என் மலர்
நீங்கள் தேடியது "Missing"
- திருடப்பட்ட, காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்துத்தரக்கோரி காவல் நிலையங்களில் புகாா்கள் அளிக்கப்பட்டன.
- சைபா் கிரைம் காவலா்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூா் மாநகரில் திருடப்பட்ட, காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்துத்தரக்கோரி காவல் நிலையங்களில் புகாா்கள் அளிக்கப்பட்டன. இந்தப் புகாா்களின்பேரில் சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் சொா்ணவள்ளி, உதவி ஆய்வாளா் சையத் ரபீக் சிக்கந்தா் மற்றும் காவலா்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினா் நவீனதொழில் நுட்பங்களுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில், செல்போன்களை வாங்கி தற்போது பயன்படுத்தி வருபவா்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவா்களிடமிருந்து 108 செல்போன்கள் மீட்கப்பட்டன. திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.பிரபாகன் உத்தரவின்பேரில் இந்த செல்போன்கள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த 108 செல்போன்களின் மதிப்பு ரூ.16.5 லட்சமாகும். காணாமல் போன செல்போன்களை மீட்ட சைபா் கிரைம் காவல் துறையினரை மாநகர காவல் ஆணையா் பாராட்டினாா். அப்போது மாநகர காவல் துணை ஆணையா் அபினவ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- சந்திரபாபு கடந்த நவம்பர் மாதம் 5-ந் தேதி கேரளா மாநிலத்தில் உள்ள தலச்சேரி என்ற ஊருக்கு வேலைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
- தன் கணவர் காணாமல் போய்விட்டதாக அவரது மனைவி தமிழ்ச்செல்வி விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடலூர்:
விருத்தாசலம் அருகே மன்னம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபாபு(வயது40). இவர் கடந்த நவம்பர் மாதம் 5-ந் தேதி கேரளா மாநிலத்தில் உள்ள தலச்சேரி என்ற ஊருக்கு வேலைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால் அதன்பின் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை, செல்போன் எண்ணும் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் அவரை தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து தன் கணவர் காணாமல் போய்விட்டதாக அவரது மனைவி தமிழ்ச்செல்வி விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று கொண்ட விருத்தாசலம் போலீசார் காணாமல்போன சந்திரபாபுவை தேடி வருகின்றனர்.
- ஓய்வு பெற்ற அதிகாரி மாயமானார்
- வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
திருச்சி:
திருச்சி ஏர்போர்ட் காந்திநகர் அழிக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 36) இவரது தந்தை தேவசகாயம் (67) பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன் தினம் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அமல்ராஜ் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பயிற்சி மாணவர் திடீர் மாயமானார்
- படிப்பதற்காக சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.
திருச்சி:
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பெரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி சிலுவை (வயது 23), இவர் பாரதியார் சாலையில் உள்ள செயின்ட் பால்ஸ் நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பாதிரியாருக்கு பயின்று வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை ஸ்ரீரங்கம் பகுதிக்கு படிப்பதற்காக சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இதுகுறித்து சவரிமுத்து கொடுத்த புகாரி அடிப்படையில் கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பண்ருட்டியில் பெண் மருத்துவ ஊழியர் மாயமானார்.
- சந்தியாவின் தந்தை சகாதேவன் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே புதுப்பேட்டை மேட்டா மேடு பகுதியை சேர்ந்தவர் சகாதேவன். அவரது மகள் சந்தியா (வயது 24) இவர் எம்.எஸ்.சி. முடித்துவிட்டு புதுவை மதகடிப்பட்டு உள்ள மணக்குள விநாயகர் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கடந்த 8- தேதி வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த சந்தியாவின் பெற்றோர் பல்வேறு இடங்களில் இவரை தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் இவர் கிடைக்கவில்லை. இது குறித்து சந்தியாவின் தந்தை சகாதேவன் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து சந்தியா என்ன ஆனார் எங்கு சென்றார் யாரேனும் கடத்தப்பட்டாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மன விரக்தியில் இளம்பெண் மாயமானார்
- 3 வருடமாக கணவர் பேசவில்லை.
திருச்சி:
திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் ஜின்னா தெருவை சேர்ந்தவர் பிச்சைக்கனி (65). இவரது மகன் முகமது சபீர் கடந்த 3 வருட காலமாக மலேசியா நாட்டில் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி பரிமளா பானுவை பார்க்க வராமல் இருப்பதோடு, சரியாக செல்போனில் பேசுவதும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பரிமளா பானு வீட்டை விட்டு வெளியேறியனார். இது குறித்து பிச்சைக்கனி அரியமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
- மாணவி தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எஸ்சி பேஷன் டிசைன் படித்து வந்தார்.
- மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
கோவை:
கோவை கணபதி அண்ணா நகரை சேர்ந்த மாணவி சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எஸ்சி பேஷன் டிசைன் படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றார்.
ஆனால் கல்லூரி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து மாணவியின் அறையில் பெற்றோர் ஆய்வு செய்த போது கடிதம் ஒன்று இருந்தது. இதனை கைப்பற்றி பார்த்தனர். அப்போது அதில் மாணவி தன்னை தேட வேண்டாம் என கடிதம் எழுதியிருந்தார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.
பீளமேடு ஹாட்கோ காலனியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர், கடந்த மே மாதம் ராஜேஷ் என்ற இளைஞருடன் சென்றார். இளைஞரை போலீசார் கடந்த மாதம் கைது செய்து சிறுமியை மீண்டும் அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குழந்தையுடன் பெண் மாயமானார்.
- வீட்டைவிட்டு வெளியே சென்றவர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் தினக்குடி பகுதியை சேர்ந்தவர் இளந்தமிழன் (வயது 30). இவரது மனைவி கோகிலா (21). இவர்களுக்கு வன்னிமலர் (1½) என்ற பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று கோகிலா தனது குழந்தையை அழைத்து கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து இளந்தமிழன் கொடுத்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்."
- கடலூர் அருகே தாய், மகன் திடீர் மாயமானர்.
- அதிர்ச்சியடைந்த செல்வம் தனது மனைவி மற்றும் குழந்தையை உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் அடுத்த எஸ்.புதூர் பகுதியை சேர்ந்தவர் அருள் செல்வம் (வயது 36). இவரது மனைவி சரளா (வயது 27). இவர்களது மகன் அஸ்வந்த் (வயது 4). சம்பவத்தன்று சரளா தனது மகன் அஸ்வந்துடன், தனது தாய் வீடான வில்லியநல்லூருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றனர். இதனை தொடர்ந்து மனைவி மற்றும் மகன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம் தனது மனைவி மற்றும் குழந்தையை உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தாய் மற்றும் மகனை தேடி வருகின்றனர்.
- இளம்பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கோபால் சாமியை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
வத்திராயிருப்பு அருகே உள்ள ரெங்கப்ப நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 30). இவர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று வேலைக்கு சென்ற செல்வம் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் பார்வதி கொடுத்த புகாரின்படி கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அக்சயா (வயது 22). இவர் அடிக்கடி செல்போனை பயன்படுத்தி யதால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்த அக்சயா சம்பவத்தன்று வீட்டிலிருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் பெற்றோரை தொடர்பு கொண்ட அக்சயா தான் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் தேட வேண்டாம் எனவும் தெரி வித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் புளியங்குள த்தை சேர்ந்தவர் கோபால் சாமி (65). சம்பவத்தன்று வெளியூர் செல்வதாக கூறி விட்டு சென்ற இவர் அதன்பின் ஊர் திரும்ப வில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து அவரது மனைவி இந்திரா கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து கோபால் சாமியை தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 36) கொத்தனார். இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் கவிதா (25) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கவிதா தியாகதுருகம் பகுதியில் உள்ள தனியார் நகைக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கமாக கடைக்கு வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- திருச்சி எடமலைப்பட்டி புதூர் நல்ல தண்ணி கேணி தெருவை சேர்ந்தவர் கிள்ளிவளவன். இவரது மகள் மதுமிதா. கல்லூரி மாணவி.
- வீரசாமிவெளியில் செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை.
திருச்சி:
திருச்சி எடமலைப்பட்டி புதூர் நல்ல தண்ணி கேணி தெருவை சேர்ந்தவர் கிள்ளிவளவன். இவரது மகள் மதுமிதா. கல்லூரி மாணவி.
இவர் கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பிலார் நகர் சேர்ந்தவர் வீரசாமி (வயது 42). இவர் வெளியில் செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. இது குறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான வீராசாமியை தேடி வருகிறார்கள்.