பாபநாசத்தில் சைக்கிள் பேரணி

பாலாஜி நகர், திருப்பாலைத்துறை, பி.டி.ஓ அலுவலகம் காலனி சாலை ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.சைக்கிள் பேரணி பாபநாசம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தூய்மையை வலியுறுத்தி முக்கிய வீதிகள் வழியாக சென்றடைந்தது.
சைக்கிள் பேரணி
சைக்கிள் பேரணி
Published on

பாபநாசம்:

பாபநாசம் பேரூராட்சி யில் நகரங்களின் தூய்மை க்கான மக்கள் இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா, நீர்நிலைகள் தூய்மை பணி மற்றும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்தி கேயன், பேரூராட்சி துணைத் தலைவர் பூபதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாபநாசம் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பாலாஜி நகர், திருப்பா லைத்துறை, பி.டி.ஓ அலுவ லகம் காலனி சாலை ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. சைக்கிள் பேரணி பாபநாசம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தூய்மையை வலியுறு த்தி முக்கிய வீதிகள் வழியாக சென்றடைந்தது. திருப்பா லைத்துறை பாலைவனநாதர் கோவில் சாலையிலிருந்து பெரியார் சிலை வரைக்கும் வடிகால் தூர் வாரும் பணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாபநாசம் பேரூர் தி.மு.க. செயலாளர் கபிலன், பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரேம்நாத் பைரன், பாலகிருஷ்ணன், முத்து மேரி, தேன்மொழி, கீர்த்தி வாசன், புஷ்பா, சமீரா பர்வீன் ஜாஃபர் அலி பிரகாஷ், விஜயா, கெஜலட்சுமி, கோட்டையம்மாள், துரைமுருகன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மற்றும் பேரூராட்சிபணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com