search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "by drinking poison"

    • சின்னதுரைக்கு அடி க்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது
    • சின்னதுரை தான் வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்து விட்டதாக கூறினார்

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கொண்டு வன் ரெட்டியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை (வயது 54). இவரது மனைவி சம்பூரணம். அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    சின்னதுரைக்கு அடி க்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. வயிற்று வலி ஏற்படும் போதெல்லாம் சின்னத்திரை மிகவும் கஷ்ட ப்பட்டு வந்துள்ளார். இத ற்காக சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை. சம்பவத்தன்று சின்ன துரை மற்றும் அவரது மனைவி, மகன் அந்தியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றி ருந்தனர். பின்னர் சின்னதுரை மட்டும் வீட்டு க்கு வந்தார்.

    அன்று இரவு தனது மனைவிக்கு போன் செய்த சின்னதுரை தான் வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்து விட்டதாக கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மகன் மற்றும் உறவினருடன் சென்று சின்னதுரையை மீட்டு சிகி ச்சைக்காக ஈரோ ட்டில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனையில் அனும தித்தனர்.

    அவரது நிலைமை மிகவும் மோசம் அடைந்த தால் பின்னர் மேல் சிகி ச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழை த்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மரு த்துவர் சின்னதுரை வரும் வழியிலேயே இறந்து விட்ட தாக தெரிவித்தார். பின்னர் இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சின்னான் பூச்சி மருந்து குடித்து விட்டார்.
    • கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னான் (78). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் வேதனையில் இருந்து வந்த சின்னான் பூச்சி மருந்து (விஷம்) குடித்து விட்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    • இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவி யையும், குழந்தையையும் சரிவர கவனிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
    • திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் இறந்த தால் பிரியாவின் இறப்பு க்கான காரணம் குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புளி யம்பட்டி கணக்கரசம்பாளை யத்தை சேர்ந்தவர் சீனி வாசன் (35). விவசாயி. இவருக்கும் கர்நாடகா மாநிலம் சம்ராஜ் நகர் கான கஹள்ளி பகுதியை சேர்ந்த மாதவ நாய்க்கர் மகள் பிரியா (30) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் ஆனது.

    இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். சீனி வாசனுக்கு மதுப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவி யையும், குழந்தையையும் சரிவர கவனிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

    இதனால் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த பிரியா கடந்த 30-ந் தேதி வீட்டில் இருந்த கலைக் கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரியாவை மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சை க்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு பிரியா இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இதுகுறித்து புளியம்பட்டி போலீசில் பிரியாவின் தாய் ரத்னாம்மாள் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் இறந்த தால் பிரியாவின் இறப்பு க்கான காரணம் குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    • பேரக்குழந்தைகளுடன் அனைவரும் நேற்று திருமண வீட்டுக்கு சென்று விட்டனர்
    • மாதன் கட்டிலில் பேச்சு மூச்சு இன்றி கிடந்தார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த சின்ன களியூர், பகவதி நகரை சேர்ந்தவர் மாதன்(70). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். மகளுக்கு திருமணம் ஆகி தாய் தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 3 மாதமாக மாதனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் அவர் மன வேதனையில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் பக்கத்து தெருவை சேர்ந்த உறவினருக்கு திருமணம் என்பதால் மாதன் மனைவி அவரது மகள் பேரக்குழந்தைகளுடன் அனைவரும் நேற்று திருமண வீட்டுக்கு சென்று விட்டனர். வீட்டில் மாதன் மட்டும் தனியாக இருந்தார்.

    இந்நிலையில் மாதனுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக அவரது பேரன் வீட்டுக்கு வந்தார். அப்போது மாதன் கட்டிலில் பேச்சு மூச்சு இன்றி கிடந்தார்.

    இது குறித்த அவரது பேரன் அக்கம் பக்கத்தினர் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தார். அனைவரும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் விவசாயத்திற்காக வைக்கப்பட்டிருந்த குருணை மருந்தை எடுத்து குடித்து மாதன் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.

    உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே வரும் வழியிலேயே மாதன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கவுரிசங்கர் விஷத்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதி, டி. பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர் கவுரிசங்கர் (40). இவரது மனைவி பிரீத்தா.

    திருமணம் ஆகி 2 மாதத்தில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு கவுரி சங்கரை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    இதனையடுத்து கவுரிசங்கர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி குடித்து திரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கவுரிசங்கர் விஷத்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி. மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கவுரிசங்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நந்தினிக்கு உடல்நிலை சரியில்லை.
    • நந்தினி திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    கோபி,

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தீர்த்தாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி நந்தினி (வயது 26). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    நந்தினிக்கு உடல்நிலை சரியில்லை எனவும் இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் நந்தினி மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நந்தினி திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    இதை கண்ட அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து சிகிச்சை பலனின்றி நந்தினி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சத்தியசுந்தரி உடல் நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை என கூறப்படுகிறது.
    • இந்த நிலையில் சம்பவ த்தன்று மன வருத்தத்தில் இருந்து வந்த சத்தியசுந்தரி வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து விட்டார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாழ்குளி பகுதியை சேர்ந்தவர் சிவானந்தகுமார். இவரது மனைவி சத்தியசுந்தரி (வயது 34). விவசாயி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    சத்தியசுந்தரி உடல் நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை என கூறப்படுகிறது. இ தனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று மன வருத்தத்தில் இருந்து வந்த சத்தியசுந்தரி வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து விட்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளை யத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக் காக கோபிசெட்டிபாளை யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்தியசுந்தரி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குழந்தை இல்லாத மன வேதனையில் கவிதா களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார்.
    • இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள வேலாங்குட்டை, துய்யம் பூந்துறை, கே.கே. வலசை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் கவிதா (வயது 36).

    இவருக்கு கடந்த 9 வருட ங்களுக்கு முன்பு ஒருவருடன் திருமண–மானது. அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடுமலைப்பேட்டை குடும்ப நல நீதிமன்றத்தில் விவா கரத்து பெற்றனர்.

    இதைதொடர்ந்து கவிதா மோகன்ராஜ் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதனால் கவிதா மன வேதனையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கவிதா களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவ ரது உடல் பிரேத பரி சோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குடும்பச் செலவுக்காக மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்றிருந்தனர். ஆனால் அதை திருப்பிச் செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்துள்ளனர்.
    • இந்த நிலையில் மூர்த்தி சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பவானிசாகர், கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (50). இவரது மனைவி சாந்தா. இருவரும், குடும்பச் செலவுக்காக மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்றிருந்தனர்.

    ஆனால் அதை திருப்பிச் செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்துள்ளனர். இந்த நிலையில் மூர்த்தி சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.

    அவரை மீட்டு, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தி உயிரிழந்தார்.

    இதுகுறித்து, பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொணடார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு எல்லீஸ்பேட்டை ஏசுநாதர் கோவில் வீதியை சேர்ந்தவர் சாமிநாதன் (58). இவரது மனைவி எலிசபத் (52). இவர்களுக்கு திருமணமாகி 30 வருடம் ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    இந்நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதேப்போல் சம்பவத்தன்றும் சாமிநா தனுக்கும், எலிசபத்துக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த எலிசபெத் இனிமேல் நான் உங்களுடன் வாழ மாட்டேன் என்று கூறி தூங்க சென்று விட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை சாமிநாதன் வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து எலிசபத் கேட்டபோது வீட்டை சுத்தம் செய்ய வைத்திருந்த டெட்டாலை எடுத்து குடித்து விட்டதாக சாமிநாதன் கூறினார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த எலிசபத் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சாமிநாதனை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் சாமிநாதன் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சாமிநாதன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காஞ்சி கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் மேட்டூர் பி.என்.பட்டி, சின்னகவுர் பகுதியை சேர்ந்தவர் சிவன் (54). கூலித்தொழிலாளி. இவரது மகன் ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருணகிரிநாதர் தெருவில் வசித்து வருகிறார். சிவன் கடந்த 2 வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சிவன் சென்னிமலையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு கடந்த 9-ந் தேதி வந்து தங்கி இருந்தார். சம்பவத்தன்று மீண்டும் வயிற்று வலி அதிகமாக இருந்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சிவன் மதுவில் விஷம் கலந்து குடித்து உள்ளார்.

    போலீசார் விசாரணை

    இது குறித்து அவர் தனது மகனிடம் கூறினார். இதனால் அதிர்ச்சடைந்த ஜெயக்குமார் தந்தையை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று வலி அதிகமானதால் வாழ்க்கையில் வெறுப்படைந்து மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியசேமூர் சோழா நகர் தட்டான் காடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (42). லேத் பட்டறை உரிமையாளர்.

    இவர் வாகன விபத்து ஏற்பட்டு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இருப்பினும் முதுகு தண்டுவடத்தில் தொடர்ந்து வலி இருந்து வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்று வலி அதிகமானதால் வாழ்க்கையில் வெறுப்படைந்து மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் ஆறுமுகத்தை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×