search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் தொகுதியில் 1841 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்க விண்ணப்பம்
    X

    கோப்புபடம்.

    பல்லடம் தொகுதியில் 1841 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்க விண்ணப்பம்

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்றது.
    • 290 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் சட்டமன்ற தொகுதி 9.11.22ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி 1லட்சத்து90 ஆயிரத்து379 ஆண்களும், 1லட்சத்து94ஆயிரத்து38 பெண்களும், 69 திருநங்கைகளும் ஆக மொத்தம் 3லட்சத்து 84 ஆயிரத்து486 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த 2 நாள் முகாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்றது. அதில் நேரடியாகவும் மற்றும் இணையதளம் மூலமாகவும் 1841 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.

    அதே போல் 290 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருத்தம் மற்றும் குடிமாற்றத்திற்காக 816 பேர் விண்ணப்பித்துள்ளனர். முகாமில் நேரடியாக 2218 விண்ணப்பங்களும், இணையதளம் மூலமாக 729 விண்ணப்பங்களும் ஆக மொத்தம் 2947 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று பல்லடம் தாசில்தார் நந்தகோபால் தெரிவித்தார்.

    மேலும் வரைவு வாக்காளர் பட்டியிலில் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம், பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கு வருகிற 8.12.22 வரை அனைத்து வாக்குப்பதிவு மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். வருகிற 26-ந் தேதி மற்றும் 27-ந் தேதி ஆகிய 2 நாட்களும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 5.1.23 அன்று வெளியிடப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதற்கிடையே பல்லடம் நகராட்சி பகுதியில் 253 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கவும், ஒருவர் நீக்கத்திற்கும்,திருத்தம் மற்றும் குடிமாற்றத்திற்காக 65 பேரும் ஆக மொத்தம் 319 பேர் விண்ணப்பித்துள்ளனர்.மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த முகாமில் தங்களது ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்தார்.

    Next Story
    ×