உலக சுகாதார தின சைக்கிள் பேரணி

உலக சுகாதார தின சைக்கிள் பேரணி நடந்தது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
உலக சுகாதார தின சைக்கிள் பேரணி
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நேரு யுவகேந்திரா,இந்தியன் ரெட்கிராஸ் மற்றும் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பில் உலக சுகாதார தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. ஆரோக்கியத்தை வலியுறுத்தி சிலம்ப பயிற்சி மாணவர்கள் 50 பேர் சைக்கிள் பேரணியாக ஆயுதப்படை விளையாட்டு மைதானத்தில் இருந்து டி.பிளாக், அம்மா பூங்கா வழியாக வள்ளல் சீதக்காதி ஸ்டேடியம் வரை சென்றனர்.

டாக்டர்.அருண்ராஜ், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் சுந்தரம், செயலாளர் ரமேஷ், பாலமுருகன், சிலம்ப மாஸ்டர் மேத்யு இம்மானுவேல், பயிற்சியாளர் திருமுருகன் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தனர். இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com