search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசஸ்"

    • ஜம்முனை ஓடை அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே ஏ.பி.டி. ரோடு ஜம்முனை ஓடை அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக திருப்பூர் மத்திய பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ராஜு ( வயது 48) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தாரா அல்லது யாராவதுதாக்கியதில் இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்பத்தகராறு, கடன் தொல்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • மோட்டார் சைக்கிளில் செல்வோர் சாலை விபத்தில் சிக்கி பலியாவது அதிகரிக்கிறது.

    அவிநாசி :

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி காவல் நிலைய எல்லைக்குட்பட்டு150க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரப்பகுதி உள்ளது.சமீப நாட்களாக குடும்பத்தகராறு, கடன் தொல்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.

    கோவை- சேலம் நெடுஞ்சாலையில் அவிநாசி அமைந்துள்ள நிலையில் அடிக்கடி சாலை விபத்துகளும் ஏற்படுகிறது.குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் சாலை விபத்தில் சிக்கி பலியாவது அதிகரிக்கிறது. நகரின் உட்புற சாலைகளில் கூட அடிக்கடி விபத்து நேரிடுகிறது. இதை தவிர்க்க, ஆங்காங்கே வேகத்தடை கூட அமைக்கப்பட்டது. இதனால் அவிநாசி போலீசார் சார்பில் மங்கலம் ரோட்டில் உள்ள ஆகாசராயர் கோவிலில் கிடா வெட்டி, சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    இது குறித்து போலீசார் கூறுகையில், விபத்து, தற்கொலை உள்ளிட்டவை தினமும் நடக்கிறது. தினமும் ஒரு உடலாவது பிரேத பரிசோதனைக்கு வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற அசம்பாவிதம் நடக்கக்கூடாது என்ற வேண்டுதலை முன்வைத்து, ராயர் கோவிலில் கிடா வெட்டி பூஜை செய்தோம் என்றனர்.

    ×