search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு- மீட்பு பணிகள் தீவிரம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு- மீட்பு பணிகள் தீவிரம்

    • இடிபாடுகளில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
    • ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழுவினர் முழு வீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். துபுல் ரெயில் நிலையம் அருகே இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது.

    இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழுவினர் முழு வீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த இடிபாடுகளில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இதுகுறித்து நோனி மாவட்ட ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " துப்புல் யார்டு ரெயில்வே கட்டுமான முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, உயிரிழப்புகள் பதிவாகி வருகிறது. டஜன் கணக்காணவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டதால் மேலும் உயிரிழப்புகள் பதிவாகலாம் என அஞ்சப்படுகிறது.

    நிலைமை மோசமடைந்து வருவதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், ஆற்றின் அருகே வராமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். முடிந்தவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுங்கள். பொதுமக்கள் மேலும், எச்சரிக்கையாக இருக்கவும், மழையின் நிலை மேலும் மோசமடைந்தால் எந்த உதவிக்கும் தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

    இதுகுறித்து மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " துபுல் நிலச்சரிவின் நிலைமையை மதிப்பிடுவதற்கு இன்று அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களை பிரார்த்தினையில் வைப்போம். சம்பந்தப்பட்ட இடத்திற்கு உதவ மருத்துவர்களுடன் ஆம்புலன்ஸ்களும் அனுப்பப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×