என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருப்பூரிலிருந்து அவினாசிக்கு அரசு-தனியார் பஸ்கள் போட்டி போட்டு சென்றாதல் பயணிகள் அதிர்ச்சி
  X

  போலீசார் பஸ் டிரைவரை எச்சரித்த காட்சி.

  திருப்பூரிலிருந்து அவினாசிக்கு அரசு-தனியார் பஸ்கள் போட்டி போட்டு சென்றாதல் பயணிகள் அதிர்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அரசு பஸ்சும், தனியார் பஸ்சும் ஒருவரை ஒருவர் முந்தி பயணிகளை ஏற்றுவதற்கு போட்டி போட்டுள்ளனர்.
  • 10 கிலோ மீட்டர் தூரம் ரோட்டை வழி மறித்து கொண்டு சென்றுள்ளது.

  அவினாசி :

  திருப்பூர் பழைய பஸ்டாண்டில் இன்று காலை 9 மணியளவில் அரசு பஸ்சும், தனியாருக்கு சொந்தமான பஸ்சும் பயணிகளை ஏற்றிக்கொண்டு அவினாசி நோக்கி கிளம்பியுள்ளது.

  அப்போது இரண்டு பஸ்சுகளும் ஒருவரை ஒருவர் முந்தி பயணிகளை ஏற்றுவதற்கு போட்டி போட்டுள்ளனர். இதில் அரசு பஸ்சை தனியார் பஸ் முந்தி செல்ல விடாமல் மோதுவது போல வந்துள்ளது. 10 கிலோ மீட்டர் தூரம் ரோட்டை வழி மறித்து கொண்டு சென்றுள்ளது. இதனையடுத்து அரசு பஸ் டிரைவர் முந்தி செல்ல முயற்சி செய்தனர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அரசு பேருந்து டிரைவர் அவினாசி போலீஸ் நிலையத்தில் பஸ்சை நிறுத்தி தனியார் பஸ் டிரைவர் மீது புகார் தெரித்தார்.

  இரண்டு பேரிடமும் விசாரணை மேற்கொண்ட போலீசார் தனியார் பஸ் டிரைவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

  Next Story
  ×