என் மலர்
நீங்கள் தேடியது "3 killed"
- சிதம்பரம் அடுத்த கொத்தட்டை மெயின் ரோட்டில் சென்ற போது, எதிரில் வந்த டிப்பர் லாரி கார் மீது மோதியது.
- இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டிரைவர் சத்தியசீலன் உயிரிழந்தார்.
கடலூர்:
நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த கீழ்பெரும்பள்ளம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது 38). இவர் சொந்தமாக டிராவல்ஸ் வைத்து கார் ஓட்டி வருகிறார். சென்னையில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேரை ஏற்றிக்கொண்டு சீர்காழி அடுத்த அக்கரைப்பேட்டைக்கு நேற்று இரவு கிளம்பினார். சிதம்பரம் அடுத்த கொத்தட்டை மெயின் ரோட்டில் சென்ற போது, எதிரில் வந்த டிப்பர் லாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டிரைவர் சத்தியசீலன் உயிரிழந்தார். காரில் வந்த 5 பேர் படுகாயமடைந்தனர்.
அவ்வழியே சென்றவர்கள் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே விக்ராந்த் (6), நிகல்யா (3) ஆகிய 2 குழந்தைகள் இறந்தனர். படுகாயமடைந்த 3 பேருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரியை சிதம்பரம் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்க பள்ளியில் வாலிபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உள்பட 22 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- லாஸ் ஏஞ்சல்சின் பாய்ல் ஹைட்ஸ் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அங்கு திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸ்:
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்க பள்ளியில் வாலிபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உள்பட 22 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு ஆயத்தமாகி வருகிறது. ஆனாலும் அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தபடியே இருக்கிறது.
இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள். லாஸ் ஏஞ்சல்சின் பாய்ல் ஹைட்ஸ் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அங்கு திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தது தெரிய வந்தது. படுகாயம் அடைந்த 5 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்தும், துப்பாக்கியால் சுட்டவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
திண்டிவனம் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில் வசித்து வருபவர்கள் ராஜி. அதே பகுதியில் வெல்டிங் கடை வைத்து வந்துள்ளார். அவருடன் மனைவி லதா, மகன் கவுதம் காவேரிபட்டினத்தில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு அவர்களது வீட்டின் ஒரு அறையில் இருந்த ஏ.சி. எந்திரத்தில் மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜி, மனைவி லதா, மகன் கவுதம் ஆகிய மூவரும் உடல்கருகி உயிரிழந்துள்ளனர்.
ஏ.சி.யில் இருந்து மின் கசிந்த கியாஸ் அவர்கள் 3 பேருக்கும் எமனாக மாறி விட்டது. தூக்கத்தில் இருந்ததால் கியாஸ் கசிந்து இருப்பது அவர்களுக்கு தெரியவில்லை. மயக்க நிலையிலேயே 3 பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர்.
ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காத்மண்டு:
நேபாளத்தில் லுகியா விமான நிலையத்தில் இன்று ஒரு குட்டி விமானம் புறப்பட்டது அப்போது கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்தில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்றது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஹெலிகாப்டர்கள் மீது மோதி நொறுங்கியது.
இந்த விபத்தில் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டரின் இணை விமானி துங்கானா, உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராம்பகதூர் காட்கா ஆகியோர் அதே இடத்தில் பலியாகினர்.
படுகாயம் அடைந்த மற்றொரு உதவி சப்-இன்ஸ்பெக்டர் ருத்ரா பக்தூர் ஸ்ரேஸ்தா காத்மண்டுவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர்கள் தவிர ஹெலிகாப்டரில் அமர்ந்து இருந்த விமான கேப்டன் ஆர்.பி. ரொசாயா, கேப்டன் சேட் குரங் ஆகியோர் காயம் அடைந்தனர். #nepalplanecrash
திருவண்ணாமலை அருகே கொண்டம் பகுதியில், மாடுகளை ஏற்றிக்கொண்டு இன்று மதியம் ஒரு மினி லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய மினி லாரி, சிறிது நேரத்தில் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது.
இதில், மினி லாரியின் முன்பகுதி நொறுங்கியது. அதில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #MiniLorryAccident #TVMalai
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் தாதி செர்லா கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தம்(39), இவரது மனைவி பத்மாவதி (32). இவர்களுக்கு மகேஷ் குமார் (11) திரிஷா (6) என்ற மகன், மகள் உள்ளனர்.
புருஷோத்தம் திருப்பதியில் உள்ள பி.டி.ஆர் காலனியில் தங்கியிருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்கும் கூடத்தில் ஒப்பந்த ஊழியராக கடந்த 7 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
அவர் பலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். பணத்தை திருப்பி தராததால் கடன் கொடுத்தவர்கள் புருஷோத்தம் வீட்டிற்கு வந்து தொல்லை கொடுத்து, கொடுத்த கடனை திருப்பி கேட்டனர்.
இதனால் மனமுடைந்த புருஷோத்தம் வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணினார். தன்னுடைய மகன், மகளை தூக்கில் தொங்கவிட்டு கணவனும், மனைவியும் தூக்கில் தொங்கியுள்ளனர். அப்போது திரிஷா வலியால் கூச்சலிட்டார்.
திரிஷாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து வீட்டினுள் ஓடிவந்தனர். அப்போது அங்கு 4 பேரும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தூக்கில் தொங்கியவர்களை மீட்டனர்.
ஆனால் புருஷோத்தம், அவரது மனைவி பத்மாவதி, மகன் மனோஜ்குமார் ஆகியோர் இறந்துவிட்டனர். திரிஷா மட்டும் உயிர் தப்பினார். அவரை மீட்டு ரூயா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, தகவல் அறிந்த திருப்பதி எஸ்.பி. அன்புராஜன், திருப்பதி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து திருப்பதி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தின் ஐசால் மாவட்டத்தில் இன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. சீமாபாக் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள சில வீடுகள் மண்ணில் புதைந்தன. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக ஐசால் மாவட்ட எஸ்.பி. தெரிவித்தார்.
அதேசமயம், நிலச்சரிவு ஏற்பட்டபோது காணாமல் போனவர்களில் மேலும் சிலர் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. #MizoramLandslide