search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவனந்தபுரம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி வீட்டில் பெட்ரோல்குண்டு வீச்சு
    X

    திருவனந்தபுரம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி வீட்டில் பெட்ரோல்குண்டு வீச்சு

    திருவனந்தபுரம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி வீட்டில் பெட்ரோல்குண்டு வீசியது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் என கம்யூனிஸ்டு கட்சியினர் குற்றச்சாட்டியுள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    கம்யூனிஸ்டு ஆட்சி அங்கு அமைந்த பிறகு அரசியல் மோதல்கள் அதிகரித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஆகியவை இடையே நடைபெறும் அரசியல் மோதல்கள் பல இடங்களில் கொலையிலும் முடிந்துள்ளது.

    இந்த நிலையில் சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த பிரச்சினையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் மோதல் உருவாகி உள்ளது. இது பல இடங்களில் வன்முறையாக வெடித்து வருகிறது.

    திருவனந்தபுரம் அருகே காட்டாக்கடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணனின் வீடு உள்ளது. நேற்று இரவு அவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தங்கள் கைகளில் இருந்த பெட்ரோல் குண்டை ராமகிருஷ்ணன் வீட்டின் மீது வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதில் அவரது வீட்டு கதவு, ஜன்னலில் தீப்பிடித்து எரிந்தது.

    சத்தம் கேட்டு வெளியில் வந்த ராமகிருஷ்ணன் பொதுமக்கள் உதவியுடன் தனது வீட்டில் பிடித்த தீயை அணைத்தார். மேலும் இதுபற்றி போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    கம்யூனிஸ்டு நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தகவல் கிடைத்ததும் கட்சி நிர்வாகிகளும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி கம்யூனிஸ்டு கட்சியினர் கூறும் போது சபரிமலை விவகாரத்தில் இந்த பகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எங்கள் கட்சி நிர்வாகிகளை தாக்கி வருகிறார்கள். தற்போது பெட்ரோல் குண்டு வீச்சிலும் ஆர்.எஸ்.எஸ்.தான் ஈடுபட்டு உள்ளது என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள். #tamilnews
    Next Story
    ×