விஷம் குடித்து முதியவர் தற்கொலை

குடும்பச் செலவுக்காக மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்றிருந்தனர். ஆனால் அதை திருப்பிச் செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்துள்ளனர். இந்த நிலையில் மூர்த்தி சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம், பவானிசாகர், கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (50). இவரது மனைவி சாந்தா. இருவரும், குடும்பச் செலவுக்காக மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்றிருந்தனர்.

ஆனால் அதை திருப்பிச் செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்துள்ளனர். இந்த நிலையில் மூர்த்தி சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.

அவரை மீட்டு, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தி உயிரிழந்தார்.

இதுகுறித்து, பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com