search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bomb explosion"

    • சாலையோரத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடிக்க தொடங்கின.
    • படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    டமாஸ்கஸ்:

    தென்மேற்கு சிரியாவின் டரா மாகாணம் அருகே சாலையில் குழந்தைகள் சிலர் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கே சாலையோரத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடிக்க தொடங்கின. பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன.

    இந்த வெடிகுண்டு விபத்தில் சிக்கி 7 குழந்தைகள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • ஆலமரத்தின் அடியில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • குண்டு வெடிப்பில் கார்கள் பைக்குகள் மற்றும் போலீஸ் நிலைய கதவு ஜன்னல் மற்றும் சுவர்கள் சேதம் அடைந்தன.

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கெங்காதர நல்லூரில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியில் பாறைகளை உடைக்க பயன்படுத்தும் மருந்து பொருட்களை உரிமம் இல்லாமல் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அங்கிருந்து 713 கிலோ எடையுள்ள வெடி தயாரிக்கும் பொருட்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். அதன் பின்னர் வெடிபொருட்களை போலீசார் அழித்துவிட்டனர். மீதமிருந்த 250 கிராம் எடையுள்ள வெடிபொருட்களை காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஆலமரத்தின் அடியில் பள்ளம் தோண்டி புதைத்து அதன் மீது கான்கிரீட் அமைத்து இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு ஆலமரத்தின் அடியில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் பைக்குகள் மற்றும் காவல் நிலைய கதவு ஜன்னல் மற்றும் சுவர்கள் சேதம் அடைந்தன.

    அதிர்ஷ்டவசமாக அப்போது பணியில் இருந்த போலீசார் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்த சித்தூர் டி.எஸ்.பி. சுதாகர் ரெட்டி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், "இந்த வெடிகுண்டு விபத்து காரணமாக போலீசாருக்கோ பொதுமக்களுக்கோ எந்த காயமும் ஏற்படவில்லை.

    வெடிகுண்டு விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெடிபொருட்களை மரத்துக்கு அடியில் புதைத்து வைத்த போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

    சமூக விரோதிகள் யாராவது சதி செயலில் ஈடுபட்டார்களா? அல்லது எதேச்சையாக நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாட்டு வெடிகுண்டு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
    • 4 பேரை போலீசார்தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரம் இந்திரா நகரை சேர்ந்தவர் மலையரசி. நேற்று இரவு இவருக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல்படப்பு பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனே சேத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடம் வந்து பார்த்தபோது வைக்கோல்படப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சுந்தரம் கொடுத்த புகாரின்பேரில் சேத்தூர் புறக்காவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.இதில் அதே பகுதியை சேர்ந்த மகேஷ் (வயது 19), காளிராஜ் (21), லிங்கராஜா (21), மதன்ராஜ் (24) ஆகிய 4 பேர் நாட்டு வெடிகுண்டுகளை வைக்கோல் படப்பில் பதுக்கி வைத்தது தெரியவந்தது. 4 பேரை போலீசார்தேடி வருகின்றனர்.

    ஆப்கானிஸ்தானில் ராணுவ அகாடமியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர்.
    காபூல் நகரில் உள்ள ராணுவ அகாடமியில் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு பயங்கரவாதி ஒருவன் தாக்குதலை நடத்த முயற்சி செய்துள்ளான். அப்போது அவனை பாதுகாப்பு படையினர் அடையாளம் கண்டு தடுக்க முயற்சி செய்த போது அவன் வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான். 

    இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர் என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான பேச்சுவார்த்தையை அமெரிக்கா மேற்கொண்டாலும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல் தொடர்கிறது.
    ஆப்கானிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 5 குழந்தைகள் பலியானார்கள்.
    காபூல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்னும் தலீபான் பயங்கரவாதிகளின் வெறிச்செயல்கள் முடிவுக்கு வந்தபாடில்லை. அங்கு பரவலாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் அவர்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அங்குள்ள ஹெராத் மாகாணம், ஒபே மாவட்ட நிர்வாக அலுவலகத்தின் அருகே நேற்று மோட்டார் சைக்கிளில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பால் அந்தப் பகுதியே குலுங்கியது.

    மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரியின் கார், சம்பவ இடத்தை கடந்து சென்றபோது குண்டு வெடிப்பு நடந்தது. அப்போது அந்தப் பகுதியில் இருந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓட்டம் எடுத்தனர். எனினும் இந்தக் குண்டுவெடிப்பில் 5 குழந்தைகள் பலியானதாகவும், 20 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

    இந்த குண்டுவெடிப்பு குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு படையினரும், பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களில் மாவட்ட ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த குண்டு வெடிப்பில் மாவட்ட நிர்வாக அதிகாரியின் வாகனமும், பொது மக்களின் வாகனங்களும் சிக்கி சேதம் அடைந்தன.

    இந்த குண்டு வெடிப்புக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் தலீபான் பயங்கரவாதிகள்தான் இந்த குண்டுவெடிப்பை நடத்தி இருக்கக்கூடும் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முன்னதாக நேற்று முன்தினம் இரவு குண்டூஸ் மாகாணத்தின் தலைநகரான குண்டூஸ் அருகே ஆக் மஸ்ஜித் பகுதியில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்குமிடத்தை குறிவைத்து ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 6 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
    பாகிஸ்தானில் உள்ள மசூதி அருகே ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி 4 போலீசார் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    கராச்சி:

    பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாநிலம் தலைநகரான குவெட்டாவில் உள்ள சாட்டிலைட் நகரில் உள்ள தொழுகைக்காக கூடியிருந்த மசூதி அருகே நேற்று இரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. குண்டுவெடிப்பில் சுற்றியிருந்த கடைகள், கட்டிடங்கள் சேதமடைந்தன.

    இச்சம்பவத்தில் 4 போலீசார் உடல்சிதறி பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.



    தகவலறிந்து ராணுவத்தினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்தவர்களை மருத்துவ மனைக்குக் கொண்டுச் சென்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  விசாரணையில், ரிமோட் மூலம் குண்டு வெடிக்கச் செய்துள்ளது தெரியவந்தது.

    பலுசிஸ்தானில் கடந்த 3 நாட்களுக்கு முன் பயங்கரவாதிகள் நட்சத்திர ஓட்டலில் நுழைந்து தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது
    ஐ.சி.எப்.பில் பாழடைந்த கட்டிடத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிறுமி காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வில்லிவாக்கம்:

    ஐ.சி.எப். ராஜீவ்காந்தி நகர் 1-வது தெருவில் உள்ள பாழடைந்த கட்டிடம் அருகே அப்பகுதியை சேர்ந்த சிறுமி காயத்ரி (வயது 11) நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று வெடிபொருட்கள் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காயத்ரி படுகாயம் அடைந்தார்.

    அவளை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த ஐ.சி.எப். போலீசார் பாழடைந்த கட்டிடத்தை ஆய்வு செய்த போது 4 நாட்டுவெடிகுண்டுகள் பதுக்கி வைக்கபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கியவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகிஸ்தானில் உள்ள சந்தையில் இன்று காலை ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 16 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். #PakistanBombBlast

    கராச்சி:

    பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாநிலத்தின் தலைநகரான குவெட்டாவில் ஹசார்கஞ்சி எனும் பகுதி உள்ளது. இங்கு ஹசாரா இனமக்கள் அதிக அளவில் உள்ளனர்.

    இங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கு கூடியிருந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர்.

    குண்டுவெடிப்பில் அங்கிருந்த பல கடைகள், கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்தன. மார்க்கெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நொறுங்கின.


    இச்சம்பவத்தில் 16 பேர் உடல்சிதறி பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் ராணுவத்தினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

    இந்நிலையில் இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanBombBlast

    உத்தரப்பிரதேசம் அருகே காலிந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் கழிவறையில் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. #KalindiExpress
    கான்பூர்:

    உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர்-பிவானி இடையே ஓடும் காலிந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 7.10 மணிக்கு பாரஜ் பூர் ரெயில் நிலையத்துக்கு வந்து நின்றது.

    அப்போது அந்த ரெயிலின் கழிவறையில் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் ரெயிலின் மேல் கூரையில் உள்ள பிளைவுட் சேதம் அடைந்தது.

    கழிவறையில் வெடித்ததால் பயணிகள் காயமின்றி தப்பினர். குண்டு வெடித்த சத்தம் கேட்டதும் ரெயில்வே போலீசாரும், அதிகாரிகளும் விரைந்து வந்து பார்வையிட்டனர். அது பட்டாசை விட சற்று சக்தி வாய்ந்தது என தெரிவித்தனர். இதனால் பயணிகள் தப்பினர்.

    குண்டு வெடித்ததும் புல்வாமா தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பெயரில் ரெயில் நிலையத்துக்கு மிரட்டல் வந்தது.

    சம்பவ இடத்துக்கு பயங்கரவாத தடுப்பு படை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சிறிது நேர தாமதத்துக்குப் பின் பலத்த பாதுகாப்புடன் ரெயில் புறப்பட்டுச் சென்றது. #KalindiExpress
    ×