search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tanjore"

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு 14-வது நாளாக இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர், ஜூன்.4-

    அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பாக தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு 14-வது நாளாக இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். அரசு, ஸ்ரீதரன், கருப்புசாமி, முனியகுமரன், தசரதன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரையை 1.1.2016 முதல் அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 14-வது நாள் உண்ணாவிரத போராட்டத்தினால் கிராமப் புறங்களில் அஞ்சல் சேவை பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் முதியோர் உதவி தொகை, விதவைகளுக்கான உதவி தொகைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    தஞ்சையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற யோகா பயிற்சியில் 340 இளநிலை போலீசார் மற்றும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் பணியாற்றும் போலீசாருக்கு அதிகளவில் பணிசுமை உள்ளதாகவும், இதனால் அவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகி வருகிறார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் போலீஸ் அதிகாரிகள் முதல் போலீஸ்காரர் வரை தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடந்தன. இது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    உயர் அதிகாரிகளின் டார்ச்சர் மற்றும் பணிசுமை காரணமாக மன அழுத்தம் போலீசாருக்கு ஏற்பட்டு தற்கொலைக்கு தூண்டப்படுவதாக தெரிய வந்தது.

    இதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள போலீசாருக்கு அவ்வப்போது யோகா பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த யோகா பயிற்சி காரணமாக மன அழுத்தம் குறைந்து தற்கொலைக்கு தூண்டப்படுவது தவிர்க்கப்படுகிறது. மேலும் போலீசார் புத்துணர்ச்சியுடன் பணியாற்றவும் உதவுகிறது.

    இந்த நிலையில் தஞ்சையில் உள்ள இளநிலை போலீஸ் மற்றும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான யோகா பயிற்சி ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது.

    இதில் தஞ்சை, வல்லம், திருவையாறு ஆகிய சப்-டிவிசன்களில் இருந்து இளநிலை போலீசார் மற்றும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 340 பேர் கலந்து கொண்டனர். காவலர்களுக்கு யோகா செய்வது குறித்த பயிற்சியை திருச்சி யோகா மாஸ்டர் ராமசாமி வழங்கினார்.

    மாமன்னன் ராஜராஜ சோழன் சிலை தஞ்சை பெரிய கோவிலுக்கு இன்று கொண்டு வரப்படுவதையடுத்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு திருட்டு போன ராஜ ராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்தரசி லோகமாதேவி ஐம்பொன் சிலைகள் குஜராத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன்படி தமிழக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை போலீசார் சிலைகளை மீட்டுள்ளனர். ரூ.150 கோடி மதிப்பிலான இந்த 2 சிலைகளும் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ரெயில் மூலம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

    இந்தநிலையில் இன்று தஞ்சை பெரிய கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.

    50 வருடங்களுக்கு முன்பு திருட்டு போன ராஜ ராஜ சோழன் சிலை, அவரது பட்டத்தரசி லோகமாதேவி சிலை தஞ்சை பெரிய கோவிலில் இருந்ததா? என்பது கூட பல பேருக்கு தெரியாது. இந்த திருட்டு சம்பவம் அவ்வாறு மூடி மறைக்கப்பட்டு இருந்தது. சிலைகள் திருட்டு போனது தெரிய வந்ததால் தமிழக சிலை தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக செயல்பட்டு தற்போது சிலைகளை மீட்டுள்ளனர்.

    இன்று ராஜ ராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நீதிமன்றத்திற்கு காலை 10 மணிக்கு கொண்டு வரப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. பின்னர் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.

    ராஜராஜ சோழன் சிலை மற்றும் லோகமாதேவி சிலைகளை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நேரில் பார்க்க ஆவலாக உள்ளனர். மேலும் மீட்ட சிலைகள் பெரிய கோவிலில் வைக்கப்படுவதால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சிலைகள் எப்பொழுதும் பார்க்கும் வகையில் பாதுகாப்பான இடத்தில் வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பால சுப்பிரமணியன் கூறியதாவது:-

    சிலை மீட்பு நிச்சயமாக வரலாற்று சாதனை தான். பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை மீட்பு குழுவினர் திறமையாக செயல்பட்டு சாதித்து காட்டியுள்ளனர். அவர்களின் கடுமையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று கூறலாம். இதுபோல் பல கோவில் சிலைகள் காணாமல் போய் உள்ளன. இந்த சிலைகளையும் இந்த அரசு மீட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவில் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே கூறியதாவது:-

    தஞ்சையில் உலக புகழ் பெற்ற பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சிலை அவருடைய பட்டத்தரசி லோகமாதேவி சிலை ஆகியவை மீட்கப்பட்டு இருப்பதால் தஞ்சை பகுதி மக்கள் மட்டுமின்றி உலகமே மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்த சிலைகளை மீட்க பல கால கட்டங்களில் பலர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனாலும் சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மற்றும் அவரது குழுவினர் சிறப்பான முயற்சி எடுத்து சிலைகளை மீட்டுள்ளனர். அவர்களின் இந்த செயல் நிச்சயம் தஞ்சை வரலாற்றில் இடம்பெறும்.

    தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கூறியதாவது:-

    மாமன்னன் ராஜ ராஜ சோழன் சிலை மீண்டும் தஞ்சைக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இழந்த தமிழர்களின் பெருமையை மீட்டுள்ளனர். ராஜராஜ சோழன் சிலை பெரிய கோவில் வளாகத்தில் மக்கள் பார்வைக்காக பாதுகாப்பாக வைக்க வேண்டும். பழமையை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டுள்ள இந்திய தொல்பொருள் துறையினர் ஏற்கனவே பெரிய கோவிலில் எந்த இடத்தில் சிலை இருந்ததோ அந்த இடத்தில் மீண்டும் சிலை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிற்ப கலை, கட்டடக் கலையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் ராஜ ராஜ சோழன். தஞ்சை பெரிய கோவிலில் இருந்து அவருடைய ஒரிஜினல் சிலை காணாமல் போய்விட்டது. அவருடைய போலி சிலையை தான் இதுவரை நாம் வழிபட்டு வந்தோம்.

    இந்நிலையில் கொள்ளை போன ராஜராஜ சோழன் சிலையை, மீட்டு தஞ்சை பெரிய கோவிலுக்கு கொண்டு வர முயற்சி செய்த முன்னாள் எம்.பி சுவாமி நாதன், நீதிபதி மகாதேவன் மற்றும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தஞ்சை பெரிய கோவிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்னர் கொள்ளையடிக்கப்பட்ட ராஜராஜ சோழன, லோகமாதா தேவி சிலைகள் குஜராத்தில் இருந்து இன்று தமிழகம் கொண்டு வரப்பட்டது.
    சென்னை:

    தஞ்சை பெரியகோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த கோவில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    இக்கோவிலின் காப்பகத்தில் 13 பஞ்சலோக சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் முக்கியத்துவம் வாய்ந்த ராஜராஜ சோழன் சிலை (உயரம் 75 செ.மீ.) மற்றும் அவரது பட்டத்து இளவரசி ராணி லோகமாதேவி சிலை (உயரம் 55 செ.மீ.) ஆகிய 2 சிலைகளும் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டதாக முன்னாள் எம்.பி. சுவாமிநாதன் புகார் தெரிவித்தார்.

    அதனடிப்படையில் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் விசாரணை நடத்தினார். அதில் ராஜராஜ சோழன் சிலையும், ராணி லோகமாதேவி சிலையும் பெரியகோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த 2 சிலைகளின் மதிப்பும் ரூ. 100 கோடிக்கு மேல் என தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் இந்த சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அவ்வப்போது ரகசியமாக பெரியகோவிலுக்கு வந்து விசாரணை நடத்தி சென்றனர்.

    அப்போது சிலை குஜராத்தில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டது. குஜராத்தில் உள்ள தாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ள ராஜராஜ சோழன் சிலை மற்றும், லோகமாதேவி சிலைகளை மீட்பதற்கு சரியான தகவல்களையும், ஆதாரங்களையும் சிலை தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக சேகரித்தனர்.

    இதைத் தொடர்ந்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் சிலைகள் குறித்து சரியான தகவல்களை எடுத்து கொண்டு குஜராத் சென்று சிலைகள் உள்ள அருங்காட்சியகத்தில் அதை ஒப்படைத்தனர். அங்கு இருந்த 2 சிலைகளும் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிலைகள் தான் என்பது தெரிந்ததும், அருங்காட்சியக நிர்வாகம் ராஜராஜ சோழன் சிலையையும், லோகமாதேவி சிலையையும் சிலை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இந்த சிலைகள் அங்கிருந்து ரெயில் மூலம் இன்று சென்னை கொண்டுவரப்பட்டது. அமைச்சர பாண்டியராஜன் சிலைகளை வரவேற்றார். மேலும், ஐஜி பொன்மானிக்க வேலை அமைச்சர் பாராட்டினார்.

    விரைவில் சிலைகள் தஞ்சைக்கு எடுத்துச் சென்று பெரிய கோவிலில் வைக்கப்பட உள்ளது. 
    வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தஞ்சையில் மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் வங்கி துறையில் செயல்பட்டு வரும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒன்பது தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    1.11.2017 முதல் வழங்கப்பட வேண்டிய 11-வது ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையில் எந்தவித நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையில் 2 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்க முடியும் என்று கூரிய இந்திய வங்கி நிர்வாகத்தை கண்டித்தும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இன்னும் ஒரு சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு வங்கியில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் வியாபாரிகள் மற்றும் சுப காரியங்கள் வைத்திருப்போர் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பணம் எடுக்க முடிவில்லை.

    தஞ்சையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தனர். தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் மண்டலத் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், இந்திய வங்கி ஊழியர் செயலாளர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சை மாவட்டத்தில் 30 தலைமை வங்கிகள் உள்ளன. 275 கிளை வங்கிகள் செயல்பட்டு வருகிறது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். தற்போது 11-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் ஏற்படாததாலும் 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் தஞ்சை மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தஞ்சை பெரிய கோவில் ராஜராஜ சோழன் சிலை குஜராத்தில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிலை தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரியகோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த கோவில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    இக்கோவிலின் காப்பகத்தில் 13 பஞ்சலோக சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் முக்கியத்துவம் வாய்ந்த ராஜராஜ சோழன் சிலை (உயரம் 75 செ.மீ.) மற்றும் அவரது பட்டத்து இளவரசி ராணி லோகமாதேவி சிலை (உயரம் 55 செ.மீ.) ஆகிய 2 சிலைகளும் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டதாக முன்னாள் எம்.பி. சுவாமிநாதன் புகார் தெரிவித்தார்.

    அதனடிப்படையில் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் விசாரணை நடத்தினார். அதில் ராஜராஜ சோழன் சிலையும், ராணி லோகமாதேவி சிலையும் பெரியகோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த 2 சிலைகளின் மதிப்பும் ரூ. 100 கோடிக்கு மேல் என தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் இந்த சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அவ்வப்போது ரகசியமாக பெரியகோவிலுக்கு வந்து விசாரணை நடத்தி சென்றனர்.



    அப்போது சிலை குஜராத்தில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் சிலை திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குஜராத்தில் உள்ள சிலைகளை மீட்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் கூறினார்.

    இந்த நிலையில் குஜராத்தில் உள்ள தாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ள ராஜராஜ சோழன் சிலை மற்றும், லோகமாதேவி சிலைகளை மீட்பதற்கு சரியான தகவல்களையும், ஆதாரங்களையும் சிலை தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக சேகரித்தனர்.

    இதைத் தொடர்ந்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் சிலைகள் குறித்து சரியான தகவல்களை எடுத்து கொண்டு குஜராத் சென்று சிலைகள் உள்ள அருங்காட்சியகத்தில் அதை ஒப்படைத்தனர். அங்கு இருந்த 2 சிலைகளும் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிலைகள் தான் என்பது தெரிந்ததும், அருங்காட்சியக நிர்வாகம் ராஜராஜ சோழன் சிலையையும், லோகமாதேவி சிலையையும் சிலை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் சிலைகளை அருங்காட்சியகத்தில் இருந்து மீட்ட போலீசார், உடனே அங்கிருந்து புறப்பட்டு சென்னை வந்தனர். தற்போது ராஜராஜ சோழன் சிலையும், லோகமாதேவி சிலையும் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த 2 சிலைகளும் நாளை மாலை தஞ்சையில் உள்ள பெரியகோவிலுக்கு எடுத்து வருதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு குறித்து தொடர்ந்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சையில் முன்னாள் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்கு வாசல் ஏ.வி.பதிநகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி என்ற புண்ணியமூர்த்தி (வயது 30). இவருக்கு திருமணம் முடிந்து விட்டது. புண்ணிய மூர்த்தி மீது 2011-ம் ஆண்டு தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்குகள், கொள்ளை வழக்குகள் உள்பட பல வழக்குகள் இருந்தன.

    பின்னர் தொடர்ந்து அந்த வழக்குகளை முடித்து விட்டு தற்போது பன்றிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் வடக்கு வாசல் பகுதியில் பன்றி இறைச்சி கடையும் வைத்து நடத்தி வந்தார்.

    தினமும் காலையில் பன்றி விற்பனைக்காக வெளியில் சென்று விட்டு பிற்பகல் வீட்டிற்கு வருவார். பின்னர் இரவு கடை வைப்பதற்கு தயாராகி பின்னர் கடைக்கு சென்று விடுவார். இதை தான் புண்ணியமூர்த்தி வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் அவர் 2011-ல் ரவுடியாக சுற்றிதிரிந்ததை மறந்து திருந்தி வாழ்ந்து கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை புண்ணியமூர்த்தி வீட்டில் இருந்து வெளியே வந்து அவரது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தர்.

    அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் புண்ணியமூர்த்தியை வழிமறித்து அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுகாயம் ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்திலேயே புண்ணியமூர்த்தி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதைத் தொடர்ந்து அந்த வழியாக சென்றவர்கள் புண்ணியமூர்த்தி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து தஞ்சை மேற்கு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் இந்த கொலை குறித்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.

    பின்னர் இந்த கொலையில் யார் ஈடுபட்டனர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். புண்ணிய மூர்த்தி முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசாரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    கொலையாளிகளை பிடிக்க சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் வரை ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில்ரேகையை பதிவு செய்தனர்.

    அதிகாலை நேரத்தில் மர்ம நபர்களால் முன்னாள் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த வல்லம், குறும்பூண்டியை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி ஹேமா (வயது 35). இவர்கள் மோட்டார் சைக்கிளில் திருமலைசமுத்திரம் சென்றனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஹேமா மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த பரிதாப சம்பவம் குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சையில் குடிநீர் வழங்ககோரி காலி குடங்களுடன் பெண்கள் திடீரென மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    டெல்டாவில் சமிபகாலமாக குடிநீர் பிரச்சினை தலை விரித்தாடுகிறது. ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தஞ்சை கரந்தை பகுதியில் உள்ள பூக்கொல்லை, இரட்டை பிள்ளையார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வரவில்லை. இந்த பகுதிக்கு குடி தண்ணீர் வராததை கண்டித்து இப்பகுதி மக்கள் கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர். மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இருந்த போதிலும் இந்த பகுதிக்கு தண்ணீர் வரவில்லை.

    இந்த நிலை தொடர்ந்து நீடித்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை தஞ்சை - கும்பகோணம் செல்லும் சாலையில் கரந்தை பகுதியில் திடீரென காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள், சிறுவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடனே இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் அதை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். தொடர்ந்து வல்லம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், மற்றும் ஆர்.டி.ஓ. சுரேஷ் ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இன்று மாலைக்குள் உங்கள் பகுதிக்கு தண்ணீர் விடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.அதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சில வாகனங்கள் வேறு பாதையில் மாற்றி விடப்பட்டது.

    தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையப்போகும் இடம் மதுரையா?, தஞ்சாவூரா? என்பது பற்றி எந்த நேரத்திலும் மத்திய அரசு அறிவிப்பை வெளியிடலாம் என்று தெரிகிறது.#AIIMShospital
    சென்னை:

    2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பதில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஒரு முடிவு காணப்படாத நிலை இருந்தது.

    எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 200 ஏக்கர் நிலம் வேண்டும். அங்கு மருத்துவ கல்வி, மருத்துவ ஆராய்ச்சி, உயர்தர சிகிச்சை போன்ற பல்வேறு வசதிகள் அமைக்கப்படும். மேலும், தண்ணீர் வசதி, போக்குவரத்து வசதி உள்பட உள்கட்ட அமைப்பு வசதிகளும் வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

    இதற்காக தமிழக அரசின் சார்பில் தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஐந்தில் ஒரு இடத்தில் தொடங்குவதற்கு கருத்துரு அனுப்பப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இவ்வளவு நாளும் கடிதப்போக்குவரத்துகள் நடந்து வந்தன. கோர்ட்டிலும் வழக்கு போடப்பட்டிருந்தன. சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அடிக்கடி டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து விரைவில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டா சென்னை வந்தபோதும்கூட, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரும், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனும் சந்தித்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது பற்றி அவரிடம் வலியுறுத்தினர். இப்போது எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இறுதிநிலை வந்துவிட்டது.

    மதுரையில் உள்ள தோப்பூர் அல்லது தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இந்த மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசாங்கம் தற்போது முடிவு செய்திருக்கிறது. கர்நாடக தேர்தலையொட்டி, தேர்தல் முடிந்தபிறகு எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகும் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்தது.

    இந்தநிலையில், எந்த நேரத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும், உடனடியாக அதைத் தொடங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #AIIMShospital
    கும்பகோணத்தில் நள்ளிரவில் 3 அரசு பஸ்கள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கும்பகோணம்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியானார்கள்.

    துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் போராட்டம் பெரிய அளவில் வெடித்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இருந்த போதிலும் போராட்டக் காரர்கள் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக ஒரு அரசு விரைவு பஸ் சென்னைக்கு சென்றது. அப்போது அந்த பஸ் கும்பகோணம் அடுத்துள்ள சுந்தர பெருமாள் கோவில் பகுதியில் நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்த போது அங்கு மறைந்து இருந்த மர்ம நபர்கள் சிலர் பஸ்சின் கண்ணாடி மீது கற்களை வீசி தாக்கினர்.

    இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதமானது. உடனே பஸ் டிரைவர் இது குறித்து கும்பகோணம் போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டு பஸ்சை அங்கிருந்து எடுத்து சென்றார். இந்த சம்பவத்தால் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது போன்று பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை பகுதியில் அரசு விரைவு பஸ் ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் அந்த பஸ்சின் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் பஸ்சின் இடதுபுறம் உள்ள கண்ணாடிகள் உடைந்தது.

    இதைத் தொடர்ந்து நாச்சியார் கோவில் அருகே உள்ள நரசிங்கபேட்டை பகுதியில் சென்ற அரசுபஸ் மீதும் மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவு கற்களை வீசியுள்ளனர். இதில் அந்த பஸ்சின் கண்ணாடியும் சேதமானது.

    கும்பகோணம் பகுதியில் நேற்று நள்ளிரவு மட்டுமே 3 அரசு பஸ்கள் மீது தாக்குதல் நடந்திருப்பது தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அந்தந்த சரகத்திற்குட்பட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பஸ்கள் மீது தாக்குதல் நடந்த இடத்தில் வைக்கப் பட்டிருக்கம் சி.சி.டி.வி. பதிவுகளை வைத்து போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 3 இடங்களிலும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் தான் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சையில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை எல்.ஐ.சி. காலனி மேற்கு விரிவாக்கப் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 60). இவர் கடந்த 14-ந்தேதி தஞ்சை பாஸ்போர்ட் அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிளில் சாலையை கடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது. இதில் சுகுமார் தூக்கிவீசப்பட்டு பலத்தகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுகுமார் நேற்று இறந்தார். இது குறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×