று ஆடு, மாடுகளை மேய்த்து விட்டு வீட்டுக்கு வந்தபோது வாந்தி எடுத்துள்ளார்.

    இது குறித்து அவரது மனைவி கேட்டபோது கால் வலி தாங்க முடியாமல் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டதாக கூறினார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அய்யாவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மொபட்டும், இரு சக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக மோதி கொண்டது.
    • இதில் தலையில் அடிப்பட்டு நஞ்சப்பன் படுகாயம் அடைந்தார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள அனியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நஞ்சப்பன் (60).

    இவர் தனது இரு சக்கர வாகனத்தில் பு.புளியம்பட்டி- சத்தியமங்கலம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அந்த வழியாக எதிரே ஒரு மொபட் வந்தது. அப்போது மொபட்டும், இரு சக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக மோதி கொண்டது.

    இதில் தலையில் அடிப்பட்டு நஞ்சப்பன் படுகாயம் அடைந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அன்னூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருந்து கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்தி சல்பாஸ் மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார்.
    • இது குறித்து ேகாபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (62). இவரது மனைவி வெங்கட்டம்மாள். இவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை.

    இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    இதனால் மனமுடைந்த கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி செத்து போய்விடலாம் என புலம்பி கொண்டே இருந்துள்ளார். இதனால் அவரது மனைவி வெங்கட்டம்மாள் அவருக்கு ஆறுதல் கூறிவந்துள்ளார்.

    சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவெடுத்த கிருஷ்ணமூர்த்தி சல்பாஸ் மாத்திரை (விஷ மாத்திரை) தின்று தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ேகாபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தம்பி மகன் இறந்த துக்கம் தாளாமல் மோகன்குமார் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.
    • இது குறித்து கோபி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்துள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் கங்காதரன் (52). இவரது சகோதரர் மோகன் குமார் (60). பெயிண்டிங் தொழிலாளி.

    கங்காதரனின் மகன் நவீன் கடந்த 4-ந் தேதி விபத்தில் உயிரிழந்தார். இதற்கான அவரது 16-ம் நாள் காரியம் நேற்று நடை பெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த மோகன்குமார் மிகுவும் துக்கத்துடன் காணப்பட்டார்.

    இந்த நிலையில், வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்ற மோகன்குமார் கோபி, குப்பைமேடு டாஸ்மாக் அருகே நேற்று மதியம் வாந்தி எடுத்த நிலையில் கிடந்துள்ளார்.

    அப்பகுதியினர் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசேதானை செய்து மோகன்குமார் ஏற்கனவே இறந்து விட்ட தாகத் தெரிவித்தனர்.

    தம்பி மகன் இறந்த துக்கம் தாளாமல் மோகன்குமார் மதுவில் விஷம்கலந்து குடித்து உயிரிழந்து விட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

    இது குறித்து, கோபி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மதுரை அருகே வாகனம் மோதி முதியவர் பலியானார்.
    • இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் சமயநல்லூரில் திண்டுக்கல்- திருமங்கலம் தேசிய 4 வழிச்சாலையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தார்.

    வெள்ளை சட்டையும், காவி வேட்டியும் அணிந்திருந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை.

    இது சம்பந்தமாக சமயநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி முத்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • குடும்பச் செலவுக்காக மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்றிருந்தனர். ஆனால் அதை திருப்பிச் செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்துள்ளனர்.
    • இந்த நிலையில் மூர்த்தி சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பவானிசாகர், கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (50). இவரது மனைவி சாந்தா. இருவரும், குடும்பச் செலவுக்காக மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்றிருந்தனர்.

    ஆனால் அதை திருப்பிச் செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்துள்ளனர். இந்த நிலையில் மூர்த்தி சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.

    அவரை மீட்டு, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தி உயிரிழந்தார்.

    இதுகுறித்து, பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தீ குச்சியானது தவறி மடியில் விழுந்ததில் வேட்டி, சட்டை ஆகியவை தீ பற்றிக்கொண்டது.
    • இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனியப்பன் பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    கவுந்தப்பாடி அய்யம்பா ளையம் ஆவராங்காட்டூரை சேர்ந்வர் பழனியப்பன் (60). உடல்நிலை பாதிக்க ப்பட்டதால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் ஓய்வில் இருந்தார்.

    சம்பவத்தன்று பழனியப்பன் தனது வீட்டில் சேரில் அமர்ந்து பீடி பற்ற வைப்பதற்காக தீ குச்சியை உரசி உள்ளார். அப்போது தீ குச்சியானது தவறி தனது மடியில் விழுந்ததில் வேட்டி, சட்டை ஆகியவை தீ பற்றிக்கொண்டது.

    இதில் பலத்த தீக்காய மடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனியப்பன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • மன வேதனையடைந்த அண்ணாமலை, சின்ன சேமூரில் தான் வசித்து வந்த வீட்டில் நேற்று விஷம் குடித்துவிட்டார்.
    • இதுகுறித்து மாலதி அளித்த புகாரின்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மாலதி (68). இவரது கணவர் அண்ணாமலை (69). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 25 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்த நிலையில், உடல் நலக் குறைவு ஏற்பட்டு வேலைக்கு செல்ல முடியாமலும், தன்னைப் பராமரிக்க யாரும் இல்லாததாலும் மன வேதனையடைந்த அண்ணாமலை, சின்ன சேமூரில் தான் வசித்து வந்த வீட்டில் நேற்று விஷம் குடித்துவிட்டார்.மயங்கிய நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால், சிகிச்சை பலனின்றி அண்ணாமலை பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து மாலதி அளித்த புகாரின்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பெருந்துறை அருகே மது போதையில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த செல்வம் நகரை சேர்ந்தவர் சகுந்தலா (51). இவர் தனது குடும்பத்தினருடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். இவரது தந்தை கிருஷ்ணசாமி (70).

    இவர் பெருந்துறை அருகே உள்ள மேற்கு ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்தார். கிருஷ்ணசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்த ன்று இரவு மது போதையில் கிருஷ்ணமூர்த்தி தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மாத்திரையை (விஷம்) சாப்பிட்டு விட்டு தனது மகள் சகுந்தலாவுக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார்.

    உடனடியாக சகுந்தலா தனது தம்பி வெங்கடாசலம் உதவியுடன் கிருஷ்ண சாமியை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் கிருஷ்ணசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில் முதியவர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
    • சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்டர் மீடியனில் கார் மோதி சாலையில் நடுவில் கவிழ்ந்தது.

    சேலம்:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 70). இவரது மனைவி பரிமளா (65). இவர்களது மருமகன் பாலு (45). இவர் சொந்த ஊரில் வீடு கட்டி வருகிறார். வீட்டிற்கு தேவையான கிராணைட் கற்களை கிருஷ்ணகிரியில் வாங்க முடிவு செய்தார்.

    இதையடுத்து இன்று அதிகாலை சொந்த ஊரில் இருந்து ஒரு காரில் 3 பேரும் கிருஷ்ணகிரிக்கு புறப்பட்டனர். அவர்களுடன் காண்டிராக்டர் தங்கவேல் என்பவரும் காரில் இருந்தார். காரை முருகனின் மருமகன் பாலு ஓட்டினார். இந்த கார் இன்று காலை 7 மணியளவில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சீலநாயக்கன்பட்டி அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென நிலை தடுமாறிய கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையின் சென்டர் மீடியனில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த முருகன் காயம் அடைந்து கதறினார். மேலும் காருக்குள் சிக்கிய மற்றவர்கள் கூச்சலிட்டனர்.

    இதனை பார்த்த அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்களை மீட்க முயன்றனர். மேலும் அன்னதானப்பட்டி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார் காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதில் முருகன் மட்டும் பலத்த காயமடைந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். இதையடுத்து சாலையில் கிடந்த காரை அப்புறப்படுத்திய அன்னதானப்பட்டி போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சீனாவில் சாலையை கடக்க தடுமாறிய முதியவரை போக்குவரத்து காவலர் தனது முதுகில் ஏற்றிக்கொண்டு சாலையை கடந்து சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #piggyback
    பீஜிங்:

    சீனாவின் சிக்குவான் மாகாணத்தில் உள்ள ஆறு வழிச்சாலையில் வயதான முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். இரண்டு ஊன்றுகோல்களின் உதவியால் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிக்னல் போடப்பட்டதால் வாகனங்கள் வர தொடங்கின.

    அப்போது அங்கு வந்த போக்குவரத்து காவலர் முதியவரை தனது முதுகில் ஏற்றி சாலையை கடக்க உதவினார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதனை பார்த்த அனைவரும் போலீஸ் அதிகாரியை பாராட்டி வருகின்றனர். பரபரப்பான சாலையில் முதியவருக்கு உதவி முன்வந்த போலீசாரின் செயல் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. சீனாவின் போக்குவரத்து துறை அந்த வீடியோவை இணையதளங்களில் பதிவு செய்துள்ளது. #piggyback

    தனக்கு எதிராக குறி சொன்னதால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பொது இடத்தில் வைத்து முதியவரை செருப்பால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பரமக்குடி:

    காவல்துறை பொது மக்களின் நண்பன் என்ற வாசகங்கள் போலீஸ் நிலையங்களிலும், பொது இடங்களிலும் எழுதப்பட்டிருப்பதை அடிக்கடி நாம் பார்த்திருக்கலாம்.

    ஆனால் தற்போது ஒரு சில போலீசார் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால் மேற்கண்ட வாசகம் சரிதானா? என்று எண்ணத்தோன்றுகிறது.

    குறிப்பாக வாகன ஓட்டிகளிடமும், அப்பாவி மக்களிடமும் போலீசார் காட்டும் கெடுபிடிகள் பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கின்றன. இதை தட்டிக் கேட்டால் பொய் வழக்கு போட்டு அவர்களை கைது செய்துவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது.

    இதே போல் ஏராளமான சட்ட மீறல்களிலும் ஒரு சில போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சில போலீசாரின் இதுபோன்ற செயல்களால் ஓட்டுமொத்த காவல்துறைக்கு களங்கம் ஏற்படுகிறது.

    இதனிடையே தனக்கு எதிராக குறி சொன்னதால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பொது இடத்தில் முதியவரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் விபரம் வருமாறு:-

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக இருப்பவர் முனியசாமி. ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் அடிக்கடி கோவில்களுக்கு சென்று வருவது வழக்கம்.

    மேலும் ஜோசியத்திலும் இவருக்கு அதீத நம்பிக்கை உண்டு. பரமக்குடியில் கடை வாசலில் அமர்ந்து 50 வயது மதிக்கத்தக்க முதியவர் குறி சொல்லிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு சென்ற சப்- இன்ஸ்பெக்டர் முனியசாமி தான் விரைவில் ஓய்வு பெற உள்ளதாகவும், எனவே எதிர்காலம் எப்படி இருக்கும் என்று குறி கேட்டுள்ளார்.

    அவரது கையை பார்த்து குறி சொன்ன அந்த முதியவர், உங்களுக்கு அரசின் பணப்பலன்கள் கிடைக்க கொஞ்சம் சிக்கலாகத்தான் இருக்கும் என்றும் மேலும் சில எதிர்மறையான கருத்துக்களையும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த முனியசாமி பொது இடத்திலேயே குறி சொன்ன அந்த முதியவரை மனிதாபிமான மின்றி செருப்பால் சரமாரியாக தாக்கினார்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி மட்டும் தான் அடைந்தனர். சப்- இன்ஸ்பெக்டர் என்பதால் அவரை தடுக்க வில்லை.

    ஆத்திரம் தீர முதியவரை தாக்கிய பின் முனியசாமி அங்கிருந்து கிளம்பினார்.

    இந்த சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் பதிவேற்றினர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் முதியவரை அற்ப காரணத்துக்காக செருப்பால் தாக்கிய சம்பவம் பொதுமக்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு உரியவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.  #tamilnews

    ×