விஷம் குடித்து முதியவர் தற்கொலை

மன வேதனையடைந்த அண்ணாமலை, சின்ன சேமூரில் தான் வசித்து வந்த வீட்டில் நேற்று விஷம் குடித்துவிட்டார்.இதுகுறித்து மாலதி அளித்த புகாரின்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு, வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மாலதி (68). இவரது கணவர் அண்ணாமலை (69). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 25 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்த நிலையில், உடல் நலக் குறைவு ஏற்பட்டு வேலைக்கு செல்ல முடியாமலும், தன்னைப் பராமரிக்க யாரும் இல்லாததாலும் மன வேதனையடைந்த அண்ணாமலை, சின்ன சேமூரில் தான் வசித்து வந்த வீட்டில் நேற்று விஷம் குடித்துவிட்டார்.மயங்கிய நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அண்ணாமலை பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து மாலதி அளித்த புகாரின்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com