search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
    X

    தஞ்சையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

    வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தஞ்சையில் மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் வங்கி துறையில் செயல்பட்டு வரும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒன்பது தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    1.11.2017 முதல் வழங்கப்பட வேண்டிய 11-வது ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையில் எந்தவித நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையில் 2 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்க முடியும் என்று கூரிய இந்திய வங்கி நிர்வாகத்தை கண்டித்தும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இன்னும் ஒரு சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு வங்கியில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் வியாபாரிகள் மற்றும் சுப காரியங்கள் வைத்திருப்போர் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பணம் எடுக்க முடிவில்லை.

    தஞ்சையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தனர். தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் மண்டலத் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், இந்திய வங்கி ஊழியர் செயலாளர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சை மாவட்டத்தில் 30 தலைமை வங்கிகள் உள்ளன. 275 கிளை வங்கிகள் செயல்பட்டு வருகிறது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். தற்போது 11-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் ஏற்படாததாலும் 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் தஞ்சை மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×