என் மலர்

  செய்திகள்

  திமுக தலைவர் ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு
  X

  திமுக தலைவர் ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். #DMK #Stalin #SitaramYechury
  சென்னை:

  மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக பல்வேறு கட்சி தலைவர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.

  இந்நிலையில், சென்னை வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் வீட்டுக்கு இன்று நேரில் சென்றார்.  அவரை திமுக தலைவர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார். அப்போது, எம்.பி கனிமொழி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  இந்த சந்திப்பு குறித்து யெச்சூரி கூறுகையில், தமிழகத்தில் திமுகவுடன் இணைந்து எதிர் வரும் தேர்தலை சந்திக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார். #DMK #Stalin #SitaramYechury
  Next Story
  ×