விஷ மாத்திரை தின்று முதியவர் தற்கொலை

சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்தி சல்பாஸ் மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார்.இது குறித்து ேகாபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷ மாத்திரை தின்று முதியவர் தற்கொலை
Published on

கோபி:

கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (62). இவரது மனைவி வெங்கட்டம்மாள். இவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை.

இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

இதனால் மனமுடைந்த கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி செத்து போய்விடலாம் என புலம்பி கொண்டே இருந்துள்ளார். இதனால் அவரது மனைவி வெங்கட்டம்மாள் அவருக்கு ஆறுதல் கூறிவந்துள்ளார்.

சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவெடுத்த கிருஷ்ணமூர்த்தி சல்பாஸ் மாத்திரை (விஷ மாத்திரை) தின்று தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ேகாபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com