முதியவர் விஷம் குடித்து தற்கொலை

சின்னான் பூச்சி மருந்து குடித்து விட்டார். கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதியவர் விஷம் குடித்து தற்கொலை
Published on

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னான் (78). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வேதனையில் இருந்து வந்த சின்னான் பூச்சி மருந்து (விஷம்) குடித்து விட்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com