விஷம் குடித்து பெண் தற்கொலை

குழந்தை இல்லாத மன வேதனையில் கவிதா களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார்.இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

கொடுமுடி:

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள வேலாங்குட்டை, துய்யம் பூந்துறை, கே.கே. வலசை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் கவிதா (வயது 36).

இவருக்கு கடந்த 9 வருட ங்களுக்கு முன்பு ஒருவருடன் திருமண–மானது. அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடுமலைப்பேட்டை குடும்ப நல நீதிமன்றத்தில் விவா கரத்து பெற்றனர்.

இதைதொடர்ந்து கவிதா மோகன்ராஜ் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதனால் கவிதா மன வேதனையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கவிதா களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவ ரது உடல் பிரேத பரி சோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com