என் மலர்
நீங்கள் தேடியது "Palayamkottai"
- பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கி சீனிவாசநகர் வரை சென்று மீண்டும் அண்ணா விளையாட்டு மைதானத்துக்கு வரும் வகையில் பந்தய தூரம் அமைக்கப்பட்டு உள்ளது.
- போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என பொதுபிரிவாக வெற்றி பெறுபவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் மற்றும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
நெல்லை:
தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை தொடங்கப்பட்டு 100 ஆண்டு நிறைவடைந்தயொட்டி நூற்றாண்டு விழா சிறப்பு மினிமாரத்தான் போட்டி, பாளையங்கோட்டையில் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கி சீனிவாசநகர் வரை சென்று மீண்டும் அண்ணா விளையாட்டு மைதானத்துக்கு வரும் வகையில் பந்தய தூரம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த போட்டியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைக்கிறார்.
போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என பொதுபிரிவாக வெற்றி பெறுபவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் மற்றும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. போட்டியில் 18 வயது நிறைந்த ஆண், பெண்கள் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 98942 81771, 94886 72194 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். இந்த தகவலை நெல்லை சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
- டேக்வாண்டோ போட்டியை மாநகராட்சி துணை மேயர் ராஜூ தொடங்கி வைத்தார்.
- இதில் வெற்றி பெறுபவர்களுக்கு இன்று மாலை பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்ட டேக்வாண்டோ சங்கத்தின் சார்பில் பாளை வ.உ.சி. மைதானத்தில் உள்ள உள்விளையாட்டரங்கில் இன்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியை மாநகராட்சி துணை மேயர் ராஜூ தொடங்கி வைத்தார். இதில் சங்கத்தின் தலைவர் நாகூர் மீரான், செயலாளர் சுடலை சுரேஷ், பொருளாளர் முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் 7 வயதுக்குட்பட்டோர், 11, 14 மற்றும் 17 வயதுக்குட்பட்டோருக்கு என தனித்தனியாக போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு இன்று மாலை பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
- வீட்டு முன்பு நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
- மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
நெல்லை:
பாளையை அடுத்த சீவலப்பேரியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் பேச்சிமுத்து(வயது 19). இவர் சம்பவத்தன்று வீட்டு முன்பு நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமார்(22) மற்றும் அவரது சகோதரர் சங்கரபாண்டியன்(21) ஆகியோர் பேச்சிமுத்துவை சரமாரியாக தாக்கினர்.
பின்னர் அவர் வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
இதுதொடர்பாக பேச்சிமுத்து அளித்த புகாரின்பேரில் சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செல்வக்குமார் மற்றும் சங்கரபாண்டியனை கைது செய்தனர்.
- பாளை தியாகராஜநகரில் இருந்து மோட்டார் சைக்கிளில் கங்கைகொண்டானுக்கு சென்றுள்ளார்.
- அவரை 3 பேர் கும்பல் வழிமறித்து தாக்கி 5 பவுன் தங்கநகையை பறித்தது.
நெல்லை:
நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் விஸ்வபெருமாள் நகரை சேர்ந்தவர் முருகன். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், சிவசரவணக்குமார்(வயது 28) என்ற மகனும் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகன் இறந்துவிட்டார். சிவசரவணக்குமார் படித்து முடித்துவிட்டு பாளை கே.டி.சி. நகரில் உள்ள ஒரு மருந்துக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
பாளை தியாகராஜநகரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து சிவசரவணக்குமார் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் நான்குவழிச்சாலை வழியாக கங்கைகொண்டானுக்கு சென்றுள்ளார்.
பாளை பொட்டல் விலக்கு பகுதியில் சென்றபோது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 3 பேர் கும்பல் அவரை வழிமறித்து தாக்கியது. பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கநகையை பறித்துவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றது.
இதில் காயம் அடைந்த சிவசரவணக்குமார் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துவிட்டு தப்பி சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.
- மாநகராட்சியின் பெரும்பாலான வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
- இந்த சாலையில் பயணித்து வந்ததற்கு வாழ்த்துக்கள் என கூறி அவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை, கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது. இதனால் மாநகராட்சியின் பெரும்பாலான வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
இதில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கிடையே பயணிக்கின்றனர். இதனை சீரமைக்க கோரி பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பாளை கே.டி.சி.நகர் மங்கம்மாள் சாலைக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை பெய்த திடீர் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
இதனை சீரமைக்க கோரி 37-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வக்கீல் அன்புஅங்கப்பன் என்பவர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அந்த சாலை வழியாக மோட்டார் சைக்கிள், கார் வழியாக வந்த பயணிகளிடம் இந்த சாலையில் பயணித்து வந்ததற்கு வாழ்த்துக்கள் என கூறி அவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
- கா்நாடக மாநிலம் மைசூர், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திற்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் தசரா திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.
- காலை 10.40-க்கு கோவிலில் கால்கோள் நடைபெற்றது.
நெல்லை:
கா்நாடக மாநிலம் மைசூர், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திற்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் தசரா திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.
தசராதிருவிழா
இந்த ஆண்டு தசரா விழா வருகிற செப்டம்பா் 25 -ந் தேதி அம்மாவாசை அன்று பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
அதனை முன்னிட்டு இன்று கால்கோள் விழா நடைபெற்றது. இதற்காக பாளை ஆயிரத்தம்மன் கோவில் காலை நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தாிசனம் மற்றும் காலை அபிஷேகம் நடைபெற்றது.
8 ரதவீதி
சிறப்பு அலங்காரத்தில் ஆயிரத்தம்மன் அருள்பாலிக்க பாிவார தேவதைகளுக்கு படையல் வைக்கப்பட்டது. தொடா்ந்து கால்கோள் விழாவிற்கான கொடிகம்பு மஞ்சள் தடவி பூக்களால் அா்ச்சனை செய்யப்பட்டு 8 ரதவீதிகளில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டடது.
காலை 10.40-க்கு கோவிலில் கால்கோள் நடைபெற்றது. பின்னா் கம்பத்திற்கு பூஜைகள் நடைபெற்று கம்பத்திற்கும் மூலவா் அம்மனுக்கும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
41நாட்கள் விரதம்
இன்றிலிருந்து தசரா விழாவிற்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்கவும், பந்தல் போடுவது, 41 நாள் விரதம் இருப்பது மற்றும் சப்பரங்கள் நிற்கும் இடங்களை தூய்மைப்படுத்ததுதல் என விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
இதே போல் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பிற அம்மன் கோவில்களான தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், யாதவர்உச்சினிமாகாளி, கிழக்கு உச்சினிமாகாளி, வடக்கு உச்சினிமாகாளி, விஸ்வகர்மா உச்சினி மாகாளி, புதுப்பேட்டை உலகம்மன், புது உலகம்மன், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில்கலும் கால்நாட்டு வைபவம் நடைபெற்றது.
திரளான பக்தர்கள்
கொரோனா காரணத்தால் கடந்த 2 வருடங்களாக முழுவதுமாக நடக்காமல் இருந்த தசரா திருவிழா இந்த வருடம் கால்நாட்டுடன் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு முழுமையாக நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.
- பாளை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று கால்வாய் தூர்வாரும் பணி தொடங்கியது.
- பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்ெகாள்ளப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
அதன் அடிப்படையில் பாளை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று கால்வாய் தூர்வாரும் பணி தொடங்கியது.
பாளை மண்டலம் 6-வது வார்டு மற்றும் 7-வது வார்டு மனக்காவலம்பிள்ளை நகர் பகுதியில் மழைநீர் செல்லக்கூடிய கால்வாயை தூர்வாரும் பணியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணைமேயர் கே.ஆர்.ராஜு, கவுன்சிலர்கள் பவுல்ராஜ், இந்திரா, உதவி கமிஷனர் ஜகாங்கீர் பாதுஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து மனக்காவலம்பிள்ளைநகர் விரிவாக்கப்பகுதிகளில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது மழைநீர் தேங்கி நின்ற பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு இந்த முறை வெள்ளம் ஏற்படாமல் வடிய வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மேலப்பாளையம் குறிச்சி, மகாராஜநகர், ரெட்டியார்பட்டி தேவாலய பகுதி உள்ளிட்ட இடங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்ெகாள்ளப்பட்டது.
இந்த பணிகள் சுகாதார அலுவலர்கள் அரச குமார், சாகுல் ஹமீது, சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது.
- இவர்கள் 2 பேரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
- சமீபத்தில் விடுமுறைக்காக சொந்த ஊரான பெருமாள்புரத்துக்கு வந்திருந்தார்.
நெல்லை:
பாளை பெருமாள்புரம் பாரதிநகரை சேர்ந்தவர் அரவிந்தன். இவரது மனைவி காயத்ரி(வயது 37). என்ஜினீயரிங் பட்டதாரிகள்.
இவர்கள் 2 பேரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 9 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அரவிந்தன் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வந்தார்.
சமீபத்தில் விடுமுறைக்காக சொந்த ஊரான பெருமாள்புரத்துக்கு வந்திருந்தார். அவருடன் மனைவி மற்றும் மகனும் வந்திருந்தனர். காயத்ரி கடந்த சில நாட்களாகவே மன அமைதி இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரது உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை காயத்ரி இறந்தார்.
இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்ரியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சபாநாயகர் அப்பாவு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து பேசினார்.
- கல்லூரி மாணவிகள் ‘நோ டிரக்ஸ்’ என்ற வாசக வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பலூன்களை பறக்கவிட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ வரவேற்று பேசினார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். சபாநாயகர் அப்பாவு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.
பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு குறித்த அரங்குகளை பார்வையிட்டனர். தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கரகாட்டம், சிலம்பம் மற்றும் போதை பொருட்களின் தீமைகள் குறித்து மாணவ- மாணவிகளின் நாடகம் நடந்தது.
மேலும் கல்லூரி மாணவிகள் 'நோ டிரக்ஸ்' என்ற வாசக வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பலூன்களை பறக்கவிட்டனர்.
நிகழ்ச்சியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாநகர துணை கமிஷனர்கள் சீனிவாசன், அனிதா, ஆர்.டி.ஓ. சந்திரசேகர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுபாஷினி, முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன் மற்றும் பள்ளி, கல்லூரி ஆசிரிய-ஆசிரியைகள், மாணவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவு அலுவலர் அருள்செல்வி நன்றி கூறினார்.
இதே போல் வருவாய் துறை சார்பில் டவுன் சாப்டர் பள்ளி மாணவர்கள் இன்று போதை ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
பள்ளி முன்பு தொடங்கிய இந்த பேரணி எஸ்.என்.ஹைரோடு, சத்தியமூர்த்தி தெரு, வடக்கு மவுண்ட் ரோடு வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. தாசில்தார் சண்முக சுப்பிரமணி பேரணியை தொடங்கி வைத்தார்.
போலீஸ் உதவி கமிஷனர்கள் விஜயகுமார், அண்ணாத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் அருள் தாமஸ் ஜெபகுமார் செய்திருந்தார்.
- இவர் இன்று மகராஜநகர் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை:
பாளை கே.டி.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் பிரிட்டோ(வயது28). இவர் இன்று மகராஜநகர் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் பிரிட்டோ மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரிட்டோ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாளையில் செயின் பறிப்பில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
- கைதான சிறுவர்களில் 3 பேர் பள்ளியிலும், ஒருவர் கல்லூரியிலும் படித்து வருகின்றனர்.
நெல்லை:
கல்லிடைக்குறிச்சி பகுதியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 7 சிறுவர்களை மறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர்கள் பாளையில் செயின் பறிப்பில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை பாளை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நகை பறித்த சிறுவர்கள்
அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் அவர்களில் 4 பேர் கடந்த 2-ந் தேதி பாளை தெற்கு பஜாரை சேர்ந்த காந்தியம்மாள் என்பவரிடம் 14 கிராம் நகையை பறித்து சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 3 பேரை விடுவித்த போலீசார் 4 பேரை கைது செய்தனர். கைதான சிறுவர்களில் 3 பேர் பள்ளியிலும், ஒருவர் கல்லூரியிலும் படித்து வருவது தெரியவந்தது. இதனால் அவர்களை நெல்லை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
- இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
- இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நெல்லை:
பாளை திருவண்ணாமலை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29). இவர் கூடைப்பந்து விளையாடுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் இரும்பு கம்பி நட்டு வைத்திருந்தார்.
அதனை கடந்த 4-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமார் (39) என்பவர் அகற்ற முயன்றுள்ளார். இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் செல்வகுமார் கத்தரிக்கோலால் சுரேஷின் வயிற்றில் குத்தினார்.
இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் பாளை சப்-இன்ஸ்பெக்டர் சிவகளை வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தார்.