என் மலர்
நீங்கள் தேடியது "ஆட்டுக்கறி"
- அவசர, அவசரமாக ஆட்டுக்கறி துண்டை எடுத்து சாப்பிட்டார்.
- லட்சுமணய்யா மூச்சு விட முடியாமல் சரிந்து கீழே விழுந்தார்.
தெவங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டம். போண்டலபள்ளியை சேர்ந்த ஒருவர், ஒரு புதிய வீட்டை கட்டி வருகிறார்.
இதற்காக நேற்று தளம் அமைக்கும் பணி நடந்தது.தொழிலாளர்கள் சிமெண்டு கலவை கொண்டு தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தளம் அமைக்கும் பணிகள் முடிந்த பிறகு தொழிலாளர்களுக்கு ஆட்டு கறி குழம்பு பரிமாறப்பட்டது.அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் லட்சுமணய்யா (வயது 65) என்பவரை சாப்பிட அழைத்தனர்.
அப்போது லட்சுமணய்யா மது போதையில் இருந்தார். அவசர, அவசரமாக ஆட்டுக்கறி துண்டை எடுத்து சாப்பிட்டார். அது அவரது தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது.
இதனால் லட்சுமணய்யா மூச்சு விட முடியாமல் சரிந்து கீழே விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் லட்சுமணய்யா மூச்சுக் குழாயில் ஆட்டுக்கறி துண்டு சிக்கி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் உள்ள உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 2000 கிலோ இறைச்சியை சென்னை எழும்பூர் ரெயில் நிலைய போலீசார் கடந்த 17-ம் தேதி பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட இறைச்சியில் வால் நீளமாக இருந்ததால் அது நாய் இறைச்சியாக இருக்கலாம் என்ற புகார் எழுந்தது. எனவே, சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் இறைச்சியை கைப்பற்றியதுடன், இறைச்சி மாதிரியை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தற்போது வெளியாகி உள்ளது. கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில், கைப்பற்றப்பட்ட இறைச்சி நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறி என உறுதி ஆனது. அது சிறிய வகை ஆடு எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்மூலம், இறைச்சி பிரியர்களிடையே கடந்த சில தினங்களாக ஏற்பட்ட அச்ச உணர்வு நீங்கியது. #DogMeatInChennai #MeatRumour






