என் மலர்
நீங்கள் தேடியது "Children Killed"
சூடானில் வெடிகுண்டில் இருந்த தாமிரத்தை பிரித்து எடுப்பதற்காக சிறுவர்கள் முயன்ற போது எதிர்பாராத வகையில் அந்த குண்டு வெடித்து சிதறியது. இதில் 8 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர். #Sudan #ScrapMetal #Blast
கார்டூம்:
சூடானில் கடும் பொருளாதார நெருக்கடி நீடிப்பதால் உணவு பொருட்களின் விலை உச்சத்தில் இருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் பணத்துக்காக ஆபத்தான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தலைநகர் கார்டூமில் உள்ள ஓம்டுர்மான் நகரில் ராணுவ பயிற்சி மையத்துக்கு அருகே வெடிகுண்டு ஒன்றை சிறுவர்கள் கண்டெடுத்தனர். பின்னர் அவர்கள் அந்த வெடிகுண்டில் இருந்த தாமிரத்தை பிரித்து எடுப்பதற்காக அதனை செயலிழக்க செய்ய முயன்றனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த குண்டு வெடித்து சிதறியது. இதில் 8 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர். #Sudan #ScrapMetal #Blast

டெல்லியில் இன்று மூன்றடுக்கு வீடு இடிந்து விழுந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். #childrenkilled #Delhibuildingcollapse
புதுடெல்லி:
வடமேற்கு டெல்லி, அசோக் விஹார் பகுதியில் ஒரு மூன்றடுக்கு மாடி வீடு இன்று காலை 9.30 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் வசித்துவந்த பல குடும்பத்தினர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இடிபாடுகளில் இருந்து சிலரை காயங்களுடன் மீட்டனர். மேலும், 10 வயதுக்குட்பட்ட இரு சகோதர்கள், 5 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன் மற்றும் அவனது சகோதரி, ஒரு பெண் ஆகிய 5 பேர் பிரேதமாக மீட்கப்பட்டனர்.
சுமார் 20 ஆண்டுகள் பழைமையான அந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. #childrenkilled #Delhibuildingcollapse