என் மலர்
நீங்கள் தேடியது "லாரி மோதி விபத்து"
- வேலைக்கு சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 37). வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி நர்மதா இவர் வழூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 1 வயதில் இசை செல்வன் என்ற குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சசிகுமார் நேற்று காலை வேலைக்கு சென்று இருந்தார். பின்னர் வேலை முடிந்து மாலை வீட்டுக்கு செல்வதற்காக தனது பைக்கில் ஆரணி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே லாரி சசிகுமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சசிகுமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் லாரியை நடுரோட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதையடுத்து தகவல் அறிந்ததும் வந்தவாசி தெற்கு போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்றனர்.
பின்னர் சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
- பாலத்தை கடக்க முயன்ற போது விபரீதம்
- போக்குவரத்து பாதிப்பு
ராணிப்பேட்டை:
சென்னையில் இருந்து ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்திற்கு பெயிண்டு பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது.
இந்த லாரி ராணிப்பேட்டை - பொன்னை சாலையில் அக்ராவரம் ரெயில்வே தரைப் பாலத்தை கடக்க முயன்றது.
அப்போது கனரக வாகனங்கள் செல்லாத வகையில் ரெயில்வே துறையால் பாலத்திற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீது வேகமாக மோதியது.
இதில் தரையில் புதைத்து வைக்கப்பட் டிருந்த அடிப்பகுதி பெயர்ந்து வெளியே வந்தது. லாரியும் தடுப்பு கம்பியில் சிக்கிக் கொண்டது. டிரைவர் லாரியை பின்னால் நகர்த்த எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சாலையில் நடந்து சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு அருகே உள்ள கோழிப்புலியூர் கூட்ரோடு மேலதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 68). இவர், அந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்ற போது, பின்னால் வந்த லாரி திடீரென அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேத்துப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தேசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளிக்கு சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள அழகுசேனை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணா மலை (வயது 42). இவர்து மகள்கள் ஜெயஸ்ரீ (16) பவித்ரா, (14) இவர்கள் இருவரும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். மகள்களை பள்ளிக்கு தினமும் மொபட்டில் அழைத்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் பள்ளிக்கு செல்வதற்காக மொபட்டில் மகள்களை அமர வைத்து அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மினி லாரி திடீரென மொபட் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவர் கண்முன்பே பரிதாபம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா களக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி, கூலி தொழிலாளி. இவரது மனைவி தேவிபாலா (வயது 28), இவர்களின் மகன் தர்ஷன் (3).
இந்த நிலையில் கணபதி, மனைவி, மகனுடன் மோட் டார்சைக்கிளில் நேற்று திரு வண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் உள்ள உறவி னர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந் தார்.
தூசி அருகே அய்யங்கார் குளம் கூட்டுரோட்டில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்தலாரி மோட்டார்சைக்கிள் மீது உரசியது. இதில் 3 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.
அப்போது கணவர் கண் முன்பே தேவிபாலா தலை மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று தேவி பாலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
- இயைடுத்து போலீசார் லாரி டிரைவரான பிரதீப்குமாருக்கு அபராதம் விதித்தனர்.
சூலூர்,
சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் 5 பேர் ஒரு வேனில் உதவி கேட்டு பயணம் செய்தனர். அந்த வேன் சூலூரில் இருந்து அவினாசி சாலை செல்லும் சாலையை நோக்கி சென்றுகொண்டிருந்தது.
அப்போது முத்துக்கவுண்டன்புதூர் பெட்ரோல் பங்க் அருகே செல்லும் போது வேனுக்கு பின்னால் அதே திசையில் வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியது. இதில் லாரியின் மேலே உள்ள கிரில் கழன்று வேனில் இருந்த மாணவர்கள் மீது விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
ஒரு மாணவருக்கு முதுகுப் பகுதியில் சீராய்ப்பு காயம் ஏற்பட்டது. சூலூர் அரசு ஆஸ்பத்திரியில் மாணவர்கள் சிகிச்சை பெற்று சென்றனர்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் வேன் மற்றும் லாரி டிரைவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். லாரி டிரைவரான சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் (28) மது அருந்தியபடி வாகனம் ஓட்டியது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் பிரதீப் குமாருக்கு அபராதம் விதித்தனர். மேலும் மாணவர்களுக்கு உதவி செய்த வேன் டிரைவர் தர்மபுரி பாப்பிரெட்டி பகுதியைச் சேர்ந்த மோகனை (36) இனி மேற்கொண்டு இவ்வாறு சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி செல்லக்கூடாது என எச்சரிக்கை செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
- டிரைவர் கைது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சி லாரி ஷெட் பகுதியை சேர்ந்தவர் கவியரசு என்பவரின் மனைவி வசந்தி (வயது 42).
இவர் காலையில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 11ம் தேதி அதிகாலை சாலை நகர் பகுதி அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த லாரி ஒன்று முன்னே சென்ற காரை முன்ந்தி செல்ல முயன்ற போது திடீரென வசந்தி மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் வசந்தியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
பின்னர் இதுகுறித்து கவியரசு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து மதுரை வாடிப்பட்டி அடுத்த அவாடமருதூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- லாரி டிரைவரின் கட்டுபாட்டை இழந்து வண்டி தாறுமாறாக ஓடியது.
- சாலையோரம் இருந்த 7 மின்கம்பங்கள் மீது அடுத்தடுத்து மோதியது
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அரூரில் இருந்து சேலத்திற்கு மரக்கட்டைகள் பாரம் ஏற்றி கொண்டு ஒரு லாரி நேற்று புறப்பட்டது.
இந்த லாரி பாப்பிரெட்டிப்பட்டி அருகே அலமேலுபுரம் பஸ் நிறுத்தம் வழியாக வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுபாட்டை இழந்து வண்டி தாறுமாறாக ஓடியது. இதில் சாலையோரம் இருந்த 7 மின்கம்பங்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
இறுதியில் அந்த வழியாக அமைக்கப்பட்டிருந்த ஒரு டிரான்ஸ்பார்மர் மீது மோதி லாரி நின்றது. இந்த விபத்தின் போது பொதுமக்கள் நடமாட்டம் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து உடனே தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து மின்சார வாரிய ஊழியர்களின் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்தபோது அதிக மரகட்டைகள் பாரத்தை லாரியில் ஏற்றியதால் வண்டி கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியதால் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 7 மின்கம்பங்கள், ஒரு டிரான்ஸ்பார்மர் ஆகியவை சேதமடைந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.13 லட்சம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் அதிக பாரம் ஏற்றிய லாரி டிரைவர், வண்டியின் உரிமையாளர் ஆகிய 2 பேரும் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.
- 12 டன் அளவில் மாங்காய்கள் ஏற்றிக்கொண்டு, கிருஷ்ணகிரி நோக்கி, ஜூஸ் கம்பெனிக்கு சென்றது.
- காப்பர் கம்பி பாரம் ஏற்றிச் சென்ற ஒரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
ஓசூர்,
பெங்களூரில் இருந்து மினி லாரியில் 12 டன் அளவில் மாங்காய்கள் ஏற்றிக்கொண்டு, மினி லாரி ஒன்று, ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி நோக்கி, அங்குள்ள ஒரு ஜூஸ் கம்பெனிக்கு சென்றது. வழியில், ஓசூர் அருகே காந்திநகர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் சென்றபோது, முன்னால், காப்பர் கம்பி பாரம் ஏற்றிச் சென்ற ஒரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், மினி லாரியின் இடது புறம் பலத்த சேதமடைந்து, அப்பளம் போல் நசுங்கியது. மேலும் லாரியில் இருந்த மாங்காய்கள் சாலையில் கொட்டி சிதறின. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதிக்கு சென்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர். அதனைத்தொடர்ந்து ஜேசிபி வாகனம் வரவழைத்து அதன் மூலம் சாலையில் கொட்டி கிடந்த மாங்காய்களை அப்புறப்படுத்தினர்.
இதில் வாகனங்களின் சக்கரங்கள் ஏறி சென்றதில் மாங்காய்கள் அதிக அளவில் சேதமானது. அதேபோல சாலையில் சென்ற பொதுமக்கள் சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்தி கீழே கொட்டி கிடந்த மாங்காய்களை அள்ளி சென்றனர்.
இந்த விபத்தின் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போலீசார் போக்குவரத்தை ஒழுங்கு படுத்திய பின்னர் நிலைமை சீரானது.
- சம்பவம் இடத்திலேயே இறந்தார்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் பழையபேட்டை சேர்ந்தவர் லிங்கப்பன் இவரது மகன் சதீஷ் சர்மா (வயது 30).
இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.
இதில் தனது திருமணம் ஏற்பாடுகளை செய்வதற்காக சதீஷ்சர்மா கடந்த 15 நாட்கள் முன்பு, விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சதீஷ் சர்மா தனது பைக்கில் பச்சூர் ரெயில்வே கேட் அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது குப்பம் பகுதியில் இருந்து காய்கறிகள் ஏற்றிவந்த மினி லாரி பைக் மீது மோதியது.
படுகாயமடைந்த அவர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்துபோலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் இவரது மகன் வெங்கடேஷ் (வயது 31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 4 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை :
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் சாம கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் மனைவி வளர்மதி (வயது 40), கோவிந்தராஜ் (34), குணசேகரன் (28), அசோக் மனைவி பிரியா (23) ஆகியோர் பச்சூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்கின்றனர்.
நேற்று செங்கல்கள் ஏற்றிக் கொண்டு வெலக்கல்நத்தம் பகுதிக்கு டிராக்டரில் சென்றார். வண்டியை அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் ஓட்டி ெசன்றார்.
செங்கலை இறக்கிவிட்டு வீடு திரும்பிய போது சுண்ணாம்புகுட்டை கிராமம் அருகே சென்ற போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டிராக்டரில் பயணித்த 4 பேரும் உயிர் தப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சை க்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து நாட்டறம்பள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய தப்பி ஓடிய கண்டெய்னர் லாரி டிரைவர் தேடி வருகின்றனர்.
- சிதம்பரம் அடுத்த கொத்தட்டை மெயின் ரோட்டில் சென்ற போது, எதிரில் வந்த டிப்பர் லாரி கார் மீது மோதியது.
- இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டிரைவர் சத்தியசீலன் உயிரிழந்தார்.
கடலூர்:
நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த கீழ்பெரும்பள்ளம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது 38). இவர் சொந்தமாக டிராவல்ஸ் வைத்து கார் ஓட்டி வருகிறார். சென்னையில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேரை ஏற்றிக்கொண்டு சீர்காழி அடுத்த அக்கரைப்பேட்டைக்கு நேற்று இரவு கிளம்பினார். சிதம்பரம் அடுத்த கொத்தட்டை மெயின் ரோட்டில் சென்ற போது, எதிரில் வந்த டிப்பர் லாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டிரைவர் சத்தியசீலன் உயிரிழந்தார். காரில் வந்த 5 பேர் படுகாயமடைந்தனர்.
அவ்வழியே சென்றவர்கள் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே விக்ராந்த் (6), நிகல்யா (3) ஆகிய 2 குழந்தைகள் இறந்தனர். படுகாயமடைந்த 3 பேருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரியை சிதம்பரம் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






