பாளையில் விஷம் குடித்து பெண் தற்கொலை

இவர்கள் 2 பேரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் விடுமுறைக்காக சொந்த ஊரான பெருமாள்புரத்துக்கு வந்திருந்தார்.
பாளையில் விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

நெல்லை:

பாளை பெருமாள்புரம் பாரதிநகரை சேர்ந்தவர் அரவிந்தன். இவரது மனைவி காயத்ரி(வயது 37). என்ஜினீயரிங் பட்டதாரிகள்.

இவர்கள் 2 பேரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 9 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அரவிந்தன் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வந்தார்.

சமீபத்தில் விடுமுறைக்காக சொந்த ஊரான பெருமாள்புரத்துக்கு வந்திருந்தார். அவருடன் மனைவி மற்றும் மகனும் வந்திருந்தனர். காயத்ரி கடந்த சில நாட்களாகவே மன அமைதி இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரது உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை காயத்ரி இறந்தார்.

இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்ரியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com