search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marxist Communist"

    • மாநில உரிமைகள் உள்ளிட்ட அம்சங்களில் தமிழக அரசோடு ஆளுநர் முரண்படுகிறார்.
    • அரசு சுட்டிக்காட்டிய பிறகும் ஆளுநர் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை.

    தேசிய கல்விக் கொள்கை, நீட், இந்திய ஒன்றியம் போன்ற பல அடிப்படையான அம்சங்களில், தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசாங்கத்தின் நிலைபாட்டுக்கு மாறாக தமிழக ஆளுநர் பேசிக் கொண்டே இருப்பது நிறுத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    அண்மையில் ஆளுநர், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைக் கொண்ட ஒரு கூட்டத்தைக் கூட்டி, தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம் குறித்த பரிசீலனையை நடத்தியிருக்கிறார்.

    அதில் தேசிய கல்விக் கொள்கையை அதன் சாரம் குறையாமல் அமல்படுத்துவது தான், பள்ளி மட்டத்திலேயே குழந்தைகளை வடிவமைக்க உதவும், இதன் மூலம் இந்திய தேசத்தை உலகின் அறிவு தலைநகரமாக மாற்றமுடியும் என பேசியிருக்கிறார்.

    பெருவணிகமயமாகும் கல்வியால், சமூக நீதி தொலைக்கப்பட்ட, மொழி திணிப்பு அம்சங்கள் கொண்ட, மதவெறி சாராம்சத்தை உள்ளடக்கிய பாடத்திட்டத்தால் உருவாகும் அறிவு அர்த்தமுள்ளதாக இருக்க முடியாது, அபாய கரமானதாகத்தான் இருக்கும்.

    கேந்திரிய வித்யாலயா மற்றும் அதன் பாடத்திட்டம் உள்பட ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் தான் வரும் என்றாலும், ஆளுநர் இது சம்பந்தமான கூட்டத்தில் பேசியிருப்பதைத் தனிமைப்படுத்தி பார்க்க முடியாது.

    ஆளுநரின் கடமைகள், அதிகார வரம்பு, அரசியல் சாசன கோட்பாடுகள், மாநில உரிமைகள் என முக்கிய அம்சங்களில் தமிழக அரசோடு முரண்படுகிறார் என்பது தான் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

    தமிழக அரசும், பல்வேறு அரசியல் இயக்கங்களும் தொடர்ந்து சுட்டிக்காட்டிய பிறகும் ஆளுநர் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை என்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகத்துக்கு இணையானதொரு நிர்வாகத்தை ஆளுநர் நடத்த விரும்புகிறாரோ என்ற ஐயப்பாட்டை எழுப்புகிறது.

    இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமெனவும், ஜனநாயக எண்ணம் கொண்டோர் குரல் எழுப்ப வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ஒருவாரத்தில் கோவை, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கல்வி நிலைய வளாகங்களில் பாலியல் துன்புறுத்தலால் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கரூரில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று முன்தினம் “பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொள்ளும் கடைசிப் பெண் நானாகத்தான் இருக்க வேண்டும்” என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது.

    தன் மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் தாயார் வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க அன்று இரவு தன்னுடைய உறவினர்களை அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார்.

    அப்போது காவல் ஆய்வாளர் கண்ணதாசன் புகார் மனுவை பெறாமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களை தகாத முறையில் பேசியதோடு, கார்த்திக் என்பவரை “என்னடா இப்படி உட்கார்ந்திருக்கிற” என சொல்லி தனது பூட்ஸ் காலால் உதைத்து அடித்திருக்கிறார். மேலும் கார்த்திக்கை லாக்கப்பில் தள்ளி அடைத்திருக்கிறார். “ஏன் அவரை அடிக்கிறீர்கள்” எனக் கேட்டவர்களை சரமாரியாக தாக்கியிருக்கிறார்.

    பாலியல் தொல்லை

    இரவு முழுவதும் அதைத் தொடர்ந்து அடுத்தநாள் காலைவரை விசாரணை என்ற பெயரில் மாணவியின் தாயையும் அவருடன் சென்றவர்களையும் காவல் நிலையத்திலேயே இருக்க வைத்திருக்கிறார்.

    மிருகத்தனமாக நடந்து கொண்ட காவல் ஆய்வாளர் கண்ணதாசன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை உடனடியாக கைது செய்வதுடன் பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கணவரை இழந்து தற்பொழுது மகளையும் இழந்து துன்பத்தில் உழலும் மாணவியின் தாய்க்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

    “இந்தியாவிற்கு சுற்றுலா செல்லும் பெண்கள் தனியாக செல்ல வேண்டாம், பாலியல் வன்முறைகள் அதிகமாக நடைபெறும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது” என அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இதிலிருந்து இந்தியாவில் பாலியல் வன்முறை அதிகரித்து வருவதை அறியலாம்.

    கடந்த ஒருவாரத்தில் கோவை, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கல்வி நிலைய வளாகங்களில் பாலியல் துன்புறுத்தலால் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் சில மாணவிகள் பாதிப்புக்கு உள்ளாகி புகார் கொடுத்துள்ளனர். அதன்மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டு, போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    தொடரும் பாலியல் வன்முறைகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். கல்வி நிலையங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அனைத்துப்பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்ற நடவடிக்கைகள் தடுப்புக்கமிட்டி (விசாகா) உடனடியாக அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்...பதான்கோட் ராணுவ முகாம் அருகே கையெறி குண்டு வீச்சு

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற்ற 37 பேரால் பலன் இல்லை என்பது தவறான பிரசாரம் என்று டி.கே.ரெங்கராஜன் எம்.பி. கூறியுள்ளார்.
    திருச்சி:

    தட்சிண ரெயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆர்.இ.யு.) என்ற தொழிற்சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் எம்.பி. கலந்து கொண்டார்.

    கூட்டம் முடிவில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பயங்கரவாதம், தேசப்பற்று, பாகிஸ்தான் அச்சுறுத்தல் என பாரதீய ஜனதா செய்த பிரசாரத்தை நம்பி மக்கள் அக்கட்சிக்கு வாக்களித்து விட்டனர். அதனால் தான் பாராளுமன்ற தேர்தல் முடிவு எதிர்பார்க்காத வகையில் வந்து உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் மற்ற மாநிலங்களில் இடதுசாரிகளுக்கு தோல்வி ஏற்பட்டு இருப்பது உண்மை தான். இது தேர்தல் ரீதியான தோல்விதான். இயக்க ரீதியான தோல்வி அல்ல. இயக்க நடவடிக்கைகள் மூலம் தேர்தல் தோல்வியை சரிகட்ட முடியும். 

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்ற 37 எம்.பி.க்களால் எந்த பலனும் கிடைக்காது என செய்யப்படும் பிரசாரம் தவறானது. இந்த எம்.பி.க்களால் தமிழக மக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். தவறான பிரசாரம் செய்பவர்களுக்கு தான் பலன் கிடைக்காது.

    தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு வசதியாக கர்நாடக மாநில அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். தி.மு.க மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேச இருக்கிறோம். கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற இன்னும் 25 ஆண்டுகள் ஆகலாம். காவிரி நதி நீர் பிரச்சினையை தீர்த்துவிட்டு தான் கோதாவரி இணைப்புக்கு முயற்சி எடுக்கவேண்டும் என்று பிரதமரை சந்திக்கும் போது வலியுறுத்த இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மதுரையில் அனுமதியின்றி தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #LSPolls #Venkatesan
    மதுரை:

    மதுரையில் தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் போட்டியிடுகிறார். இவர் தனது வேட்பு மனுவை நேற்று தேர்தல் அதிகாரி நடராஜனிடம் தாக்கல் செய்தார்.

    வேட்பு மனுத்தாக்கலில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் அதிகமாக கலந்து கொண்டனர்.

    முன்னதாக வெங்கடேசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் தங்கமீனா தல்லாகுளம் போலீசில் இதுகுறித்து புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் வேட்பாளர் வெங்கடேசன் உள்ளிட்ட சிலர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #LSPolls #Venkatesan

    மக்கள் நீதிமய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் டெல்லியில் எங்கள் கட்சியின் தேசிய தலைவர்களை சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேசினார் என்று கே பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். #kbalakrishnan #kamal #marxistcommunist

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 2 தினங்களில் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். தமிழக பிரச்சனைக்காக பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் தற்போது அதே பா.ஜ.கவுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.

    பிரதமர் நரேந்திரமோடி குஜராத்தில் ரூ.3 ஆயிரம் கோடியில் படேல் சிலையை திறந்து வைத்தார். ஆனால் தமிழகத்தில் கஜா புயல் பாதிப்புக்கு ரூ.300 கோடி மட்டுமே நிதி வழங்கியுள்ளார். தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.

    இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடையும். ஜெயலலிதா தற்போது உயிருடன் இருந்திருந்தால் பா.ஜ.க., பா.ம.க.வுடன் கூட்டணி வைத்திருக்கமாட்டார்.


    மக்கள் நீதிமய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் டெல்லியில் எங்கள் கட்சியின் தேசிய தலைவர்களை சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேசியுள்ளார். அதற்கு தமிழகத்தில் தி.மு.க.வுடன் இணைந்து வலுவான கூட்டணி அமைப்பது என முடிவு செய்துள்ளதால், தங்களுடன் கூட்டணி குறித்து பேச வாய்ப்பில்லை. நட்புடன் இருப்போம் என்று எங்களது கட்சித்தலைவர்கள் அவருக்கு பதில் அளித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலுடன் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்த வேண்டும். அப்படி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட தொகுதிப் பங்கீடு கோரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #kbalakrishnan #kamal #marxistcommunist

    திருவனந்தபுரம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி வீட்டில் பெட்ரோல்குண்டு வீசியது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் என கம்யூனிஸ்டு கட்சியினர் குற்றச்சாட்டியுள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    கம்யூனிஸ்டு ஆட்சி அங்கு அமைந்த பிறகு அரசியல் மோதல்கள் அதிகரித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஆகியவை இடையே நடைபெறும் அரசியல் மோதல்கள் பல இடங்களில் கொலையிலும் முடிந்துள்ளது.

    இந்த நிலையில் சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த பிரச்சினையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் மோதல் உருவாகி உள்ளது. இது பல இடங்களில் வன்முறையாக வெடித்து வருகிறது.

    திருவனந்தபுரம் அருகே காட்டாக்கடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணனின் வீடு உள்ளது. நேற்று இரவு அவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தங்கள் கைகளில் இருந்த பெட்ரோல் குண்டை ராமகிருஷ்ணன் வீட்டின் மீது வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதில் அவரது வீட்டு கதவு, ஜன்னலில் தீப்பிடித்து எரிந்தது.

    சத்தம் கேட்டு வெளியில் வந்த ராமகிருஷ்ணன் பொதுமக்கள் உதவியுடன் தனது வீட்டில் பிடித்த தீயை அணைத்தார். மேலும் இதுபற்றி போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    கம்யூனிஸ்டு நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தகவல் கிடைத்ததும் கட்சி நிர்வாகிகளும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி கம்யூனிஸ்டு கட்சியினர் கூறும் போது சபரிமலை விவகாரத்தில் இந்த பகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எங்கள் கட்சி நிர்வாகிகளை தாக்கி வருகிறார்கள். தற்போது பெட்ரோல் குண்டு வீச்சிலும் ஆர்.எஸ்.எஸ்.தான் ஈடுபட்டு உள்ளது என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள். #tamilnews
    திருவெள்ளறையில் பல்வேறு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    மண்ணச்சநல்லூர்:

    திருவெள்ளறை ஊராட்சிக்கு உட்பட்ட தென்றல் நகர் பகுதியில் குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது. அதேபோல் ,எம்.ஜி.ஆர்.நகர், நேதாஜி நகரில் தார் சாலைகள் அமைக்க வேண்டும், திருவெள்ளறை பேருந்து நிறுத்தம் அருகே நவீன கழிப்பிடம் கட்ட வேண்டும் என்பன மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளாக இருந்து வருகிறது.

    இது போல் பல்வேறு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருச்சி மாவட்டத் துணைத்தலைவர் முருகேசன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    கட்சியின் கிளைச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சிதம்பரம், சுப்பிரமணியன், லிங்கராணி, ரவிச்சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் டைபி அமைப்பின் மாவட்ட பொருளாளர் ஆனைமுத்து நன்றி கூறினார்.
    சென்னை வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். #DMK #Stalin #SitaramYechury
    சென்னை:

    மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக பல்வேறு கட்சி தலைவர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் வீட்டுக்கு இன்று நேரில் சென்றார்.



    அவரை திமுக தலைவர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார். அப்போது, எம்.பி கனிமொழி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இந்த சந்திப்பு குறித்து யெச்சூரி கூறுகையில், தமிழகத்தில் திமுகவுடன் இணைந்து எதிர் வரும் தேர்தலை சந்திக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார். #DMK #Stalin #SitaramYechury
    கருணாஸ், மாணவி ஷோபியா போன்றோர் மீது தமிழக அரசு அடக்குமுறையை கையாள்வதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    திண்டுக்கல்:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு தற்போது தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மேலும் சில இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழக அரசு இந்த திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கருணாசை பழி வாங்க வேண்டும் என்பதற்காகவே பழைய வழக்குகளை கிளறுகின்றனர். அரசை விமர்சிப்பவர்கள் மீது வழக்கு, கைது நடவடிக்கை என பேச்சுரிமை, எழுத்துரிமை, ஜனநாயகம் நசுக்கப்படுகிறது.

    நாக்கை அறுப்பேன் என கூறிய அமைச்சர் மீது நடவடிக்கை இல்லை. தனிப்படையால் தேடப்படும் எச்.ராஜா போலீசார் பாதுகாப்பில் சுற்றி வருகிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கருணாஸ், மாணவி ஷோபியா போன்றோர் மீது அரசு அடக்குமுறையை கையாள்கிறது. நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும். மேலும் ஜாமீன் பெற முடியாமல் தவிக்கும் விசாரணை கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். மணல் திருட்டு, அரசு அனுமதியுடன் தனியார் கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.

    ஆனால் காவல் துறையினர் நியாயமாக போராடும் மாற்றுத் திறனாளிகள் மீது கூட அடக்குமுறையை கையாள்கின்றனர். இதனை அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் மக்களை ஒன்றாக திரட்டி வலிமைமிக்க மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மாநில குழு உறுப்பினர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஊத்தங்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கருத்துரிமை ஜனநாயகம் பாதுகாத்திட தமிழகம் தழுவிய தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கருத்துரிமை ஜனநாயகம் பாதுகாத்திட தமிழகம் தழுவிய தெருமுனை பிரச்சார கூட்டம் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நஞ்சுண்டன், மாவட்ட குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, பாஞ்சாலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலகுழு உறுப்பினர் சுந்தரராஜன் பிரச்சார விளக்கவுரையாற்றினார். 

    இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்க கோரி முதல்வருக்கு மார்க். கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். #vckravikumar

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் மாற்றுக் கருத்துக்கள் தெரிவிக்கும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், எதிர்கட்சியினர் கடுமையாக அச்சுறுத்தலுக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.

    இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தி அச்சுறுத்தலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடாமல் தடுத்திட ரவிக்குமாருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. #vckravikumar

    திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லபட்ட வாலிபர், போலீஸ் காவலில் பலியானது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் நடந்தது.
    முதுகுளத்தூர்:

    முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை தெருவில் வசிக்கும் மாசிலாமணி மகன் மணிகண்டன் (வயது 27).

    இவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு மணிகண்டன் பலியானதாக கூறப்படுகிறது.

    திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லபட்ட வாலிபர், போலீஸ் காவலில் பலியானது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் நடந்தது.

    முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காசிநாத்துரை, தாலுகா செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கூறுகையில், ‘‘ திருட்டு வழக்கில் போலீஸ் விசாரனைக்காக அழைத்து செல்லப்பட்ட மணிகண்டன் இறப்பில் சந்தேகம் இருப்பதால், இறப்பு குறித்து நீதி விசாரணையும், பலியான மணிகண்டன் குடும்பத்திற்கு 30 லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்க வேண்டும்.அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’’, என்றார். #tamilnews
    ×