search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர்"

    • வீட்டில் இருந்தே வாக்களிக்கும் விருப்பத்தை தெரிவித்தால் அவர்களது வீட்டுக்கு சென்று வாக்கு பதிவு செய்யப்படும்.
    • தபால் ஓட்டை தேர்தல் அதிகாரி வாக்காளரிடம் இருந்து பெற்று கொள்வார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு சலுகை வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி அவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த முறை ஏற்கனவே பல பகுதிகளில் செயல் படுத்தப்பட்டது. தற்போது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

    இதில் 12-டி படிவம் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் விருப்பத்தை தெரிவித்தால் அவர்களது வீட்டுக்கு சென்று வாக்கு பதிவு செய்யப்படும்.


    மத்திய பிரதேசம், மேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தல்களில் இந்த வசதி அளிக்கப்பட்டு 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்களித்திருந்தனர். அதில் மாவட்ட தேர்தல் அதிகாரி தேர்தல் நாளுக்கு முன்பாக வீட்டில் இருந்தே வாக்களிக்கும் நாளை நிர்ணயிப்பார். வாக்கார்களின் வீட்டுக்கு தபால் ஓட்டு வழங்கப்படும். அதில் அவர்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும்.

    அதன்பின் அந்த தபால் ஓட்டை தேர்தல் அதிகாரி வாக்காளரிடம் இருந்து பெற்று கொள்வார்.

    தேர்தல் அதிகாரிகள், ஒரு வீடியோகிராபர் மற்றும் போலீசார் ஆகியோர் கொண்ட குழுவினர் வாக்குப் பெட்டி மற்றும் தனி உரிமைக்கான வசதியுடன் வாக்காளர் வீட்டுக்கு செல்வார்கள். அங்கு வாக்குப்பதிவு வீடியோ எடுக்கப்படும். இது சுமார் 20 நிமிடங்களில் முடிந்து விடும். அவர்கள் வாக்குகள் தபால் வாக்கு மூலம் எண்ணப்படும்.

    • வாக்காளர்கள் அந்தந்த முகாம்களில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
    • அமைதியாக தேர்தலில் பங்கேற்க வேண்டும்.

    வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உள்ள முகாம்களில் வசிக்கும் மக்கள், வரும் மக்களவை தேர்தலில் முகாம்களில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது மணிப்பூர் குறித்த கேள்விக்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், "நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம்" என்றார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    நாங்கள் ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளோம். அதை நாங்கள் அறிவித்துள்ளோம். முகாமில் உள்ள வாக்காளர்கள் முகாமில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கிறோம்.

    ஜம்மு-காஷ்மீர் புலம்பெயர்ந்தோருக்கு ஒரு திட்டம் உள்ளது போல, மணிப்பூரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

    வாக்காளர்கள் அந்தந்த முகாம்களில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். கீழ் தொகுதியில் இருந்து மேல் பகுதிக்கும், உயரத்திலிருந்து தாழ்ந்த பகுதிக்கும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

    வாக்காளர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், வாக்குச்சீட்டின் மூலம் முடிவு அறிவோம். அமைதியாக தேர்தலில் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • சுறா சுமன் பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 116-வது வார்டு அயோத்திக் குப்பம் பகுதியில் பா.ஜனதாவை சேர்ந்த சுறா சுமன் மற்றும் நிர்வாகிகள் வாக்காளர் பெயர் சரிபார்ப்பு முகாம் நடத்தினார்கள்.

    மேஜை அமைத்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தி.மு.க. வட்ட செயலாளர் தலைமையிலான கும்பல் திடீரென்று வந்து அங்கு இருந்த பா.ஜனதாவினர் மீது தாக்கு தல் நடத்தினார்கள்.

    அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினார்கள்.

    இதில் சுறா சுமன் பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற நிர்வாகிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    இதையடுத்து மெரினா போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • வாக்காளர் சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு அ.தி.மு.க.வினர் உதவிட ஆர்வம் காட்ட வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்றூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக வாக்காளர் சிறப்பு முகாம் மதுரையில் நாளை (சனிக்கிழமை) நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் நடைபெறுகிறது. மதுரை மாநகர் மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    இந்த முகாம்களில் புதிதாக வாக்காளர்களை சேர விரும்புபவர்கள் மற்றும் முகவரி மாற்றம் திருத்தம் உள்ளிட்ட பணிக ளுக்காக சிறப்பு முகாம்க ளுக்கு வரும் பொது மக்களுக்கு கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க அந்தந்த பகுதி, வட்ட, பூத் கமிட்டி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வத்துடன் உதவிட வேண்டும்.

    பொது மக்களுக்கு தேவையான விண்ணப்ப படிவங்களை பெற்று தருவதிலும் அதை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஒப்படைக்கும் பணியிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கவனத்துடன் செயல்பட்டு வருகிற பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கும் வகையில் அனைத்து பணிகளையும் முன்னின்று செய்திட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • டிசம்பர் 9-ந் தேதி வரை கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளுக்கான படிவங்கள் 6, 6ஏ, 6பி, 7 மற்றும் 8 வழங்கலாம்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவு ரைப்படி 01-01-2024 ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திரு த்தம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தொகுதி வாரியான வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்ட ரால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னி லையில் கடந்த மாதம் 27-ந் தேதி வெளியிடப்பட்டது.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை சேர்க்கவும், பெயர் நீக்கம், தொகுதி, முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தல் தொடர்பாக டிசம்பர் 9-ந் தேதி வரை கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளுக்கான படிவங்கள் 6, 6ஏ, 6பி, 7 மற்றும் 8 வழங்கலாம்.

    மேலும் தங்களது பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் வருகிற 18 மற்றும் 19 ஆகிய தினங்களில் நடைபெற இருந்த சிறப்பு முகாம்கள் வருகிற 25 மற்றும் 26-ந் தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த தினங்களில் நடைபெற உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தல் தொடர்பான சிறப்பு முகாம்களை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடந்தது.
    • வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்பு வனம், இளையான்குடி ஒன்றியங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் ஏராள மான வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான விண்ணப்பப்படிவங்களை பெற்று அவற்றை பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைத்தனர்.

    மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் இளையான்குடி ஒன்றி யத்தில் அமைக்கப்பட்டி ருந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வாக்காளர்களிடம் வாக்காளர் பட்டியல் திருத்த விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.

    இதில் முன்னாள்

    எம்.எல்.ஏ. சுப மதியரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜூமுதீன், கூட்டுறவு சங்கத் தலைவர் தமிழரசன், பேரூராட்சி துணைத் தலைவர் இப்ராகீம், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு பார்வையிட்டார்
    • சிறப்பு முகாம்களுக்கு சென்று புதிய வாக்காளர் சேர்ப்பு பணியினை பார்வையிட்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்டஒற்றையால்விளை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 இடங்களில்புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் திருத்தம் சிறப்பு முகாம் நடந்தது. இதில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தி.மு.க. பார்வையாளர் நம்பி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் இந்த சிறப்பு முகாம்களுக்கு சென்று புதிய வாக்காளர் சேர்ப்பு பணியினை பார்வையிட்டனர்.

    கவுன்சிலர் சுஜா அன்பழகன், மாவட்ட தி.மு.க. அணிகளின் துணை அமைப்பாளர்கள் அன்பழகன், பொன் ஜான்சன், தமிழன் ஜானி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் நாஞ்சில் மைக்கேல், அக ஸ்தி யலிங்கம், தாமரை பிரதாப், கிருஷ்ண குமார், தாமஸ்ஷியாம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட வைகளுக்கு ஏராளமா னோர் வி ண்ண ப்பம் அளி த்தனர்.

    • 57 பூத்துகளில் 18 வயது நிறைவடைந்த மாணவர்களை புதிதாக சேர்க்கும் பணி நடந்தது.
    • மறைந்தவர்கள் பெயர்களை நீக்குதல் செய்யும் பணியும் நடந்தது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் பகுதியில் பாபநாசம் வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கல் முகாம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் கல்யாண சுந்தரம் அறிவுறுத்தலின்படி, மாவட்ட துணைச் செயலாளர் அய்யாராசு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலையில் பாபநாசம் ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் வடக்கு ஒன்றியத்தில் உள்ள கொந்தகை, ஓலைப்பாடி, துரும்பூர், ஆதனூர், திரு வைகாவூர், திருமண்டங்குடி, உமையாள்புரம், தியாக சமுத்திரம், அலவந்திபுரம், மேலகபிஸ்தலம், சத்தியமங்கலம், கபிஸ்தலம் சருக்கை, உம்பளப்பாடி, உள்ளிக்கடை, கோவிந்தநாட்டு சேரி, உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள 57 பூத்துகளில் 18 வயது நிறைவடைந்த மாணவ- மாணவிகளை புதிதாக சேர்த்தலும், மறைந்தவர்கள் பெயர்களை நீக்குதல் செய்யும் பணியும் நடைபெற்றது.

    இந்த சேர்த்தல் நீக்கல் முகாம் பணிகளை அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் லட்சுமணன், தலைவர் மலர்மன்னன், துணைத் தலைவர் முகமது கனி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வினோத் குமார், ஆகியோரை சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கபிஸ்தலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவர் குணசேகரன், கிளைச் செயலாளர் ஜெகதீசன், முன்னாள் ஊராட்சி செயலாளர் ராஜா, இளைஞர் அணி அமைப்பாளர் கரிகாலன், இளைஞர் அணி விஜயராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது.
    • ஸ்ரீதரன் மாணிக்கம், பழனிக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், வட்டம், பட்டணம்காத்தான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீழக்கரை வட்டம் ரகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் 2024 வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத் தத்தை முன்னிட்டு நடை பெற்ற சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல், 18 வயது நிரம்பியவர்களுக்கு புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப் பித்தல் தொடர்பான பணி கள் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவ லரும், கலெக்டருமான விஷ்ணு சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் இளம் வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்கா ளர்களின் பெயர்களை சேர்ப்பதற்காகவும், தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் நீக்கம் செய்வதற்கு 5.11.2023 மற்றும் 18, 19-ந் தேதி ஆகிய தினங்களில் அனைத்து வாக்குச்சாவடி களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    அதனைத்தொடர்ந்து பட்டணம்காத்தான் பகுதியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தொடர்பாக வும் பொருட்களின் இருப்பு, பதிவேடுகள் தொடர்பாகவும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வுகளின்போது வருவாய் கோட்டாட்சியர் கோபு, வட்டாட்சியர்கள் ஸ்ரீதரன் மாணிக்கம், பழனிக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தீர்மானம்
    • ஒன்றிய இளைஞ ரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சசிசுபாசிங் நன்றி கூறினார்.

    இரணியல்:

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் திங்கள்நகரில் நடந்தது. குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் ஆன்றோசர்ச்சில் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் விஜயன், முருகன், ரமணிரோஸ், ஏசு ரெத்தினராஜ், ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

    குமரி மாவட்டத்தில் நடைபெற்ற இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு குருந்தன்கோடு மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நலிந்த கழக மூத்த முன்னோடிகள் 24 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழி வழங்கிய கழக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாற்றுதல் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் மற்றும் அதிக அளவில் கலந்து சிறப்பித்த இளைஞர்களுக்கும், ஒன்றியத்திற்குட்பட்ட கழக நிர்வாகிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    வருகிற 4, 5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட 104 வாக்கு சாவடி மையங்களிலும் கழகத்தால் நியமிக்க பட்டிருக்கும் வாக்குச்சாவடி பாக முகவர்கள் பி.எல்.ஏ.-2, வாக்குச்சாவடிபாக முகவர்கள் குழு உறுப்பினர்கள் பி.எல்.சி., ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் செயலாளர்கள், ஊராட்சி பொறு ப்பாளர்கள், மாவட்ட ஒன்றிய பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் முழு அளவில் பணியாற்றி அந்தந்த பகுதிகளில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்க ளை வாக்காளர்க ளாக சேர்க்கும் பணிகளில் முழு மூச்சாக ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரூர் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞ ரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சசிசுபாசிங் நன்றி கூறினார்.

    • கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் தொகுதி தொண்டர்களுக்கு அறிவுரை
    • தி.மு.க.வினருக்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் மகேஷ் வேண்டுகோள்

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், நாகர்கோ வில் மாநகராட்சி மேயரு மான மகேஷ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர் பட்டி யலை திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணை யம் வெளி யிட்டுள்ளது. குமரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோ வில் மற்றும் குளச்சல் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதி களிலும் கடந்த 27-ந் தேதி முதல் வருகிற டிசம்பர் மாதம் 9-ந்தேதி வரை புதிய வாக்கா ளர்களைச் சேர்க்க வும், பெயர்கள் நீக்கவும், திருத்தம் செய்யவும் மனுச் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இது தவிர வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) 5-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை), 18-ந்தேதி (சனிக் கிழமை), 19-ந் தேதி (ஞாயிற் றுக்கிழமை) ஆகிய 4 நாட்க ளில் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங் களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம்களும் நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு முகாம்களில் குமரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள மாநகர், ஒன்றிய, நகர் பகுதி, பேரூர், வட்ட, கிளை செயலாளர்கள் அனைத்து சார்பு அணிகளின் நிர்வா கிகள் இணைந்து இந்த வாய்ப்பினை பயன்படுத்தி 1-1-2024 அன்று 18 வயது நிரம்பக் கூடிய புதிய வாக்காளர்களை வாக்கா ளர் பட்டியலில் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள், முகவரி மாற்றம் செய்தல், ஆதார் எண்ணை வாக்கா ளர் பட்டியலுடன் இணைப்பு போன்ற பணி களை சிறப்பாக மேற் கொண்டு தகுதயுள்ள வாக் காளர்கள் விடுபட்டு விடா மல் இணைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் அதிகம்
    • குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர், அரசியல் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிர மணியன், ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம், தி.மு.க. சார்பில் இளைஞரணி அமைப்பா ளர் அகஸ்தீசன், அ.தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர் ஜெயகோபால், பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜெகதீசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இசக்கி முத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் நவீன் குமார், தே.மு.தி.க. சார்பில் மணிகண்டன் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    தேர்தல் தாசில்தார் சுசீலா, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜாசிங் மற்றும் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதன்படி 15 லட்சத்து 46 ஆயிரத்து 581 வாக்காளர்கள் இருந்தனர். இதைத்தொடர்ந்து வாக்குச் வாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி 12,860 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 37,405 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது குமரி மாவட்டத்தில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 884 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 60 ஆயிரத்து 10 பெண் வாக்காளர்கள், 143 இதர வாக்காளர்கள் என 15 லட்சத்து 22 ஆயிரத்து 36 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் தற்போது அதிகமானோர் உள்ளனர்.

    கன்னியாகுமரி சட்ட சபை தொகுதியில் அதிகபட்சமாக 2,89,373 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 43,417 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 45 ஆயிரத்து 891 பேரும், இதர வாக்காளர்கள் 65 பேரும் உள்ளனர். நாகர்கோவில் தொகு தியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 976 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 31 ஆயிரத்து 535 பெண் வாக்காளர்கள், 13 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 524 வாக்காளர்கள் உள்ளனர்.

    குளச்சல் தொகுதியில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 540 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 29 ஆயிரத்து 926 பெண் வாக்காளர்கள், 14 இதர வாக்காளர்கள் என 2 லட்சத்து 63 ஆயிரத்து 480 வாக்காளர்கள் உள்ளனர். பத்மநாபபுரம் தொகுதி யில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 89 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 382 பெண் வாக்காளர்கள், 26 இதர வாக்காளர் என 2 லட்சத்து 36 ஆயிரத்து 497 வாக்காளர்கள் உள்ளனர்.

    விளவங்கோடு தொகு தியில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 525 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 14 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 4 என 2 லட்சத்து 32 ஆயிரத்து 543 வாக்காளர்கள் உள்ளனர். கிள்ளியூர் தொகுதியில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 336 ஆண் வாக்கா ளர்கள், 1 லட்சத்து 18 ஆயிரத்து 262 பெண் வாக் காளர்கள், 21 இதர வாக்காளர்கள் என 2 லட்சத்து 40 ஆயிரத்து 619 வாக்காளர்கள் உள்ளனர்.

    மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஏற்கனவே 1,695 வாக்குச் சாவடிகள் இருந்தது. தற்போது பத்மநாபபுரம் தொகுதியில் 3 வாக்குச்சா வடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது 1,698 வாக்குச்சாவடிகள் உள்ளது. கன்னியாகுமரி தொகுதி யில் 310 வாக்கு சாவடிகளும், நாகர்கோவில் தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும், குளச்சல் தொகுதியில் 300 வாக்குச்சாவடிகளும், பத்மநாபபுரம் தொகுதியில் 273 வாக்குச்சாவடிகளும், விளவங்கோடு தொகுதியில் 272 வாக்குச்சாவடிகளும், கிள்ளியூர் தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளும் உள்ளன.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட காரணங்க ளுக்கான விண்ணப்பங்கள் வரு கிற 4-ந்தேதி, 5-ந்தேதி, 18-ந்தேதி, 19-ந்தேதி பெறப்படுகிறது. பொது மக்கள் அன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்து கொள்வதுடன் வாக்காளர் பட்டியில் குறைபாடுகள் இருந்தால் நேரில் வந்து நிவர்த்தி செய்யலாம். வாக்களர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தல் பணிக்கு அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×