search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dusshera"

    • கா்நாடக மாநிலம் மைசூர், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திற்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் தசரா திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.
    • காலை 10.40-க்கு கோவிலில் கால்கோள் நடைபெற்றது.

    நெல்லை:

    கா்நாடக மாநிலம் மைசூர், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திற்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் தசரா திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.

    தசராதிருவிழா

    இந்த ஆண்டு தசரா விழா வருகிற செப்டம்பா் 25 -ந் தேதி அம்மாவாசை அன்று பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

    அதனை முன்னிட்டு இன்று கால்கோள் விழா நடைபெற்றது. இதற்காக பாளை ஆயிரத்தம்மன் கோவில் காலை நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தாிசனம் மற்றும் காலை அபிஷேகம் நடைபெற்றது.

    8 ரதவீதி

    சிறப்பு அலங்காரத்தில் ஆயிரத்தம்மன் அருள்பாலிக்க பாிவார தேவதைகளுக்கு படையல் வைக்கப்பட்டது. தொடா்ந்து கால்கோள் விழாவிற்கான கொடிகம்பு மஞ்சள் தடவி பூக்களால் அா்ச்சனை செய்யப்பட்டு 8 ரதவீதிகளில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டடது.

    காலை 10.40-க்கு கோவிலில் கால்கோள் நடைபெற்றது. பின்னா் கம்பத்திற்கு பூஜைகள் நடைபெற்று கம்பத்திற்கும் மூலவா் அம்மனுக்கும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    41நாட்கள் விரதம்

    இன்றிலிருந்து தசரா விழாவிற்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்கவும், பந்தல் போடுவது, 41 நாள் விரதம் இருப்பது மற்றும் சப்பரங்கள் நிற்கும் இடங்களை தூய்மைப்படுத்ததுதல் என விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

    இதே போல் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பிற அம்மன் கோவில்களான தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், யாதவர்உச்சினிமாகாளி, கிழக்கு உச்சினிமாகாளி, வடக்கு உச்சினிமாகாளி, விஸ்வகர்மா உச்சினி மாகாளி, புதுப்பேட்டை உலகம்மன், புது உலகம்மன், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில்கலும் கால்நாட்டு வைபவம் நடைபெற்றது.

    திரளான பக்தர்கள்

    கொரோனா காரணத்தால் கடந்த 2 வருடங்களாக முழுவதுமாக நடக்காமல் இருந்த தசரா திருவிழா இந்த வருடம் கால்நாட்டுடன் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு முழுமையாக நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

    ×