search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம்
    X

    ஆலோசனைக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியலை அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

    வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம்

    • விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடந்தது.
    • கிளை வாரியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

    சிவகாசி,

    விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனைக்கூட்டம் திருத்தங்கல் பாலாஜி நகரில் நடந்தது. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கினார்.

    அவர் பேசுகையில், கடந்த 2 நாட்களாக வாக்காளர் சேர்ப்பது குறித்து சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாம் வருகிற 26, 27-ந் தேதிகளில் நடைபெறுகிறது. தங்கள் பகுதியில் உள்ள 17 வயது பூர்த்தியடைந்தவர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்க வேண்டும்.

    விடுபட்டுள்ள வாக்கா ளர்கள் பெயர்களை சேருங்கள். வெளியூர் மாறுத லானவர்கள், இறந்தவர்கள் உள்ளிட்டவர்கள் பெயர்களை நீக்கம் செய்யுங்கள். தற்போது உள்ள வாக்காளர்கள் பெயர்கள் உள்ளதா? எனவும் சரி பாருங்கள்,

    வாக்காளர்கள் சேர்க்கும்போது ஆதார் அட்டை ஜெராக்ஸ் இணைக்கவும். கூட்டத்திற்கு வந்துள்ள நகர ஒன்றிய, பேரூர், கிளை வாரியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

    ஊராட்சி மன்ற தலை வர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பிற அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தகவல் தெரிவித்து வாக்காளர்கள் சேர்க்கும் முகாமில் அதிகப்படியான வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், வெங்கடேஷ், கருப்பசாமி, சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், சாமி என்ற ராஜ அபினேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×