நாட்டு வெடிகுண்டு வெடித்து தீ விபத்து

நாட்டு வெடிகுண்டு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. 4 பேரை போலீசார்தேடி வருகின்றனர்.
நாட்டு வெடிகுண்டு வெடித்து தீ விபத்து
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரம் இந்திரா நகரை சேர்ந்தவர் மலையரசி. நேற்று இரவு இவருக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல்படப்பு பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனே சேத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடம் வந்து பார்த்தபோது வைக்கோல்படப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சுந்தரம் கொடுத்த புகாரின்பேரில் சேத்தூர் புறக்காவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.இதில் அதே பகுதியை சேர்ந்த மகேஷ் (வயது 19), காளிராஜ் (21), லிங்கராஜா (21), மதன்ராஜ் (24) ஆகிய 4 பேர் நாட்டு வெடிகுண்டுகளை வைக்கோல் படப்பில் பதுக்கி வைத்தது தெரியவந்தது. 4 பேரை போலீசார்தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com