search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்கம்பங்கள் மீது லாரி மோதி விபத்து
    X

    மின்கம்பங்கள் மீது லாரி மோதி விபத்து

    • லாரி டிரைவரின் கட்டுபாட்டை இழந்து வண்டி தாறுமாறாக ஓடியது.
    • சாலையோரம் இருந்த 7 மின்கம்பங்கள் மீது அடுத்தடுத்து மோதியது

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அரூரில் இருந்து சேலத்திற்கு மரக்கட்டைகள் பாரம் ஏற்றி கொண்டு ஒரு லாரி நேற்று புறப்பட்டது.

    இந்த லாரி பாப்பிரெட்டிப்பட்டி அருகே அலமேலுபுரம் பஸ் நிறுத்தம் வழியாக வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுபாட்டை இழந்து வண்டி தாறுமாறாக ஓடியது. இதில் சாலையோரம் இருந்த 7 மின்கம்பங்கள் மீது அடுத்தடுத்து மோதியது.

    இறுதியில் அந்த வழியாக அமைக்கப்பட்டிருந்த ஒரு டிரான்ஸ்பார்மர் மீது மோதி லாரி நின்றது. இந்த விபத்தின் போது பொதுமக்கள் நடமாட்டம் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து உடனே தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து மின்சார வாரிய ஊழியர்களின் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்தபோது அதிக மரகட்டைகள் பாரத்தை லாரியில் ஏற்றியதால் வண்டி கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியதால் விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 7 மின்கம்பங்கள், ஒரு டிரான்ஸ்பார்மர் ஆகியவை சேதமடைந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.13 லட்சம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் அதிக பாரம் ஏற்றிய லாரி டிரைவர், வண்டியின் உரிமையாளர் ஆகிய 2 பேரும் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    Next Story
    ×