search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மீது  மாங்காய் பாரம் ஏற்றிச்சென்ற மினி லாரி மோதி விபத்து
    X

    விபத்தில் சிக்கிய லாரியில் இருந்த மாங்காய்கள் சாலையில் சிதறி கிடப்பதை படத்தில் காணலாம்.

    லாரி மீது மாங்காய் பாரம் ஏற்றிச்சென்ற மினி லாரி மோதி விபத்து

    • 12 டன் அளவில் மாங்காய்கள் ஏற்றிக்கொண்டு, கிருஷ்ணகிரி நோக்கி, ஜூஸ் கம்பெனிக்கு சென்றது.
    • காப்பர் கம்பி பாரம் ஏற்றிச் சென்ற ஒரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

    ஓசூர்,

    பெங்களூரில் இருந்து மினி லாரியில் 12 டன் அளவில் மாங்காய்கள் ஏற்றிக்கொண்டு, மினி லாரி ஒன்று, ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி நோக்கி, அங்குள்ள ஒரு ஜூஸ் கம்பெனிக்கு சென்றது. வழியில், ஓசூர் அருகே காந்திநகர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் சென்றபோது, முன்னால், காப்பர் கம்பி பாரம் ஏற்றிச் சென்ற ஒரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில், மினி லாரியின் இடது புறம் பலத்த சேதமடைந்து, அப்பளம் போல் நசுங்கியது. மேலும் லாரியில் இருந்த மாங்காய்கள் சாலையில் கொட்டி சிதறின. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதிக்கு சென்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர். அதனைத்தொடர்ந்து ஜேசிபி வாகனம் வரவழைத்து அதன் மூலம் சாலையில் கொட்டி கிடந்த மாங்காய்களை அப்புறப்படுத்தினர்.

    இதில் வாகனங்களின் சக்கரங்கள் ஏறி சென்றதில் மாங்காய்கள் அதிக அளவில் சேதமானது. அதேபோல சாலையில் சென்ற பொதுமக்கள் சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்தி கீழே கொட்டி கிடந்த மாங்காய்களை அள்ளி சென்றனர்.

    இந்த விபத்தின் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போலீசார் போக்குவரத்தை ஒழுங்கு படுத்திய பின்னர் நிலைமை சீரானது.

    Next Story
    ×