search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank employee strike"

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர்-திருப்பத்தூரில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வேலூர்:

    அனைத்து பொது வங்கி அலுவலர்கள் சங்கம் சார்பில் வங்கிகளை இணைக்ககூடாது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை விரைவுபடுத்த கோரியும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடக் கோரியும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த கோரியும் வங்கிகளில் கொள்ளையடித்தவர்கள் பெயர்களை ரிசர்வ் வங்கி வெளியிட கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேலூர் அண்ணா சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு அனைத்து பொது வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். சம்பத்குமார், ரஜனி முன்னிலை வகித்தனர். கோபால், விஜயகுமார், கார்த்திகேயன், ஆனந்தன், சோமசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பாரத ஸ்டேட்வங்கி முதன்மை வங்கி மேலாளர் கே.கே.மணி தலைமை வகித்தார் இந்தியன் வங்கி நவீந்திரன் வரவேற்றார். பாரத வங்கி புகழேந்தி இந்தியன் வங்கி கணேஷ் கனரா வங்கி ரமேஷ் விஐயாவங்கி திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார் ஆர்ப்பாட்டத்தை சுந்தரேசன் தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் கனரா வங்கி அதிகாரிகள் சங்கத் தலைவர் கார்த்திகேயன் விஜயா வங்கி ஞானசவுந்தரி வங்கி மேலாளர்கள் கோதண்டம் சார்லஸ் துனண மேலாளார்கள் சதிஷ் சுஜின் மதிவாணன் சரவணன் ரஞ்சித் உட்பட பலர் பேசினார்கள் ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். கனரா வங்கி வைத்திஸ்வரி நன்றி கூறினார்.

    திருச்சி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.100 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
    திருச்சி:

    இந்திய அளவில் இன்று முதல் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில்  ஈடுபடுகின்றனர். நாடு முழுவதும் உள்ள 9 வங்கி ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த 10 லட்சம் பேர் வேலை நிறுத்த போராட்டத் தில் கலந்து கொண்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 300-வங்கி கிளைகள் உள்ளன. இவற்றி 1500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், ஊதிய உயர்வு குறித்து அலட்சியப்படுத்தி வரும் மத்திய அரசின்  அலட்சிய போக்கை கண்டித்தும், 2 சதவீத  ஊதியம்  மட்டும் அளித்துள்ள இந்திய வங்கிகள் சங்கத்தின் அறிவிப்பு மற்றும் ஊழியர்களின் ஊதிய உயர்வை விரைவில் நிறைவேற்றக் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து திருச்சி மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் ராமராஜ் கூறியதாவது:-

    நாடு முழுவதும் நடைபெறும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 வங்கி ஊழியர் சங்கங்கள் பங்கேற்றுள்ளன. வங்கி ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 31.10.17-ல் 5 வருடம் நிறை வுற்றும் இதுவரை ஊதியம் நிறைவேற்றப்படவில்லை. இதற்காக நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது. கடந்த 5-ந் தேதி நடைபெற்ற  பேச்சு வார்த்தையில் 2 சதவீதம் மட்டும் ஊதியம் உயர்த்தப்படுவதாக இந்திய வங்கி சங்கம், இந்திய அரசும் அறிவித்தது. வேலைப்பழு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். 

    திருச்சி மாவட்டத்தில் மொத்தம்  300  வங்கிகள் உள்ளன. அவற்றில் 1,500 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் திருச்சியில் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் என கூறினார். இந்த  ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், தலைவர் ராமமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தஞ்சையில் மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் வங்கி துறையில் செயல்பட்டு வரும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒன்பது தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    1.11.2017 முதல் வழங்கப்பட வேண்டிய 11-வது ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையில் எந்தவித நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையில் 2 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்க முடியும் என்று கூரிய இந்திய வங்கி நிர்வாகத்தை கண்டித்தும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இன்னும் ஒரு சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு வங்கியில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் வியாபாரிகள் மற்றும் சுப காரியங்கள் வைத்திருப்போர் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பணம் எடுக்க முடிவில்லை.

    தஞ்சையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தனர். தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் மண்டலத் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், இந்திய வங்கி ஊழியர் செயலாளர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சை மாவட்டத்தில் 30 தலைமை வங்கிகள் உள்ளன. 275 கிளை வங்கிகள் செயல்பட்டு வருகிறது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். தற்போது 11-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் ஏற்படாததாலும் 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் தஞ்சை மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×