என் மலர்
உள்ளூர் செய்திகள்
பாளையில் வாலிபரை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு- 3 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
- பாளை தியாகராஜநகரில் இருந்து மோட்டார் சைக்கிளில் கங்கைகொண்டானுக்கு சென்றுள்ளார்.
- அவரை 3 பேர் கும்பல் வழிமறித்து தாக்கி 5 பவுன் தங்கநகையை பறித்தது.
நெல்லை:
நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் விஸ்வபெருமாள் நகரை சேர்ந்தவர் முருகன். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், சிவசரவணக்குமார்(வயது 28) என்ற மகனும் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகன் இறந்துவிட்டார். சிவசரவணக்குமார் படித்து முடித்துவிட்டு பாளை கே.டி.சி. நகரில் உள்ள ஒரு மருந்துக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
பாளை தியாகராஜநகரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து சிவசரவணக்குமார் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் நான்குவழிச்சாலை வழியாக கங்கைகொண்டானுக்கு சென்றுள்ளார்.
பாளை பொட்டல் விலக்கு பகுதியில் சென்றபோது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 3 பேர் கும்பல் அவரை வழிமறித்து தாக்கியது. பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கநகையை பறித்துவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றது.
இதில் காயம் அடைந்த சிவசரவணக்குமார் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துவிட்டு தப்பி சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.