search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manipur"

    • இணையதள முடக்கம் காரணமாக மக்களில் பெரும் பகுதியினர் வன்முறையின் தீவிரத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை.
    • குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர்.

    மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. அதன்பின்னர் வன்முறை வெடித்தது. பல இடங்களில் வன்முறை தாக்குதல்கள் தொடர்வதால், 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பவில்லை. இணையதள சேவை முடக்கப்பட்டது. இதன் காரணமாக நாட்டு மக்களில் பெரும் பகுதியினர் மணிப்பூரில் பரவிய வன்முறையின் தீவிரத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை.

    இதற்கிடையே, மணிப்பூரில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த வீடியோவின் தாக்கம் மணிப்பூரின் சுராசந்த்பூரில் இன்று தீவிரமாக வெடித்தது. மக்கள் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர். வீதி வீதியாக மக்கள் அணிவகுத்துச் சென்று இந்த சம்பவத்தை கண்டித்து முழக்கமிட்டனர். 

    • இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், திடீரென இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    மே 3-ந்தேதி இம்பாலில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின்போது மோதல் உண்டாகி, பின்னர் வன்முறையாக வெடித்தது. வன்முறையின் தொடர்ச்சியாக இந்த பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர் கட்சி தலைவர்கள் மணிப்பூர் மாநில அரசு, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


    இந்நிலையில், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இணையத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். வெறுப்படைந்தேன். இதுபோன்ற கொடூரமான செயலை இனி யாரும் செய்ய நினைக்காத அளவுக்கு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

    இதே போல நடிகைகள் ஊர்மிளா மடோன்கர், ரிச்சா சதா, ரேணுகா சஹானே, நகைச்சுவை நடிகர் வீர்தாஸ் உள்ளிட்ட பலரும் மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதே போல 'மணிப்பூர் வன்முறை', 'போதும் போதும்' போன்ற ஹேஷ்டேக்குகள் பெருமளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.




    • ஊர்வலத்தை பங்குதந்தை அலாய்சியஸ் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார்.
    • சிறுவர்- சிறுமியர், பெண்கள் உள்பட திரளானோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

    ஆறுமுகநேரி:

    மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டி ஆறுமுகநேரியில் கிறிஸ்தவர்கள் இன்று ஊர்வலம் நடத்தினர். ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலயத்தின் சார்பில் நடந்த இந்த ஊர்வலத்தை பங்குதந்தை அலாய்சியஸ் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். ஊர் தலைவர் செல்வன் முன்னிலை வகித்தார். சிறுவர்- சிறுமியர், பெண்கள் உள்பட திரளானோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கத்தோலிக்க கோவில் தெரு மேட்டுவிளை, மேல தெரு உள்பட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகள் மடத்துவிளை பங்குமக்கள் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

    • மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது.
    • மணிப்பூரில் அமித் ஷா பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். நான்கு நாட்கள் பயணமாக நேற்று மணிப்பூர் சென்ற அமித் ஷா, மாநில முதல்வர் பைரென் சிங் மற்றும் மாநில மந்திரிகள், பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

    மாநில உள்துறை மந்திரி நித்யானந்த் ராய், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பாலா, உளவுத்துறை தலைவர் தபன் டேக்கா மற்றும் சில உயர் அதிகாரிகளை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தையின் போது மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது.

    சில தினங்களுக்கு முன் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் சென்றதும், அமித் ஷா மாநிலத்தின் மூத்த அதிகாரிகள், மந்திரிகளை சந்தித்தார். ஜூன் 1 ஆம் தேதி வரை மணிப்பூரில் இருக்கும் அமித் ஷா பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறார்.

    மணிப்பூர் கலவரத்தில் காவல் அதிகாரி உள்பட ஐந்து பேர் கொல்லப்பட்டது, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வீடு தாக்கப்பட்டது மற்றும் காவல் துறை ஆயுத கிடங்கில் இருந்து பயங்கரவாதிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்களை திருடி சென்றது என மாநிலம் முழுக்க கலவர சூழல் நிலவுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இடிபாடுகளில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
    • ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழுவினர் முழு வீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். துபுல் ரெயில் நிலையம் அருகே இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது.

    இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழுவினர் முழு வீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த இடிபாடுகளில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இதுகுறித்து நோனி மாவட்ட ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " துப்புல் யார்டு ரெயில்வே கட்டுமான முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, உயிரிழப்புகள் பதிவாகி வருகிறது. டஜன் கணக்காணவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டதால் மேலும் உயிரிழப்புகள் பதிவாகலாம் என அஞ்சப்படுகிறது.

    நிலைமை மோசமடைந்து வருவதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், ஆற்றின் அருகே வராமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். முடிந்தவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுங்கள். பொதுமக்கள் மேலும், எச்சரிக்கையாக இருக்கவும், மழையின் நிலை மேலும் மோசமடைந்தால் எந்த உதவிக்கும் தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

    இதுகுறித்து மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " துபுல் நிலச்சரிவின் நிலைமையை மதிப்பிடுவதற்கு இன்று அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களை பிரார்த்தினையில் வைப்போம். சம்பந்தப்பட்ட இடத்திற்கு உதவ மருத்துவர்களுடன் ஆம்புலன்ஸ்களும் அனுப்பப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டிருந்தார்.

    மணிப்பூரில் பா.ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற நாகா மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    இம்பால்:

    நாகா மக்கள் முன்னணி கட்சியில் கடந்த சில நாட்களாகவே பல குழப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. நாகாலாந்தில் கட்சிக்குள் நிகழும் பிரச்சினைகளுக்கு பா.ஜனதா தான் காரணம் என்று நாகா மக்கள் முன்னணி கூறி வருகிறது.

    மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபை இடங்கள் உள்ளன. கடந்த 2017-ல் நடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் 28 இடங்களை பெற்றது. இருப்பினும் 21 இடங்களை பெற்ற பா.ஜனதா, 4 இடங்களை பிடித்த நாகா மக்கள் முன்னணி மற்றும் தலா ஒரு இடங்களை வென்ற எல்.ஜே.பி., சுயேட்சை, ஏ.ஐ.டி.சி கட்சிகள் ஆதரவு அளித்து வந்தது. முதல்வராக பா.ஜனதாவை சேர்ந்த என்.பிரேன்சிங் முதல்வாராக பதவி வகித்து வருகிறார்.

    நாகா மக்கள் முன்னணி, மக்களவைத் தேர்தலில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சிக்கு ஆதரவு பிரசாரம் மேற்கொண்டதாக 7 சட்டப்பேரவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது. அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான மனுவையும் சபாநாயகரிடம் அளித்தது. அதேசமயம், 7 சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கட்சித் தலைவர்களும் ராஜினாமா செய்தனர்.

    இந்நிலையில் நாகலாந்து மாநிலம் கோஹிமாவில் நடைபெற்ற நாகா மக்கள் முன்னணி கூட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜனதா அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஆட்சி அமைத்தது முதல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், தங்கள் கட்சிக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றும் நாகா மக்கள் முன்னணி மாநில தலைவரான அவாங்போநெவ்மாய் கூறியுள்ளார்.
    மணிப்பூர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை புயலாக வலுவடைந்தது. புயலில் சிக்கி 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். #ManipurStorm
    இம்பால்:

    மணிப்பூரில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதிலும் சாலைகளில் வெள்ளம் ஓடுகிறது.

    கனமழையால் அங்கு புயல் உருவாகியுள்ளது.  இந்த புயலின் தாக்கத்தால் அங்கு காற்று பலமாக வீசி வருகிறது. இதனால் வீடுகளின் மேற்கூரைகள், சாலைகளில் வைக்கப்பட்டு உள்ள விளம்பர பலகைகள் பறந்து கீழே விழுந்தன.



    இந்நிலையில், மணிப்பூரின் காக்சிங் மற்றும் சுரா சந்த்பூர் மாவட்டங்களில் புயல் தாக்கியதில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மாநிலம் முழுவதிலும் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாநில அரசு மழையில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. #ManipurStorm
    மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மாணவர்களிடையே பேசிய ராகுல் காந்தி, பிரதமர் அலுவலகம் பிரபலப்படுத்தும் அமைச்சரின் அலுவலகமாக மாறியுள்ளது என குற்றம் சாட்டினார். #LSpolls #RahulGandhi #PMModi
    இம்பால்:

    பாராளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

    அதன் ஒருபகுதியாக, மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரான இம்பாலில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

    இம்பாலில் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    உங்களின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை காங்கிரஸ் பாதுகாக்கும் என உறுதியளிக்கிறேன். குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.



    பிரதமர் மோடி குறுக்கு வழியில் ரிசர்வ் வங்கியை கட்டுப்படுத்தி, பணமதிப்பிழப்பை கொண்டு வந்துள்ளார். அவர் விளம்பரத்திற்காகவே எல்லா முடிவுகளையும் எடுக்கிறார். தற்போது பிரதமர் அலுவலகம், பிரபலப்படுத்தும் அமைச்சரின் அலுவலகமாக மாறியுள்ளது.

    பிரதமரின் பல்கலைக்கழக சான்றிதழை இதுவரை எங்களால் பெற முடியவில்லை. பிரதமர் உண்மையிலேயே பல்கலைக்கழகத்துக்கு போய் உள்ளாரா என யாருக்கும் தெரியாது. டெல்லியில் ஆர்டிஐ மூலம் பிரதமரின் பல்கலைக்கழகம் சான்றிதழ் பற்றி கேட்டுள்ளோம். ஆனால் அவர்கள் இதுவரை பதிலளிக்கவில்லை என தெரிவித்தார். #LSpolls #RahulGandhi #PMModi
    உள்ளூர் போட்டியில் விளையாடிய மணிப்பூர் இளைஞர் ஒருவர் மூன்று ஹாட்ரிக்குடன் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். #CoochBeharTrophy #Manipur #RexRajkumarSingh
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் நகரில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட கூச்பெகர் டிராபியில் அருணாசலப்பிரதேசம் மற்றும் மணிப்பூர் அணிகள் மோதின.

    இதில் முதலில் ஆடிய அருணாசல் முதல் இன்னிங்சில் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய மணிப்பூர் அணி 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இந்நிலையில், 16 ரன்கள் முன்னிலையுடன் அருணாசல் இரண்டாவது இன்னிங்சை ஆட தொடங்கியது. மணிப்பூர் வீரர் இடதுகை பந்துவீச்சாளர் ரெக்ஸ் ராஜ்குமார் சிங் (18),  எதிரணியை துல்லியமாக பந்து வீசி திணறடித்தார்.



    இவர் 9.5 ஓவர்கள் வீசி 11 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதில் 3 முறை ஹாட்ரிக் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 6 மெய்டன் ஓவர்களையும் வீசியுள்ளார்.

    இதையடுத்து, அருணாசல் அணி 2வது இன்னிங்சில் 36 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய மணிப்பூர் 7.5 ஓவரில் வெற்றிக்கு தேவையான 55 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #CoochBeharTrophy #Manipur #RexRajkumarSingh
    மணிப்பூர் மாநிலத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது அம்மாநிலத்தின் முதல் மரண தண்டனையாகும். #DeathForChildRapist #Manipur
    இம்பால்:

    மணிப்பூர் மாநிலம் மரம் கவானம் கிராமத்தில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக யாரும் புகார் அளிக்காத நிலையில், போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர்.

    2 நாட்களுக்கு பிறகு டேவிட் என்ற 21 வயது இளைஞனை போலீசார் கைது செய்தனர். அப்போதுதான் அதிர்ச்சி தரும் தகவல் வெளியானது. டேவிட்டின் பெற்றோர் கொல்லப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு சென்று பணத்தை கொடுத்து போலீசாரிடம் சென்றால் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

    ஆனால், போலீசார் துணிச்சலாக செயல்பட்டு சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்து, வழக்கில் 21 பேரை சாட்சிகளாக சேர்த்து அவர்களிடம் வாக்குமூலம் பெற்றது ஆகியவற்றை செய்தனர். எனினும், சாட்சிகள் தங்களது உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாக பல முறை பல்டி அடித்தனர்.

    ஆனால், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு கொடுத்து வழக்கை சிறப்பாக நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த சிறப்பு நீதிபதி, டேவிட் குற்றவாளி என்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பளித்தார்.

    சுதந்திரத்திற்கு பிறகு மணிப்பூரில் வழங்கப்பட்டுள்ள முதல் மரண தண்டனை இதுவாகும். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களே புகாரளிக்காமல் பயந்து ஒதுங்கிய நிலையில், போலீசார் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளனர்.
    அவதூறான செய்திகள் மற்றும் வீடியோக்களை பரவுவதை தடுக்கும் வகையில் மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் அடுத்த 5 தினங்களுக்கு இண்டர்நெட்சேவை நிறுத்தப்பட்டுள்ளது. #Internet
    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தின் உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ரகுமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவியதன் மூலம் அடிதடி மற்றும் வன்முறைகள் ஏற்பட்டன. இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது.

    எனவே, இதுபோன்ற அவதூறான தகவல்கள் மற்றும் வீடியோக்கள் பரவுவதை தடுக்கும் வகையில் இன்று முதல் அடுத்த ஐந்து தினங்களுக்கு மொபைல் இண்டர்நெட்சேவை தடை செய்யப்பட்டு உள்ளது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்ப்டுகிறது என தெரிவித்துள்ளது. #Internet 
    மணிப்பூர் மாநிலத்தின் இந்தியா - மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் இன்று மாலை 4.4 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. #ManipurEarthquake

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தின் இந்தியா - மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் இன்று மாலை 4:37 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    பூமிக்கடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருப்பதாக இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை. #ManipurEarthquake
    ×