search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்கானிஸ்தான்"

    • இந்த மாதம் தொடக்கத்தில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

    ஆப்கானிஸ்தானில் இன்று காலை 5.44 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது.

    நிலநடுக்கம் 124 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    இந்த மாதத்தின் தொடக்கத்திலும் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கும் ஏற்படுகிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6.3 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹெரத் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஆயிரக்காணக்கானோர் காயம் அடைந்தனர். மேலும் வீடுகளை இழந்தனர்.

    அம்மாகாண மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப சுமார் ஒருமாத காலம் ஆனது. நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டமைப்புகளை சீரமைக்க 400 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ரமலான் தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் பல குண்டு வெடிப்பு.
    • காலை 8 மணியளவில் வங்கி வெளியே காத்திருந்த மக்களை குறிவைத்து குண்டு வெடித்துள்ளது.

    ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் இன்று நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12 பேர் பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    மார்ச் 11 அன்று இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் பல குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில், சில சம்பவங்களை தலிபான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    மத்திய காந்தஹார் நகரத்தில் உள்ள நியூ காபூல் வங்கிக் கிளைக்கு வெளியே இன்று காலை 8 மணியளவில் காத்திருந்த மக்கள் குழுவை குறிவைத்து வெடித்துள்ளது.

    இதுகுறித்து கந்தஹார் மாகாணத்தின் தகவல் மற்றும் கலாச்சார இயக்குனர் இனாமுல்லா சமங்கானி கூறுகையில்" தற்கொலைப் படை தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பொதுவாக மக்கள் தங்கள் சம்பளத்தைப் பெறுவதற்காக வங்கியில் கூடுகிறார்கள். அப்போது குண்டு வெடித்துள்ளது. காயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்ட நகரின் மருத்துவமனையில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது" என்றார்.

    இதற்கிடையே, தலிபான் அதிகாரிகள் வங்கிக்கு வெளியே உள்ள பகுதியை சுற்றி வளைத்தனர். பத்திரிக்கையாளர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

    இருப்பினும், குண்டுவெடிப்பை அடுத்து ஆம்புலன்ஸ்களில் மயக்கமடைந்தவர்கள் அல்லது இறந்தவர்களின் உடல்கள் ஏற்றப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் அப்பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தனர், அங்கு இரத்தம், உடைகள் மற்றும் காலணிகள் தரையில் சிதறிக்கிடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.
    • முதல் போட்டியில் அயர்லாந்தும், 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றன.

    ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக இப்ராகிம் ஜட்ரான் 72 ரன்கள் எடுத்தார். பின்னர் விளையாடிய அயர்லாந்து 17.2 ஓவரில் 98 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ஒமர்சாய் 4 விக்கெட்டும், நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இந்த வெற்றி மூலம் மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை ஆப்கானிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் அயர்லாந்தும், 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றன.

    • வங்கதேசத்திற்கு எதிரான அடுத்த டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ஹசரங்கா இடைநீக்கம் செய்யப்படுவார்.
    • 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என இலங்கை கைப்பற்றியது. இதில் ஹசரங்கா தொடர் நாயகன் விருதை பெற்றார்.

    இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா 2 போட்டிகளில் விளையாட தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

    தம்புல்லாவில் நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், தான் வீசிய பந்துக்கு NO BALL கொடுத்ததற்கு கள நடுவர் லிண்டன் ஹனிபல்லிடம் ஆவேசமாக பேசியதற்காக வனிந்து ஹசரங்காவிற்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால், வங்கதேசத்திற்கு எதிரான அடுத்த டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ஹசரங்கா இடைநீக்கம் செய்யப்படுவார்.

    ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என இலங்கை கைப்பற்றியது. இதில் ஹசரங்கா தொடர் நாயகன் விருதை பெற்றார்.

    • நிலப்பரப்பிலிருந்து 15 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணர்வு.
    • சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    ஆப்கானிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தானிம் மசார் இ சரீஃப் என்ற நகரத்தில் இன்று மாலை 4.50 மணியளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இதன் ரிக்டர் அளவ 5.1 ஆக பதிவாகியுள்ளது.

    இது தொடர்பாக பதிவு வெளியிட்டுள்ள இந்தியாவின் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம், நிலப்பரப்பிலிருந்து 15 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது.

    இருப்பினும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்களால் பொது மக்கள் பீதியமடைந்துள்ளனர்.

    • இந்திய பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகின.
    • விபத்துக்குள்ளான விமானம் இந்தியாவை சேர்ந்ததல்ல என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் இருந்து ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு நள்ளிரவு பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானம்

    ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பதக்ஸ்தான் மாகாணத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டானது. ரேடாரில் இருந்து பயணிகள் விமானம் மாயமானது. விமானத்தைத் தொடர்பு கொள்ள அதிகாரிகள் முயற்சி செய்தும் முடியவில்லை.

    இதற்கிடையே, இந்திய பயணிகள் விமானம் தோப்கானே மலைப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இதுதொடர்பாக வடகிழக்கு மாகாண தகவல் மற்றும் கலாசாரத்துறை இயக்குனர் ஜபிஹூல்லா அமிரி கூறுகையில், இந்திய பயணிகள் விமானம் பதக்ஸ்கானில் உள்ள மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி உள்ளது. அப்பகுதிக்கு மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர் என்றார்.

    விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர்? இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்து விமானம் புறப்பட் டது? எந்த நிறுவனத்தின் விமானம்? போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. மேலும் இந்திய விமான பயணிகள் கதி என்ன என்பதும் தெரியவில்லை.

    விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக்குழுவினர் அனுப்பப்பட்டு உள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்நிலையில், ரஷியா நோக்கிச் சென்று விபத்தில் சிக்கிய விமானம் இந்தியாவைச் சேர்ந்ததல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    விபத்தில் சிக்கிய விமானம் இந்திய விமானமும் அல்ல, இந்தியாவில் இருந்து சென்ற விமானமும் அல்ல. அது மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சிறிய விமானம் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

    • இரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
    • ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை (ஜனவரி 11) நடைபெறவுள்ளது.

    இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பிடித்துள்ளனர். கடந்த 2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய டி20 அணியில் இடம்பெற்று இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.




    இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி விளையாட மாட்டார் என இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்து இருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி முதலாவது டி20 போட்டியில் விளையாட மாட்டார்.

    ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளில் விராட் கோலி விளையாடுவார். இந்திய அணிக்கு ரோகித் சர்மாவுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் துவக்க வீரராக களமிறங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

    • ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
    • ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

    இந்த தொடர் வரும் 11ம் தேதி தொடங்க உள்ளது. முதல் ஆட்டம் மொகாலியிலும், 2வது ஆட்டம் வரும் 14ம் தேதி இந்தூரிலும், 3வது ஆட்டம் வரும் 17ம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.

    இந்தத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.

    இந்திய அணி விவரம்:- ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, வாசிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்.

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர் வரும் 11ம் தேதி தொடங்க உள்ளது.
    • ஆப்கானிஸ்தான் அணிக்கு இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

    இந்த தொடர் வரும் 11ம் தேதி தொடங்க உள்ளது. முதல் ஆட்டம் மொகாலியிலும், 2வது ஆட்டம் வரும் 14ம் தேதி இந்தூரிலும், 3வது ஆட்டம் வரும் 17ம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.

    இந்தத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முஜீப் உர் ரஹ்மான் அணிக்கு திரும்பியுள்ளார்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார், ருத்துராஜ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • டி20 அணியில் இடம்பிடிக்க இருப்பதாக தகவல்.
    • டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடினர்.

    இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஜனவரி 11-ம் தேதி துவங்க இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 அணியில் இடம்பிடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக டி20 தொடரில் விளையாட விரும்புவதாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அறிவித்து இருந்தனர்.

     


    2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடினர். இதைத் தொடர்ந்து இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி வந்தனர்.

    இவர்களுக்கு மாற்றாக தேர்வுக்குழு யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் போன்ற வீரர்களுக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பளித்தது. 

    • ஜப்பான், ஜம்மு காஷ்மீர், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்
    • ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல்

    தஜிகிஸ்தான் நாட்டில் சனிக்கிழமை காலை 6:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

    தேசிய நிலநடுக்கவியல் மையம் அளித்த தகவலின் படி, தஜிகிஸ்தானில் காலை 6:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் ஆழம் 80 கிலோ மீட்டராக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தது. இருப்பினும் உயிர்சேதமும் பொருட்சேதமும் ஏற்படவில்லை என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    ஜப்பான், ஜம்மு காஷ்மீர், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

    • ஃபைசாபாத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கம் பூமியில் இருந்து 100 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

    ஆப்கானஸ்தானின் ஃபைசாபாத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நிலநடுக்கவியலுக்கான தேசிய ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

    முதல் நிலநடுக்கம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.28.52 மணிக்கு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஃபைசாபாத்தில் இருந்து 126 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 12.55.55 மணிக்கு இரண்டாவது முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 100 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.


     

    "03.01.2024, நள்ளிரவு 12.28.52 மணியளவில் ஃபைசாபாத்தில் இருந்து 126 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. 03.01.2024, நள்ளிரவு 12.55.55 மணியளவில் ஃபைசாபாத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி இருக்கிறது," என ஆப்கானிஸ்தானின் நிலநடுக்கவியலுக்கான தேசிய ஆணையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் தெரிவித்துள்ளது. 

    ×