விஷம் குடித்து முதியவர் தற்கொலை

கால் வலி தாங்க முடியாமல் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டதாக கூறினார்.சிகிச்சை பலனின்றி அய்யாவு பரிதாபமாக இறந்தார்.
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் இரட்டிபாளையம் மேல் வீதியை சேர்ந்தவர் அய்யாவு (55). இவர் கடந்த 5 வருடமாக முட்டி வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று ஆடு, மாடுகளை மேய்த்து விட்டு வீட்டுக்கு வந்தபோது வாந்தி எடுத்துள்ளார்.

இது குறித்து அவரது மனைவி கேட்டபோது கால் வலி தாங்க முடியாமல் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டதாக கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அய்யாவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com