தம்பி மகன் இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை

தம்பி மகன் இறந்த துக்கம் தாளாமல் மோகன்குமார் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.இது குறித்து கோபி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தம்பி மகன் இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை
Published on

கோபி:

ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்துள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் கங்காதரன் (52). இவரது சகோதரர் மோகன் குமார் (60). பெயிண்டிங் தொழிலாளி.

கங்காதரனின் மகன் நவீன் கடந்த 4-ந் தேதி விபத்தில் உயிரிழந்தார். இதற்கான அவரது 16-ம் நாள் காரியம் நேற்று நடை பெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த மோகன்குமார் மிகுவும் துக்கத்துடன் காணப்பட்டார்.

இந்த நிலையில், வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்ற மோகன்குமார் கோபி, குப்பைமேடு டாஸ்மாக் அருகே நேற்று மதியம் வாந்தி எடுத்த நிலையில் கிடந்துள்ளார்.

அப்பகுதியினர் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசேதானை செய்து மோகன்குமார் ஏற்கனவே இறந்து விட்ட தாகத் தெரிவித்தனர்.

தம்பி மகன் இறந்த துக்கம் தாளாமல் மோகன்குமார் மதுவில் விஷம்கலந்து குடித்து உயிரிழந்து விட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

இது குறித்து, கோபி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com