search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "terrorist"

    • இந்திய ராணுவம் மூன்று ஊடுருவல் முயற்சிகளை முறியடித்தது.
    • இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உயிரிழப்பு,

    ஸ்ரீநகர்:

    கடந்த 72 மணி நேரத்தில் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளின் மூன்று ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப் பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அக்னூர் செக்டரில் உள்ள பல்லன்வாலா பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. முன்னதாக ஆகஸ்ட் 21 அன்று, நௌஷேராவின் ஜங்கர் செக்டாரில் பணியில் இருந்த ராணுவ வீரர்கள், அதிகாலையில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் நடமாட்டத்தைக் கண்டனர். அவர்களில் ஒருவன் இந்திய போஸ்ட் அருகே வந்து வேலியை வெட்ட முயன்றான்.

    இதையடுத்து அந்த பயங்கரவாதி மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உயிருடன் பிடித்தனர். உடனடியாக அந்த பயங்கரவாதிக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு உயிர்காக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிடிபட்ட பயங்கரவாதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி மாவட்டத்தில் உள்ள சப்ஸ்கோட் கிராமத்தில் வசிக்கும் தபாரக் உசேன் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

    மேலும் நடைபெற்ற விசாரணையில், இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததை பயங்கரவாதி ஒப்புக்கொண்டான். பாகிஸ்தான் உளவுத்துறை சேர்ந்த கர்னல் யூனுஸ் சௌத்ரி என்பவர் தனக்கு 30,000 பாகிஸ்தான் ரூபாயை கொடுத்து அனுப்பியதாக தபாரக் உசேன் தெரிவித்தான்.

    இந்நிலையில் கடந்த 22ந் தேதி ஜம்முகாஷ்மீரின் நௌஷேரா மாவட்டத்தின் லாம் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்ட முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் கண்ணிவெடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்களை கைப்பற்றிய ராணுவ வீரர்கள் ஏராளமான வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர்.

    • துருக்கி, இஸ்தான்புல் சென்று ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்ததாக பயங்கரவாதி தகவல்.
    • கைதான பயங்கரவாதிக்கு துருக்கி நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். பயங்கரவாதி ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைதான ஐ.எஸ். பயங்கரவாதி மத்திய ஆசிய நாடு ஒன்றை சேர்ந்தவர் என ரஷிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    பயங்கரவாதியிடம் நடத்தி விசாரணையில் துருக்கி, இஸ்தான்புல் சென்று ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்ததாக தெரிவித்துள்ளார்.

    மேலும், கைதான பயங்கரவாதிக்கு துருக்கி நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவல் ஆய்வாளர் ஃபரூக் அகமது மிர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை.
    • சிடிசி லெத்போராவில் உள்ள ஐஆர்பி 23வது பட்டாலியனில் ஃபரூக் மிர் நியமிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அருகே பாம்பூரில் காவல் உதவி ஆய்வாளரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

    காவல் ஆய்வாளர் ஃபரூக் அகமது மிர் மீதான தாக்குதல் நேற்று இரவில் பாம்பூர் பகுதியில் உள்ள சம்பூரா என்ற இடத்தில் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    சிடிசி லெத்போராவில் உள்ள ஐஆர்பி 23-வது பட்டாலியனில் ஃபரூக் மிர் நியமிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஷோபியானைச் சேர்ந்த ஜான் முகமது லோன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
    • குல்காம் மாவட்டத்தில் ஜூன் 2-ம் தேதி வங்கி மேலாளர் விஜய் குமாரைக் கொன்றதில் பயங்கரவாதி ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த விஜய் குமார் என்பவர் கடந்த 2-ம் தேதி காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இந்நிலையில், வங்கி மேலாளரைக் குறிவைத்து கொல்லப்பட்ட பயங்கரவாதி நேற்றிரவு ஷோபியானில் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் ஒருவன் என காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

    கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஷோபியானைச் சேர்ந்த ஜான் முகமது லோன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்ற பயங்கரவாத குற்றங்களைத் தவிர குல்காம் மாவட்டத்தில் ஜூன் 2-ம் தேதி வங்கி மேலாளர் விஜய் குமாரைக் கொன்றதில் அவர் ஈடுபட்டுள்ளார் என்று போலீசார் தனது டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சோபூர் என்கவுண்டரில் இருந்து தப்பிய அதே பயங்கவாதக் குழு ஆகும். அவர்களின் நடமாட்டத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
    • கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதி அனந்த்நாக் மாவட்டத்தில் வசிக்கும் சுஃபியான் என்கிற அடில் ஹூசைன் மிர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி உள்பட இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.

    இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார் கூறியதாவது:-

    ஸ்ரீநகர் நகரின் பெமினா பகுதியில் நடந்த என்கவுண்டரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டர் நடவடிக்கையில் போலீஸ் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

    என்கவுண்டர் நடந்த பகுதியில் இருந்து ஆவணங்கள் மற்றும் பிற பொருட்களை ஆராய்ந்ததில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானில் உள்ள பைசலாபாத்தில் வசிக்கும் அப்துல்லா கவுஜ்ரி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    ஏற்கவனே நடந்த சோபூர் என்கவுண்டரில் இருந்து தப்பிய அதே பயங்கவாதக் குழு ஆகும். அவர்களின் நடமாட்டத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

    கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதி அனந்த்நாக் மாவட்டத்தில் வசிக்கும் சுஃபியான் என்கிற அடில் ஹூசைன் மிர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராணுவத்துடன் இணைந்து காஷ்மீர் போலீசாரும் அப்பகுதியில் இன்று அதிகாலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
    • பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக சிறுபான்மையினர் மீது பயங்கராவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். இதில் 8 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டனர். இதையடுத்து பயங்கரவாதிகளை தடுப்பதற்காக, ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவத்துடன் இணைந்து காஷ்மீர் போலீசாரும் அப்பகுதியில் இன்று அதிகாலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    சக்ரதாஷ் கண்டி என்ற பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியான துபைல், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் என இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இன்னும் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானில் தலீபான், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் அதிரடி தாக்குதல்கள் நடத்தியது. இவற்றில் 25 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
    காபூல்:

    அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் மற்றும் நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின் மீது அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி அதிபயங்கர தாக்குதல்களை நடத்தினர். 3 ஆயிரம் அப்பாவி மக்கள் இந்த தாக்குதலில் பலியானது உலக வரலாற்றில் கரும்புள்ளியாக பதிவாகி உள்ளது.

    இந்த தாக்குதல்களை நடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுத்ததால், அந்த நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு ஆட்சி நடத்தி வந்த தலீபான்களை அப்புறப்படுத்தியது. மக்களாட்சியை கொண்டுவந்தது. ஆனாலும் 18 ஆண்டுகளாக போராடியும் தலீபான் பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இன்னும் அங்கு தலீபான்கள் பதுங்கி இருந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்த உள்நாட்டுப்போரை பயன்படுத்தி அங்கு ஆங்காங்கே ஐ.எஸ். பயங்கரவாதிகளும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த நிலையில் தலீபான், ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கையை ராணுவம் முடுக்கிவிட்டுள்ளது. அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    காந்தஹார் மாகாணத்தில் ஷாவாலி கோட் மாவட்டத்தின் கரீ பகுதியில் பதுங்கி இருந்த தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவம் நேற்று முன்தினம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பயங்கரவாதிகளின் வாகனங்கள் அழிக்கப்பட்டன.

    இந்த தாக்குதலை தொடர்ந்து காந்தஹாரில் தலீபான்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    குண்டூஸ் மாகாணத்தின் கான் அபாத் மற்றும் அதையொட்டிய அக்டாஷ் மாவட்டங்களில் பதுங்கி இருந்த தலீபான் பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்டு ராணுவம் நேற்று அதிரடி தாக்குதல்களை நடத்தியது. இதில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

    12-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ராணுவ தரப்பில் எந்தவொரு சேதமும் இல்லை என தகவல்கள் கூறுகின்றன.

    நங்கர்ஹார் மாகாணத்தின் சபார்ஹர் மாவட்டத்தில் மலைப்பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு ராணுவம் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியது. இதில் 4 பயங்கரவாதிகள் பலியாகினர். மற்றவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் ஓட்டம் எடுத்து விட்டனர்.

    ஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் தலீபான் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவு பெற்ற தீவிரவாத இயக்கம் சதி திட்டம் தீட்டி உள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. #Srilankablast #TN
    சென்னை:

    நியூசிலாந்தில் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பழிவாங்கும் வகையிலேயே குறிப்பிட்ட தீவிரவாத இயக்கம் உலக நாடுகளின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்புவதற்காக இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. தேசிய புலனாய்வு முகமை வட்டாரங்கள் இந்த தகவலை தெரிவித்தன.

    தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்படுபவர்களை கண்காணிக்கும் பணியில் தேசிய புலனாய்வு பிரிவு படையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். கடந்த 6 மாதத்துக்கு முன்பு தமிழகத்தில் பிடிபட்ட ஐ.எஸ். ஆதரவாளர் ஒருவர் இலங்கையில் குண்டு வைத்துள்ள தீவிரவாத இயக்கம் பற்றி திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.



    கிறிஸ்தவ தேவாலயங்களை குறி வைத்து மிகப்பெரிய தாக்குதல் சம்பவத்துக்கு சதித்திட்டம் நடப்பதாகவும், இதற்காக தமிழகத்தில் இளைஞர்கள் சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வாலிபர் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் அசம்பாவித சம்பவங்களை நிகழ்த்துவது சாத்தியமில்லை என்று மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்கள் கைவிரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு தீவிரவாதிகள் குறிவைத்திருக்கும் திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக கடந்த 6 மாதத்துக்கு முன்பே என்.ஐ.ஏ. அமைப்பினர் எச்சரிக்கை விடுத்து அறிக்கையும் அளித்துள்ளனர். இதையடுத்து உளவுப்பிரிவு போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    புதிய தீவிரவாத அமைப்பின் இலக்கு, ஏதாவது ஒரு இடத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தாக்குதல் நடத்துவது தான் என்று கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் இலங்கையை தேர்ந்தெடுத்துள்ளனர்.

    அந்த நாட்டில் விடுதலைப் புலிகளின் பின்னடைவுக்கு பின்னர் இலங்கையில் திரும்பிய அமைதி மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை புதிய தீவிரவாத இயக்கம் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளது.

    இலங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சில சிறிய அளவிலான குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின. அப்போதே இந்திய உளவு துறை இலங்கையை உஷார்படுத்தியது. ஆனால் அந்த நாடு இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பாதுகாப்பு வி‌ஷயத்தில் கோட்டைவிட்டதாலேயே மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேர்ந்துள்ளது. #Srilankablast #TN

    உத்தரப்பிரதேசம் அருகே காலிந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் கழிவறையில் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. #KalindiExpress
    கான்பூர்:

    உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர்-பிவானி இடையே ஓடும் காலிந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 7.10 மணிக்கு பாரஜ் பூர் ரெயில் நிலையத்துக்கு வந்து நின்றது.

    அப்போது அந்த ரெயிலின் கழிவறையில் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் ரெயிலின் மேல் கூரையில் உள்ள பிளைவுட் சேதம் அடைந்தது.

    கழிவறையில் வெடித்ததால் பயணிகள் காயமின்றி தப்பினர். குண்டு வெடித்த சத்தம் கேட்டதும் ரெயில்வே போலீசாரும், அதிகாரிகளும் விரைந்து வந்து பார்வையிட்டனர். அது பட்டாசை விட சற்று சக்தி வாய்ந்தது என தெரிவித்தனர். இதனால் பயணிகள் தப்பினர்.

    குண்டு வெடித்ததும் புல்வாமா தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பெயரில் ரெயில் நிலையத்துக்கு மிரட்டல் வந்தது.

    சம்பவ இடத்துக்கு பயங்கரவாத தடுப்பு படை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சிறிது நேர தாமதத்துக்குப் பின் பலத்த பாதுகாப்புடன் ரெயில் புறப்பட்டுச் சென்றது. #KalindiExpress
    ஜம்மு காஷ்மீரில் 40 வீரர்கள் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, இதற்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசாருக்கு எதிராக ஐநா சபையில் பிரான்ஸ் தீர்மானம் கொண்டு வர உள்ளது. #JammuKashmir #CRPF #PulwamaAttack

    பாரீஸ்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அசார் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. தற்போது இவன் தலைமறைவாக இருக்கிறான்.

    இந்த நிலையில் மசூத் அசாரை ஐ.நா. சபையில் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க பிரான்ஸ் தீவிரமாக உள்ளது.

    அதற்காக ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டில் இங்கிலாந்து பிரான்ஸ் ஆதரவுடன் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.

    ஆனால் தனது ‘வீட்டோ’ சிறப்பு அதிகாரம் மூலம் சீனா தடுத்து விட்டது. எனவே அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தற்போது பங்கரவாதி மசூத் அசாருக்கு எதிராக 2-வது தடவையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்னும் சில நாட்களில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

    அதற்கான நடவடிக்கையில் பிரான்ஸ் அரசின் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீர்மானம் கொண்டு வருவது குறித்து பிரான்ஸ் அதிபர் மெக்ரானின் ஆலோசகர் பிலிப் எடின் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாவுடன் நேற்று டெலிபோனில் ஆலோசனை நடத்தினார்.

    இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். #JammuKashmir #CRPF #PulwamaAttack

    தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், பாடம் கற்பிக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார். #VenkaiahNaidu #PulwamaAttack
    பிரயாக்ராஜ்:

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கங்கையில் புனித நீராடினார். பின்னர் அங்குள்ள புகழ் பெற்ற அனுமன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அப்போது வெங்கையா நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் கோழைத்தனமானது. பயங்கரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இதுபோன்ற நடவடிக்கைகளை வேருடன் அகற்றுவதற்கு இதுவே சரியான தருணம். பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடி தரவேண்டும்.

    உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீண் ஆகிவிடக்கூடாது. இந்த தாக்குதலை நடத்தியவர்களுக்கு அதற்குரிய பலனை திருப்பித்தர வேண்டும். பயங்கரவாதிகள் நம்மை பயமுறுத்தவும், நமது துணிச்சலை குறைக்கவும் விரும்புகிறார்கள். எனவே நாம் துவண்டுவிடவும் கூடாது, பலமிழந்துவிடவும் கூடாது.

    அவர்கள் கொடுத்ததை அவர்களுக்கே நாம் திருப்பித்தர வேண்டும். இதுபோன்ற கோழைத்தனமான செயலை அவர்கள் மீண்டும் செய்வதற்கு முன்பு இரண்டு முறை யோசிக்கும் வகையில் இந்த துரோகிகளுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும். இந்தியா மிகப்பெரிய நாடு. இந்தியா முதலில் எந்த நாட்டையும் தாக்கியது இல்லை என்பதற்கு வரலாறே சான்றாக உள்ளது.

    உலக நாடுகளின் மக்கள் இந்த தாக்குதலை கண்டித்துள்ளனர். ஆனால் அது எந்த நோக்கத்தையும் பூர்த்தி செய்யாது. இந்த பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈராக்கில் ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 5 பேர் பலியானார்கள்.
    பாக்தாத்:

    ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்தார். ஆனால் சமீபகாலமாக அங்கு ஐ.எஸ். அமைப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது. அவர்களை ஒடுக்க ஈராக் ராணுவ வீரர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் மொசூல் நகரில் உள்ள குகைகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் ராணுவ வீரர்கள் அந்த பகுதியை சுற்றிவளைத்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 5 பயங்கரவாதிகள் பலியாகினர். மேலும் பயங்கரவாதிகளின் 8 குகைகள் நிர்மூலமாக்கப்பட்டன. 
    ×