search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Postal staff"

    அகில இந்திய அஞ்சல் ஊழியர் கூட்டு குழு சார்பில், நாமக்கல் தலைமை அஞ்சலக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    அகில இந்திய அஞ்சல் ஊழியர் கூட்டு குழு சார்பில், நாமக்கல் தலைமை அஞ்சலக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கோட்ட செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ், ஈஸ்வரன் தலைமை வகித்தனர். போராட்டத்தில் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு ஜி.டி.எஸ் கமிட்டியின் பரிந்துரைகளை அமல் படுத்த வேண்டும். தற்போதைய வழங்கப்பட்ட நிலுவை தொகைக்கான கணக்கீட்டுமுறை மாற்றப்பட வேண்டும். பணிக்கொடையை உயர்த்தி வழங்க வேண்டும். ஜி.டி.எஸ் குரூப் காப்பீட்டு தொகையை உயர்த்த வேண்டும். ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் . 12, 24, 36 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வுகள், பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கிளைச் செயலாளர்கள் ராமச்சந்திரன், சம்பத்குமார், சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். # tamilnews

    அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் குரூப் ‘சி‘ தபால்காரர்கள் சங்கத்தினர் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
    நெல்லை:

    அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் குரூப் ‘சி‘ தபால்காரர்கள் சங்கத்தினர் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். கோட்ட தலைவர் அழகுமுத்து தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் பாட்சா முன்னிலை வகித்தார். கோட்ட செயலாளர் ஜேக்கப்ராஜ் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள்.

    அஞ்சல் சேவையை பாதிக்கும் சீர்கேடுகளை உடனே சரி செய்ய வேண்டும். அனைத்து தபால் நிலையங்களுக்கும் புதிய கம்ப்யூட்டர் உபகரணங்கள் வழங்க வேண்டும். இணையதள வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது.

    உண்ணாவிரதத்தில் நிர்வாகிகள் கண்ணன், அனந்த கோமதி, வண்ணமுத்து, தங்கராஜ், சங்கர், முருகன், பிரபாகரன், விஜயலட்சுமி, பசுமதி, ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    புதிய மென்பொருள் சேவையை சரிசெய்யக்கோரி தபால் ஊழியர்கள், திருப்பூர் தலைமை தபால் நிலைய அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.
    திருப்பூர்:

    இந்திய தபால்துறை அனைத்து தபால் நிலையங்களையும் கணினிமயமாக்கி ஒருங்கிணைந்த தபால் சேவைக்கு புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தியது. அந்த மென்பொருள் சரியாக வேலை செய்யாததால் தபால் ஊழியர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் சேமிப்பு கணக்கில் பணம் கட்டமுடியாமலும், தங்கள் கணக்கில் உள்ள இருப்பை தெரிந்து கொள்ள முடியாமலும் அவதிப்பட்டனர்.

    இதே போல அனைத்து சேவைகளிலும் தொய்வு ஏற்பட்டதால் பல மணி நேரம் காத்திருந்தும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதனால் தபால் ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுவந்தது. இது தொடர்பாக தினமும் 10-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தபால் அதிகாரியிடம் புகார் தெரிவித்து வந்தனர்.

    மேலும் ஊழியர்கள் தினசரி கணக்கு முடிப்பதில் அதிக குளறுபடிகள் ஏற்பட்டு வந்ததால் அவர்கள் இரவு 10 மணியானாலும் வீடு திரும்ப முடியாத நிலை உருவாகி உள்ளது.

    இதனால் புதிய மென்பொருள் சேவையை சரி செய்யக்கோரி ஊழியர்கள் தங்கள் நிலையை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். ஆனால் உயர் அதிகாரிகள் இந்த பிரச்சினையை தீர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் உயர் அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண்டித்தும், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் புதிய மென்பொருள் சேவையை சரி செய்யக்கோரியும், அகில இந்திய தபால் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் கடந்த 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    அந்த வகையில் திருப்பூர் தலைமை தபால்நிலைய வளாகத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், பழனிசாமி, கிராமிய தபால் ஊழியர் சங்க தலைவர் கிட்டுசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் உண்ணாவிரத போராட்டத்தில் திருப்பூர் கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 
    கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் வேலைநிறுத்தம் நேற்று 16-வது நாளாக நீடித்ததால் மாவட்டத்தில் சுமார் 8 லட்சம் தபால்கள் தேக்கம் அடைந்தன.
    நாமக்கல்:

    அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 16-வது நாளாக நீடித்தது.

    இதனால் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 342 தபால் நிலையங்களில் 252 கிளை தபால் நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளன. எனவே கிராமபுறங்களில் தபால் பட்டுவாடா, அஞ்சலக பண பரிவர்த்தனை உள்ளிட்ட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நாமக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத் தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய, கோட்ட செயலாளர் செந்தில் கூறியதாவது :-

    நாமக்கல் மாவட்டத்தில் 16 நாட்களாக கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 570 பேர் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் கிராமபுறங்களில் உள்ள தபால் நிலையங்களில் சுமார் 8 லட்சம் தபால்கள் தேங்கி உள்ளன. எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு 14-வது நாளாக இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர், ஜூன்.4-

    அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பாக தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு 14-வது நாளாக இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். அரசு, ஸ்ரீதரன், கருப்புசாமி, முனியகுமரன், தசரதன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரையை 1.1.2016 முதல் அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 14-வது நாள் உண்ணாவிரத போராட்டத்தினால் கிராமப் புறங்களில் அஞ்சல் சேவை பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் முதியோர் உதவி தொகை, விதவைகளுக்கான உதவி தொகைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    ×