search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health Day"

    • உலக சுகாதார தின சைக்கிள் பேரணி நடந்தது.
    • இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நேரு யுவகேந்திரா,இந்தியன் ரெட்கிராஸ் மற்றும் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பில் உலக சுகாதார தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. ஆரோக்கியத்தை வலியுறுத்தி சிலம்ப பயிற்சி மாணவர்கள் 50 பேர் சைக்கிள் பேரணியாக ஆயுதப்படை விளையாட்டு மைதானத்தில் இருந்து டி.பிளாக், அம்மா பூங்கா வழியாக வள்ளல் சீதக்காதி ஸ்டேடியம் வரை சென்றனர்.

    டாக்டர்.அருண்ராஜ், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் சுந்தரம், செயலாளர் ரமேஷ், பாலமுருகன், சிலம்ப மாஸ்டர் மேத்யு இம்மானுவேல், பயிற்சியாளர் திருமுருகன் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தனர். இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • அரசு பள்ளியில் ஆரோக்கிய தினம் கொண்டாடப்பட்டது
    • மாணவர்களுக்கு பல்வேறு ஆசனங்களை விரிவுரையாளர் தமிழ்வேந்தன் செய்து காண்பித்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், சிறுவளூர் அரசு உயர்நிலை பள்ளியில், உலக உடல் மன ஆரோக்கிய தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்து பேசினார். வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் ஜெகதீஸ்வரன், தமிழ்வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து மாணவர்களுக்கு பல்வேறு ஆசனங்களை விரிவுரையாளர் தமிழ்வேந்தன் செய்து காண்பித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரமேஷ், பத்மாவதி, கோகிலா, தங்கபாண்டி, வீரபாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.

    ×