விஷம் குடித்து பெண் தற்கொலை

சத்தியசுந்தரி உடல் நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில் சம்பவ த்தன்று மன வருத்தத்தில் இருந்து வந்த சத்தியசுந்தரி வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து விட்டார்.
விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாழ்குளி பகுதியை சேர்ந்தவர் சிவானந்தகுமார். இவரது மனைவி சத்தியசுந்தரி (வயது 34). விவசாயி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

சத்தியசுந்தரி உடல் நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை என கூறப்படுகிறது. இ தனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் சம்பவ த்தன்று மன வருத்தத்தில் இருந்து வந்த சத்தியசுந்தரி வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து விட்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளை யத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேல் சிகிச்சைக் காக கோபிசெட்டிபாளை யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்தியசுந்தரி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com