search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Environment day"

    • சுற்றுச்சூழலை அழிப்பது யாருடைய உரிமையும் இல்லை.
    • சுற்றுப்புறம் ஆரோக்கியமாக இருந்தால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

    நம் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதன் முக்கியத்துவத்தை உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் குறிக்கிறது. நமது சுற்றுப்புறம் ஆரோக்கியமாக இருந்தால், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

    ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களின் செயல்பாடுகளால் அந்த பகுதியில் காற்றின் தரம், நீர் நிலைகளில் ஏற்படும் அசுத்தம், நிலத்தில் சேரும் கழிவுகள் போன்ற நிகழ்வுகளே சுற்றுச்சூழல் மாசடைதல் என்கிறோம்.

    இதுபோன்று சுற்றுசூழல் பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தவே சுற்றுச்சூழல் சுகாதாரத்தின் சர்வதேச கூட்டமைப்பின் (IFEH) சார்பில் உறுப்பு நாடுகள் இணைந்து கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26-ந் தேதி (நாளை) உலக சுற்றுச்சூழல் சுகாதார தினமாக கொண்டாடி வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒரு தனித்துவமான கருப்பொருளை இந்த அமைப்பு உருவாக்கி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

    இந்தாண்டுக்கான கருப்பொருள் "உலகளாவிய சுற்றுச்சூழல் பொது சுகாதாரம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறது" என்பதாகும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக உலகத் தலைவர்கள் இந்த தினத்தை ஆதரித்து வருகின்றனர்.

    தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து புவி வெப்பமயமாதல், அமில மழை பொழிதல், பருவநிலை மாற்றமடைதல் போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கின்றன. இந்த நிகழ்வுகளால் மனிதர்களும் பலவிதமான நோய்களுக்கு உட்பட்டு பாதிப்புகளை எதிர்கொள்ளுகின்றனர்.

    இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த நாம் அனைவரும் பொறுப்புகளை உணர்ந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத செயல்களை செய்ய வேண்டும். இந்த நாளில் சுற்றுச்சூழல் சுகாதார தினத்தின் முக்கியத்துவம் பற்றி பேசுதல், பல்வேறு தரப்பு மக்களும் ஒன்று கூடி வெளிப்படையாக கருத்துகளை பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாதுகாப்பிற்காக வாதிடுவது போன்ற நிகழ்வுகள் நடத்த வேண்டும்.

    மேலும் சுத்தமான காற்று, நிலையான காலநிலை, போதுமான நீர் , கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு, நல்ல விவசாய நடைமுறைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இயல்பினால் சுற்றுச்சூழல் மாசடைவதில் இருந்து பாதுகாக்கலாம்.

    "கடைசி மரத்தை வெட்டி, கடைசி மீனைக் கொன்று, கடைசி நதியில் விஷம் கலந்தால், பணத்தை சாப்பிட முடியாது என்பதை நீங்கள் காண்பீர்கள்" - என்றார் ஜான்மே. சுற்றுச்சூழலை அழிப்பது யாருடைய உரிமையும் இல்லை. அதனை பாதுகாப்பதே அனைவரின் கடமையாகும்.

    • மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் கட்டிடவியல் துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
    • துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் கட்டிடவியல் துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை தலைவரும் மற்றும் மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மதர்தெரசா நர்சிங் கல்லூரி சுகாதார அறிவியல் நிறுவனத்தின் முதல்வர் மற்றும் பதிவாளர் டாக்டர் கோபால் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது சுற்றுச்சூழலை பராமரிக்கும் முறைகளையும், அதனை நம் அன்றாட வாழ்வில் பின்பற்றுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கினார்.

    நிகழ்ச்சியில் கல்லூரியின் பதிவாளர், டீன்கள், அனை த்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கட்டிடவியல் துறை தலைவர் சுந்தரராமன் நன்றி கூறினார்.

    • சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடந்தது
    • பசுமையான கிராமமாக செயல்பட அனைத்து மக்களும் செயல்படுவோம் என உறுதிமொழி

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமுருகன் தலைமையில், தென்னை மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

    இதில் மகளிர் குழுவினர் கலந்து கொண்டு பல்வேறு இடங்களில் தென்னை மரக்கன்றுகள் நட்டனர்.

    ஊராட்சிகளில் சுத்தமான மற்றும் பசுமையான கிராமமாக செயல்பட அனைத்து மக்களும் செயல்படுவோம் என சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்றனர்.

    • சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் மாரத்தான் நடத்தப்பட்டது.
    • சைக்கிள் மாரத்தான் முடிவில் அனைவருக்கும் பத க்கங்கள் வழங்கப்பட்டது.

    கடலூர்:

    என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுற்றுச்சூழல் துறை மற்றும் பீப்புள் சர்வீஸ் குரூப் தொண்டு மையம் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் விளைவுகளை எடுத்துகூறும் வகையிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும் விழிப்பு ணர்வு சைக்கிள் மாரத்தான் நடத்தப்பட்டது.

    இதனை என்.எல்.சி.இந்தியா நிறுவன செயல் இயக்குனர் கார்த்தி தொடங்கி வைத்தார். முதன்மை பொது மேலாளர் அன்பு செல்வன் பொது மேலாளர்கள் ராமலிங்கம் ,செந்தில்குமார் ,சுப்பி ரமணியம் மற்றும் துணை பொது மேலாளர் சீராள ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணியை பீப்பிள் சர்வீஸ் குரூப் நிறுவனர் தாமரைச்செல்வன் ஏற்பாடு செய்திருந்தார். விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. சுமார் 8 கிலோமீட்டர் இந்த விழிப்புணர்வு சைக்கிள் மாரத்தான் நடைபெற்றது. முடிவில் அனைவருக்கும் பத க்கங்கள் வழங்கப்பட்டது.

    • சாத்தான்குளம் அருகே சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் டெங்கு களபணி ஆய்வு செய்யப்பட்டது. கடைகளில் அயோடின் உப்பு விற்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கட்டாரிமங்கலத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், கட்டாரிமங்கலம் ஊராட்சி செயலர் வெங்கடேசன் ஆகியோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், மரக்கன்றுகள் நட்டு இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    தொற்று நோய் பரவாமல் இருக்க தூய்மையை பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து டெங்கு களபணி ஆய்வு செய்யப்பட்டது. கடைகளில் அயோடின் உப்பு விற்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

    இதையடுத்து கட்டாரிமங்கலத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு நெல்லை நீர் பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டது. நீர் தன்மை குறித்தும், தகவல் வந்ததும் அதற்காக நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    • உலக சுற்றுசூழல் தினம் கொண்டாடப்பட்டது.
    • சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் கிளப் மகேந்திரா நிறுவனம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை சீனியர் செயற்பொறியாளர் ரமேஷ் தொடங்கி வைத்தார்.

    இதை தொடர்ந்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், ராஜமாணிக்கம், கிளப் மகேந்திரா நிறுவன பொதுமேலாளர் மோகன்ராஜ், மனிதவள மேலாளர் பிரபு, தலைமை சமையல் கலைஞர் பாஸ்கர் மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.

    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டை அருகே கண்மாயை ஆழப்படுத்தும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • மக்கள் நலமாகவும் வளமாகவும் வாழ்ந்திட தூய்மையான சுற்றுச்சூழல் மிகவும் அவசியமாகிறது.

    விருதுநகர்

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டாரம் கட்டங்குடி ஊராட்சி செவல்கண்மாய் மற்றும் காரியாபட்டி வட்டாரம், துலுக்கன்குளம் ஊராட்சி கண்மாயினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறையும் இணைந்து, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கண்மாய் ஆழப்படுத்தும் பணியினை கலெக்டர் மேகநகாதரெட்டி தொடங்கி வைத்தார். மேலும் அவர் மரக்கன்றுகளை நட்டு வைத்து, பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி னார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    மக்கள் நலமாகவும் வளமாகவும் வாழ்ந்திட தூய்மையான சுற்றுச்சூழல் மிகவும் அவசியமாகிறது. மக்கள் சார்ந்து இருக்கும் நீர்,காற்று மற்றும் நிலம் ஆகியவற்றை ஏற்படுத்துவதிலும் தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு உரிய ஆக்கங்களை குறைப்பதிலும் சூழல் அமைப்புகள் முக்கியமான அம்சங்களாக விளங்குகிறது.

    இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பினையும் மேம்படுத்திட முதல மைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் மண், நீர் மற்றும் மழைவளத்தை பெருக்கும் பொருட்டு விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை, வனத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11வட்டாரங்களில் ஒரு நாற்றாங்கால் (நர்சரி) அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு குளத்துப்பட்டி ஊராட்சி செவல்கண்மாய் அருகில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட நாற்றாங்கால் (நர்சரி)யை தொடங்கி வைக்கப்பட்டு ள்ளது. மேலும், இந்த நாற்றாங்கால் (நர்சரி)யில் உருவாக்கக்கூடிய கன்றுகள் அனைத்தும் இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

    கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ்அ னைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படவுள்ள ஊராட்சிகளில் சிறுபாசன கண்மாய் - 30, ஊரணி - 7 மற்றும் வரத்துக்கால்வாய்-2 என்ற எண்ணிக்கையிலும் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக விருதுநகர் வட்டம், கோட்டநத்தம் ஊராட்சியில், இயற்கை ஆர்வலர் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மியாவாக்கி முறையில் அடர்வன காடுகள் உருவாக்கும் நோக்கத்தில் மரம் நடும் பணிகளை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யா ணகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர்.எஸ்.நாராயணன், செயற்பொறியாளர் சக்திமுருகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்கதமிழ்வாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பேரணியில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 130 மாணவ- மாணவிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
    • 1,100 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி நெல்லையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    சந்திப்பு ஆற்றுப்பாலத்தில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதனை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

    இதில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 130 மாணவ- மாணவிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கோடகநல்லூர் கிராமத்தில் உள்ள கோவிலில் நந்தவனம் அமைக்கும் பணியில் கலெக்டர் கலந்து கொண்டார்.

    பின்னர் வீரவநல்லூருக்கு உட்பட்ட தட்டைபாறை குளத்தில் கரையில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் 1,100 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து அம்பையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டார். வீ.கே.புரத்தில் குருவிகளை பாதுகாக்கும் தன்னார்வலர்களுக்கு கூண்டுகளை கலெக்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சிகளில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ரிசாப், தாசில்தார்கள் சண்முக சுப்பிரமணியன், ஆனந்த குமார், பாலசுப்பிரமணியம், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இன்று மாலை நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வேய்ந்தான்குளம் கரையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சூழலியல் பூங்காவினை கலெக்டர் பார்வையிடுகிறார்.

    தொடர்ந்து நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் சுற்றுச்சூழல் விழாவில் தமிழக அரசு அறிவித்துள்ள சுற்றுச்சூழலுக்கான விருதுக்கு தேர்வாகி உள்ள நெல்லையை சேர்ந்த 3 பேருக்கு சபாநாயகர் அப்பாவு விருது வழங்குகிறார்.

    தமிழகம் முழுவதும் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கவோ, பயன்படுத்தவோ அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தடை விதிக்கப்படுவதாக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். #PlaticBan #EnvironmentDay
    சென்னை:

    சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி 110-விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினம். சமுதாயம் நலமாக வாழவும், வளமுள்ள நாடு உருவாகவும் இன்றியமையாததாக விளங்குவது சுற்றுச்சூழல்.

    மறைந்த ஜெயலலிதா, பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் வல்லுனர் குழு என்ற சிறப்பு குழுவினை அமைத்தார்.

    இந்த வல்லுனர் குழு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள் போன்ற பொருட்களை தடை செய்யவும், பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுகள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும் ஆலோசனை வழங்கியது.

    இவற்றில், அன்றாடம் மக்களுக்கு தேவைப்படும் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் போன்ற பொருட்களுக்கான பிளாஸ்டிக் உறைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்க பரிந்துரைத்துள்ளது.

    ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், நிலங்களில் தேங்கிவிடும் போது, நீர்நிலைகளை நோக்கிச் செல்லும் நீரின் போக்கு மாறி, நீர் தேங்கி விடும் நிலை உருவாகிறது.

    மேலும், கழிவுநீர் செல்லும் பாதைகளிலும் இதன் பாதிப்புகள் அதிக அளவில் உள்ளது. இதனால் தண்ணீர் மாசடைகிறது. மேலும் மழைநீர், பூமியில் கசிந்து நிலத்தடியினை அடையாமல் போவதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதும் பாதிக்கப்படுகிறது.

    இவை எல்லாவற்றிற்கும் மேலாக, தேங்கி இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் மழைநீர் தேங்கும் போது, கொசு உற்பத்தியாகி, அதன் மூலம் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவுகின்றன. மேலும், மழைநீர் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு, வெள்ளப்பெருக்கு ஏற்படவும் காரணமாகிவிடுகிறது. மண் வளமும் பாதிக்கப்படுகிறது.

    தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படும்போது, அதன் மூலம் வெளியாகும் நச்சு வாயுவின் மூலமாக மனிதன் மற்றும் உயிரினங்கள் சுவாசிக்கும் காற்றும் மாசடைகிறது. உணவு பொருட்களுடன் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் பிற உணவுகளுடன் சேர்ந்து உண்ணும் நிலை ஏற்படுவதனால், கால்நடைகள் மற்றும் வன விலங்குகளின் உயிரிழப்புக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாகி விடுகிறது.

    மேலும், பிளாஸ்டிக் பொருட்கள், பல ஆண்டுகள் ஆனாலும் மக்காத தன்மை உடையதால், அவற்றை அழிப்பதோ, ஒழிப்பதோ இயலாத காரியம். இவ்வாறு நிலம், நீர், காற்று போன்ற பல்வேறு நிலையில் மாசு ஏற்பட்டு, மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் பிளாஸ்டிக் பொருட் கள் பெரும் தீங்கு விளைவிக்க காரணமாகி விடுகிறது. எனவே இவற்றை அறவே தவிர்ப்பது இன்றைய சூழ்நிலையில் கட்டாயமாகிறது.

    மேற்படி பாதிப்புகளை கருத்தில் கொண்டும், இந்தத் தீங்கினை நம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச்செல்லக்கூடாது என்ற உயரிய நோக்கத்திலும், தமிழ்நாட்டில் 2019-ம் ஆண்டு, ஜனவரி 1 முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி, இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ் டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர், தண்ணீர்க் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986-ன் கீழ் தடை செய்ய இந்த அரசு முடிவு செய்து, தமிழ்நாடு முழுவதும் தடை செய்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பொதுமக்களும், வியாபாரிகளும் மேற்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, துணிப்பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களை பயன்படுத்த பழகிக்கொள்ள ஏதுவாக, மேற்படி தடைகளை உடனடியாக அமல்படுத்தாமல், 2019, ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் அமல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

    ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டமான மழைநீர் சேகரிப்புத்திட்டம் பொதுமக்களின் ஒத்துழைப்போடும், பங்களிப்போடும், வெற்றிகரமாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு, நிலத்தடி நீர் பெரிய அளவில் செறிவூட்டப்பட்டது. அதே போன்று, உலக சுற்றுச்சூழல் தினத்தில் அனைவரின் ஒத்துழைப்போடும், பங்களிப்போடும், பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை நம் எதிர்கால சந்ததியினருக்கு பரிசளிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி 1330 அடி நீள சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியம் வரையும் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு அமைச்சர் கந்தசாமி சான்றிதழ், பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் வனம் மற்றும் வனவிலங்கு துறையும், புதுவை சுற்றுச்சூழல் மற்றும் சதுப்பு நில காடுகள் பாதுகாப்பு அபிவிருத்தி சங்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தேங்காய்திட்டு அரசு கழிமுக மீன் பண்ணையில் 1330 அடி நீள சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியம் வரையும் போட்டி இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாரியப்பன், ஜி.ஆர். சண்முகம், டாக்டர் தமிழ்வாணன் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்க தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். வினோத்குமார் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினர்களாக புதுவை வனத்துறை தலைமை வன காப்பாளர் குமார், புதுவை அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் மோகன்குமார், மீன்வளத்துறை துணை இயக்குனர் மீரா சாகிப் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஓவிய போட்டியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு அமைச்சர் கந்தசாமி சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    செம்படுகை நன்னீரகம் ராமமூர்த்தி, ஸ்ரீராம் ஐ.ஏ.எஸ். அகாடமி வெற்றிச்செல்வம், பூவுலகின் நண்பர்கள் சீனு.தமிழ்மணி, எம்.ஜி.ஆர். பொதுநல பேரவை சிவா, கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் ராஜா, தமிழ்கனல் ராமகிருஷ்ணன், தமிழ்பணி மன்றம் கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    ×