என் மலர்
நீங்கள் தேடியது "Alwarkurchi"
ஆழ்வார்குறிச்சி அருகே தாய், மகள் மாயமாகினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
நெல்லை:
அம்பை கவுதமபுரியை சேர்ந்தவர் மருதுபாண்டி. இவரது மனைவி சண்முகத்தாய். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 18-ந்தேதி சண்முகத்தாய், தனது 8 வயது மகளை அழைத்துக்கொண்டு ஆழ்வார்குறிச்சி அருகே கருத்தபிள்ளையூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து அம்பை ஆஸ்பத்திரிக்கு செல்வதாக சண்முகத்தாய் கூறிவிட்டு தனது மகளையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதுதொடர்பாக மருதுபாண்டி, ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






