search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cycle rally"

    • சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் மாரத்தான் நடத்தப்பட்டது.
    • சைக்கிள் மாரத்தான் முடிவில் அனைவருக்கும் பத க்கங்கள் வழங்கப்பட்டது.

    கடலூர்:

    என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுற்றுச்சூழல் துறை மற்றும் பீப்புள் சர்வீஸ் குரூப் தொண்டு மையம் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் விளைவுகளை எடுத்துகூறும் வகையிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும் விழிப்பு ணர்வு சைக்கிள் மாரத்தான் நடத்தப்பட்டது.

    இதனை என்.எல்.சி.இந்தியா நிறுவன செயல் இயக்குனர் கார்த்தி தொடங்கி வைத்தார். முதன்மை பொது மேலாளர் அன்பு செல்வன் பொது மேலாளர்கள் ராமலிங்கம் ,செந்தில்குமார் ,சுப்பி ரமணியம் மற்றும் துணை பொது மேலாளர் சீராள ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணியை பீப்பிள் சர்வீஸ் குரூப் நிறுவனர் தாமரைச்செல்வன் ஏற்பாடு செய்திருந்தார். விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. சுமார் 8 கிலோமீட்டர் இந்த விழிப்புணர்வு சைக்கிள் மாரத்தான் நடைபெற்றது. முடிவில் அனைவருக்கும் பத க்கங்கள் வழங்கப்பட்டது.

    • உலக சுகாதார தின சைக்கிள் பேரணி நடந்தது.
    • இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நேரு யுவகேந்திரா,இந்தியன் ரெட்கிராஸ் மற்றும் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பில் உலக சுகாதார தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. ஆரோக்கியத்தை வலியுறுத்தி சிலம்ப பயிற்சி மாணவர்கள் 50 பேர் சைக்கிள் பேரணியாக ஆயுதப்படை விளையாட்டு மைதானத்தில் இருந்து டி.பிளாக், அம்மா பூங்கா வழியாக வள்ளல் சீதக்காதி ஸ்டேடியம் வரை சென்றனர்.

    டாக்டர்.அருண்ராஜ், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் சுந்தரம், செயலாளர் ரமேஷ், பாலமுருகன், சிலம்ப மாஸ்டர் மேத்யு இம்மானுவேல், பயிற்சியாளர் திருமுருகன் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தனர். இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    சித்தம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார் .

    பல்லடம்:

    பல்லடம் ரெயின்போ ரோட்டரி சங்கம், சித்தம்பலம் ஊராட்சி நிர்வாகம் ஆகியவைசார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுகுறித்து வலியுறுத்தி திருச்செந்தூர் வரை சைக்கிள் பயணம் நிகழ்ச்சி துவக்க விழா நடைபெற்றது. சித்தம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார் .திமுக மேற்கு ஒன்றிய செய லாளர் கிருஷ்ணமூர்த்தி, ரெயின்போ ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ரோட்டரி செயலாளர் சுந்தர்ராஜன், அனைவரையும் வரவேற்றார். இந்த சைக்கிள் பயணத்தில், ராமஜெயம்(70) ,ரங்கசாமி (63) ,மகேஷ்(30) ,தரணி(19) ,ஆகிய 4 பேர் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் கிராமத்தில் இருந்து, திருச்செந்தூர் நோக்கி நேற்று புறப்பட்ட னர்.

    இவர்களில் ராமஜெயம் ஒரு சைக்கிளை ஓட்டிக் கொண்டு மற்றொரு சைக்கிளை பிடித்தபடி 2 சைக்கிள்களில் செல்கிறார். இவர்கள் சுமார் 350 கி.மீ. தூரம் பயணம் செய்து, நாளை 5ந்தேதி மாலை திருச்செந்தூர் சென்று அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு மாதிரி ஆண்கள் மேல்நி லைப்பள்ளி போதைப் பொருள் தடுப்பு மன்றத்தின் சார்பில், சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசார சைக்கிள் பேரணி மற்றும் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
    • முன்னதாக, சாலை விதி மீறுதல், போதை பொருள்கள் உபயோகித்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மாணவர்களின் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில், அரசு மாதிரி ஆண்கள் மேல்நி லைப்பள்ளி போதைப் பொருள் தடுப்பு மன்றத்தின் சார்பில், சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசார சைக்கிள் பேரணி மற்றும் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் ரவிசங்கர் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலைஞர்புகழ் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் குணாளன், கோபிநாத், தில்லையம்பலம், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வாழப்பாடி டி.எஸ்.பி ஹரிசங்கரி பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேருந்து நிலையம், தபால் நிலையம், அரசு மருத்துவமனை வரை சைக்கிளில் பேரணி

    யாக சென்று பொதுமக்களி டையே விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

    முன்னதாக, சாலை விதி மீறுதல், போதை பொருள்கள் உபயோகித்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மாணவர்களின் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில், வாழப்பாடி உதவி காவல் ஆய்வாளர்கள் கார்த்திக், சேட்டு, வீராங்கண்ணு, முகிலரசன், தலைமைக் காவலர் முருகன் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு

    களை, பள்ளி போதைப்பொ

    ருள் தடுப்பு மன்ற பொறுப்பா சிரியர் முனிரத்தினம், சாலை பாதுகாப்பு மன்ற

    பொறுப்பாசிரியர் சீனிவாசன், உடற்கல்வி இயக்குனர் குமார், ஆசிரியர்கள் பழனி முருகன், ராமமூர்த்தி, முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி வீடு தோறும் தேசிய கொடி ஏற்ற வலியுறுத்தி அமலோற்பவம் மேல்நிலைபள்ளி சார்பில் பிரம்மாண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது.
    • பள்ளியின் என்.எஸ்.எஸ். குழுவினர் ஒருங்கிணைத்து நடத்திய இப்பேரணியை முதுநிலை முதல்வர் லூர்துசாமி வாழ்த்துரை வழங்கி கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

    புதுச்சேரி:

    சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி வீடு தோறும் தேசிய கொடி ஏற்ற வலியுறுத்தி அமலோற்பவம் மேல்நிலைபள்ளி சார்பில் பிரம்மாண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    பள்ளியின் என்.எஸ்.எஸ். குழுவினர் ஒருங்கிணைத்து நடத்திய இப்பேரணியை முதுநிலை முதல்வர் லூர்துசாமி வாழ்த்துரை வழங்கி கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

    அமலோற்பவம் ஆரம்பப் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணியில் 300-க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    புதுவையின் பிரதான வீதிகள் வழியாக சென்று 5 கி.மீ. தூரம் நடைபெற்ற இப்பேரணியில் நாட்டுப் பற்றை வளர்க்கும் விதமாக வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் போன்ற வீர முழக்கங்களை மாணவர்கள் எழுப்பினர்.

    இப்பேரணியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்ததுடன் மாணவர்களோடு சேர்ந்து அவர்களும் முழக்கமிட்டும், புகைப்படம் எடுத்தும் மாணவர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்தினர்.

    • சபாநாயகர் அப்பாவு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து பேசினார்.
    • கல்லூரி மாணவிகள் ‘நோ டிரக்ஸ்’ என்ற வாசக வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பலூன்களை பறக்கவிட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ வரவேற்று பேசினார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். சபாநாயகர் அப்பாவு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.

    பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு குறித்த அரங்குகளை பார்வையிட்டனர். தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கரகாட்டம், சிலம்பம் மற்றும் போதை பொருட்களின் தீமைகள் குறித்து மாணவ- மாணவிகளின் நாடகம் நடந்தது.

    மேலும் கல்லூரி மாணவிகள் 'நோ டிரக்ஸ்' என்ற வாசக வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பலூன்களை பறக்கவிட்டனர்.

    நிகழ்ச்சியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாநகர துணை கமிஷனர்கள் சீனிவாசன், அனிதா, ஆர்.டி.ஓ. சந்திரசேகர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுபாஷினி, முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன் மற்றும் பள்ளி, கல்லூரி ஆசிரிய-ஆசிரியைகள், மாணவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவு அலுவலர் அருள்செல்வி நன்றி கூறினார்.

    இதே போல் வருவாய் துறை சார்பில் டவுன் சாப்டர் பள்ளி மாணவர்கள் இன்று போதை ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பேரணி சென்றனர்.

    பள்ளி முன்பு தொடங்கிய இந்த பேரணி எஸ்.என்.ஹைரோடு, சத்தியமூர்த்தி தெரு, வடக்கு மவுண்ட் ரோடு வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. தாசில்தார் சண்முக சுப்பிரமணி பேரணியை தொடங்கி வைத்தார்.

    போலீஸ் உதவி கமிஷனர்கள் விஜயகுமார், அண்ணாத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் அருள் தாமஸ் ஜெபகுமார் செய்திருந்தார்.

    • செஸ் ஒலிம்பியாட்போட்டி சிவகாசி-குற்றாலத்திற்கு சைக்கிள் பேரணி சென்ற கல்லூரி மாணவர்களை ராஜபாளையத்தில் வரவேற்றனர்.
    • 240 கி.மீ. தூர சைக்கிள் பேரணியை தொடங்கினார்கள்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார்கல்லூரியின் உடற் கல்வியியல் துறை மாணவர்கள் 210 பேர் தமிழக அரசு சார்பாக மாமல்லபுரத்தில்நடந்து வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றியவிழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த திட்டமிட்டனர்.

    இதைத்தொடர்ந்து சிவகாசியில் இருந்து குற்றாலம் வரை 240 கி.மீ. தூர சைக்கிள் பேரணியை தொடங்கினார்கள். கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த சைக்கிள் பேரணி ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக ராஜபாளையம் வந்தடைந்தது.

    ராஜபாளையம் அன்ன ப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் வைத்து தாளாளர்

    என். ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா, தலைமை ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் உடற்கல்வி மாணவர்கள் வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் தளவாய்புரம், முகவூர், தேவதானம்

    • பாலாஜி நகர், திருப்பாலைத்துறை, பி.டி.ஓ அலுவலகம் காலனி சாலை ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • சைக்கிள் பேரணி பாபநாசம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தூய்மையை வலியுறுத்தி முக்கிய வீதிகள் வழியாக சென்றடைந்தது.

    பாபநாசம்:

    பாபநாசம் பேரூராட்சி யில் நகரங்களின் தூய்மை க்கான மக்கள் இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா, நீர்நிலைகள் தூய்மை பணி மற்றும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்தி கேயன், பேரூராட்சி துணைத் தலைவர் பூபதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாபநாசம் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    பாலாஜி நகர், திருப்பா லைத்துறை, பி.டி.ஓ அலுவ லகம் காலனி சாலை ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. சைக்கிள் பேரணி பாபநாசம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தூய்மையை வலியுறு த்தி முக்கிய வீதிகள் வழியாக சென்றடைந்தது. திருப்பா லைத்துறை பாலைவனநாதர் கோவில் சாலையிலிருந்து பெரியார் சிலை வரைக்கும் வடிகால் தூர் வாரும் பணி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பாபநாசம் பேரூர் தி.மு.க. செயலாளர் கபிலன், பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரேம்நாத் பைரன், பாலகிருஷ்ணன், முத்து மேரி, தேன்மொழி, கீர்த்தி வாசன், புஷ்பா, சமீரா பர்வீன் ஜாஃபர் அலி பிரகாஷ், விஜயா, கெஜலட்சுமி, கோட்டையம்மாள், துரைமுருகன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மற்றும் பேரூராட்சிபணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் சைக்கிளில் பேரணியாகச்சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    • ஆசிரியர்கள் வரவேற்று மாணவர்களின் செயல்களை பாராட்டி மகிழ்ந்தனர்.

    திருப்பூர்,

    திருப்பூர், காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியின் மாணவர்கள் வலிமையான பாரதத்தை உருவாக்குவோம் என்ற கருத்தினை வலியுறுத்தியும் , உடல் நலத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் பள்ளியில் செயல்படும் உடல்நல ஆரோக்கிய மன்றத்தினைச் சேர்ந்த சுமார் 50-க்கும் அதிகமான மாணவர்கள் சைக்கிளில் பேரணியாகச்சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி வழிகாட்டுதலின் படி தொடங்கிய இச்சைக்கிள் பேரணியைப் பள்ளியின் முதல்வர் பிரமோதினி, பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனா ஆகியோர் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.

    பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி நடந்த இப்பேரணி காந்திநகர், அங்கேரிபாளையம், ஜே.எஸ். கார்டன்,அனுப்பர்பாளையம் ஆகிய இடங்களுக்குச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இறுதியாக பள்ளி வந்தடைந்த பேரணி குழுவினரை பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்று மாணவர்களின் செயல்களை பாராட்டி மகிழ்ந்தனர்.

    • பேரணியில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 130 மாணவ- மாணவிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
    • 1,100 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி நெல்லையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    சந்திப்பு ஆற்றுப்பாலத்தில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதனை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

    இதில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 130 மாணவ- மாணவிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கோடகநல்லூர் கிராமத்தில் உள்ள கோவிலில் நந்தவனம் அமைக்கும் பணியில் கலெக்டர் கலந்து கொண்டார்.

    பின்னர் வீரவநல்லூருக்கு உட்பட்ட தட்டைபாறை குளத்தில் கரையில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் 1,100 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து அம்பையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டார். வீ.கே.புரத்தில் குருவிகளை பாதுகாக்கும் தன்னார்வலர்களுக்கு கூண்டுகளை கலெக்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சிகளில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ரிசாப், தாசில்தார்கள் சண்முக சுப்பிரமணியன், ஆனந்த குமார், பாலசுப்பிரமணியம், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இன்று மாலை நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வேய்ந்தான்குளம் கரையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சூழலியல் பூங்காவினை கலெக்டர் பார்வையிடுகிறார்.

    தொடர்ந்து நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் சுற்றுச்சூழல் விழாவில் தமிழக அரசு அறிவித்துள்ள சுற்றுச்சூழலுக்கான விருதுக்கு தேர்வாகி உள்ள நெல்லையை சேர்ந்த 3 பேருக்கு சபாநாயகர் அப்பாவு விருது வழங்குகிறார்.

    • சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.
    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று காலை நடைபெற்றது.

    புதுச்சேரி:

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று காலை நடைபெற்றது.

    ஹோப் எனும் தன்னார்வு தொண்டு நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று காலை புதுவை எல்லையான முள்ளோடையில் பேரணி தொடங்கியது.

    இந்த பேரணியை கிருமாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் தொடங்கி வைத்தார். சைக்கிள் பேரணி புதுவை கடற்கரை காந்தி சிலையில் நிறைவு பெறுகிறது. 

    முதுகுளத்தூர் தொகுதியில் அ.தி.மு.க., ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடந்தது.

    முதுகுளத்தூர்:

    அ.தி.மு.க., ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி பார்த்திபனூரில் இருந்து அபிராமம், முதுகுளத்தூர், வெண்ணீர் வாய்க்கால், கீழத்தூவல், பாம்பூர் வழியாக பரமக்குடி வரை நடந்தது.

    வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சதன் பிரபாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியன், விவசாய அணி மாநில இணை செயலாளர் கர்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைசெயலாளர் சங்கர பாண்டியன் வரவேற்றார்.

    இதில் 2,700 பேர் கலந்து கொண்டனர். முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க., அரசின் சாதனைகளை துண்டு பிரசுரமாக பொதுமக்களுக்கு வழங்கினர்.

    பேரணியில் ஒன்றிய செயலாளர்கள் காளிமுத்து (கமுதி), முனியசாமி பாண்டியன் (கடலாடி), அந்தோணிராஜ் (சாயல்குடி), முதுகுளத்தூர் ஒன்றிய அவைத்தலைவர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×