என் மலர்
உள்ளூர் செய்திகள்
பாளையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
- சபாநாயகர் அப்பாவு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து பேசினார்.
- கல்லூரி மாணவிகள் ‘நோ டிரக்ஸ்’ என்ற வாசக வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பலூன்களை பறக்கவிட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ வரவேற்று பேசினார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். சபாநாயகர் அப்பாவு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.
பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு குறித்த அரங்குகளை பார்வையிட்டனர். தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கரகாட்டம், சிலம்பம் மற்றும் போதை பொருட்களின் தீமைகள் குறித்து மாணவ- மாணவிகளின் நாடகம் நடந்தது.
மேலும் கல்லூரி மாணவிகள் 'நோ டிரக்ஸ்' என்ற வாசக வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பலூன்களை பறக்கவிட்டனர்.
நிகழ்ச்சியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாநகர துணை கமிஷனர்கள் சீனிவாசன், அனிதா, ஆர்.டி.ஓ. சந்திரசேகர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுபாஷினி, முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன் மற்றும் பள்ளி, கல்லூரி ஆசிரிய-ஆசிரியைகள், மாணவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவு அலுவலர் அருள்செல்வி நன்றி கூறினார்.
இதே போல் வருவாய் துறை சார்பில் டவுன் சாப்டர் பள்ளி மாணவர்கள் இன்று போதை ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
பள்ளி முன்பு தொடங்கிய இந்த பேரணி எஸ்.என்.ஹைரோடு, சத்தியமூர்த்தி தெரு, வடக்கு மவுண்ட் ரோடு வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. தாசில்தார் சண்முக சுப்பிரமணி பேரணியை தொடங்கி வைத்தார்.
போலீஸ் உதவி கமிஷனர்கள் விஜயகுமார், அண்ணாத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் அருள் தாமஸ் ஜெபகுமார் செய்திருந்தார்.